பழமையான ஸ்ரீ சொர்ணவிலாஸ் லாலா மிட்டாய் கடை | Sri Sornavilas Lala Candy Store | Hello Madurai

Описание к видео பழமையான ஸ்ரீ சொர்ணவிலாஸ் லாலா மிட்டாய் கடை | Sri Sornavilas Lala Candy Store | Hello Madurai

1980ல் மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் ஸ்ரீ சொர்ணவிலாஸ் லாலா மிட்டாய் கடை. இன்றளவும் இந்த கடையில் மரத்தில் ஆன கண்ணாடி பெட்டி மற்றும் தகரத்தில் ஆன கண்ணாடி ஆகியவை பழமையான முறையில் காரங்கள் நிரப்பப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.


ஸ்வீட் மிகவும் ருசியாக இருக்கும். அன்றைய காலத்தில் இருந்து இன்றைய காலம் வரை தரம் மாறாமல் இருப்பதற்கு ஒரே காரணம் இவர்களின் ஸ்வீட் மற்றும் காரத்திற்கு தேவையான மாவுகளை அவர்களே அரைத்துக் கொள்வதும், சுத்தமான எண்ணெய், நெய் பயன்படுத்துவதால் ஆகும்.


இங்கு ஸ்வீட் பிரிவில் அல்வா, பாதுஸா, சோன்பப்படி, மைசூர் பாகு, லட்டு ஆகியவையும், கார வகையில், காராச் சேவு, மசால் கடலை, ஓமபொடி மிச்சர் , உருளைக் கிழங்கு சிப்ஸ் ஆகியவையும் ஸ்பெஷல்.

41 ஆண்டுகளாக இந்த ஸ்வீட் ஸ்டாலை நடத்தி வரும் திரு. வெள்ளைச்சாமி அவர்கள், ஆரம்ப காலத்தில் அவரே ஸ்வீட் செய்து வியாபாரம் செய்துள்ளார். படிப்படியாக முன்னேறி தரம் மாறாமல் இன்றும் தனக்கென ஒரு ருசியான ரசிகர்களை உருவாக்கி வைக்கும் அளவிற்கு முன்னேறி உள்ளார்.

41 ஆண்டுகள் ஒரு தொழிலை நடத்துவது என்பது அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் மிகச் சவாலான விசயம் ஆகும். நமது கேள்விக்கு அளவாகவே பதில் கூறிய திரு. வெள்ளைச்சாமி அவர்கள் தனது அனுபவம் பலவற்றை மைக்கிற்கு பின்னால் பேசியுள்ளார்.


அந்த காலத்தில் பல்வேறு ஊர்களுக்குச் சென்று அங்குள்ள ஸ்வீட் கடைகளில் உள்ள இனிப்பு, காரங்களை சுவைத்துப் பார்த்து அதில் உள்ள நிறை குறைகளை கண்டறிந்து தான் செய்யும் ஸ்வீட் மற்றும் காரத்தில் நிவர்த்தி செய்துள்ளார்,.


தரமும், உழைப்பும் எப்பொழுதும் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி கொள்ளும் என்பதற்கு மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள ஸ்ரீ சொர்ணவிலாஸ் லாலா மிட்டாய் கடை சிறந்த எடுத்துக்காட்டு. இந்த வழியாக வந்தால் ஒரு முறை வாங்கி சுவைத்துப் பாருங்கள், அந்த காலத்து கை பக்குவம் நிச்சயமாக தென்படும்.


மேலும் இந்த ஸ்வீட் ஸ்டாலில் சாப்பிட்ட அனுபவம் உள்ளவர்கள் உங்களது கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள். ஷேர் செய்து பலரும் இதை அறியச் செய்யுங்கள்.

மதுரையில் இதுபோல் பழமையான கடைகள் உங்களுக்கு தெரிந்தால் கீழே குறிப்பிடுங்கள். நாங்கள் அதை நிச்சயமாக எடுத்து பதிவு செய்கின்றோம்.

நன்றிகள் !!


_________________________________________________________
இதுபோல் உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh - 95 66 53 1237. (Whatsapp)
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

💓 App Link: https://play.google.com/store/apps/de...

💓 Facebook :  / maduraivideo  

💓web site :www.hellomaduraitv.com

💓web site :www.hellomadurai.in

💓web site :www.tamilvivasayam.com

💓 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________

Комментарии

Информация по комментариям в разработке