ஶ்ரீ ராமாயணம் ஆராய்ச்சி - பாகம் 1

Описание к видео ஶ்ரீ ராமாயணம் ஆராய்ச்சி - பாகம் 1

ஶ்ரீ ராமாயணம் ஆராய்ச்சி - பாகம் 1
---------------------------------------------------------
ஶ்ரீ ராமாயணம் குறித்து பலர் "அறிவியல் ஆராய்ச்சி" "வரலாற்று ஆராய்ச்ச்" செய்கின்றனர். அவர்கள், ஶ்ரீ ராமாயணத்தை ஒரு கதை புத்தகமாக பார்க்கின்றனர்.

ஶ்ரீ ராமாயணம் என்பது ஸநாதன தர்மிகளுக்கு வேதத்தையும் விட உயர்ந்தது. எப்படி வேதம் அநாதியோ அதே போலத்தான் ஶ்ரீ ராமாயணமும்.

ஶ்ரீ ராமனின் அவதார நோக்கம், ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டுவது. ஶ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தினர், விபீஷண சரணாகதியே ஶ்ரீ ராமனின் நோக்கு என்பர்.

எப்படி ஒரு ஜீவாத்மா பரதன, லக்ஷ்மண சத்ருக்னர்களைப் போல பெருமானுக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று காட்ட வந்தது ஶ்ரீ ராமாயணம்.

எப்படி சீதா மாதா ஶ்ரீ ராமனின் திருக்கைகளை எதிர்ப்பார்த்து இருந்தாளோ அதே போல ஜீவகோடிகள் வாழ் வேண்டும் என்று காட்ட வந்தது ஶ்ரீ ராமாயணம்.

ஒரு ஆசார்யனின் ஏற்றத்தை அனுமனின் மூலம் உலகிற்கு உணர்ந்த வந்தது ஶ்ரீ ராமாயணம்.

இதை எல்லாம் விடுத்து ஶ்ரீ ராமபிரானெ என்று பிறந்தான் என்று அறிவியல்/வரலாற்று ஆராய்ச்சியில் இறங்கி, வால்மீகி மஹரிஷி, வ்யாச பகவான் முதலியோரை இழிவு படுத்தும் வகையில் சிலர் நடக்கின்றனர் என்பது வேடிக்கையாக இருக்கிறது.

இந்த ஆராய்ச்சியாளர்கள், எபப்டி நம் இதிஹாச புராணங்களில் தங்களுக்கு வேண்டிய பாகங்களை எடுத்துக் கொண்டு, மற்ற பாகங்களை புறந்தள்ளி தனக்கு தோன்றியதை சொல்லிக் கொண்டு திரிகின்றனர் என்பது வெகு சிலருக்கு புரியும்.

ஆராய்ச்சிகளை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அந்த ஆராய்ச்சிகள் ரிஷிகள் சொன்ன ஒவ்வொரு சொல்லுக்கும் வலு சேர்க்க வேண்டுமே ஒழிய அந்த ரிஷி வாக்கியத்தில் ஒரே ஒரு அக்ஷரத்தை (எழுத்தை) கூட பொய் என்று சொல்வதாக இருந்தால் அந்த ஆராய்ச்சி ஆராய்ச்சியே அன்று, அது அதளபாதாளம் என்பதை வெகு சிலரே உணர்கின்றனர்.

அந்த ஒரு சிலரில் Dr. எம். எல். ராஜா அவர்கள் ஒருவர்.

இவருடன் கலந்துறையாடல் மனதுக்கு நிம்மதியாக இருந்தது.

உங்களுடன் பகிர்கிறேன்

ஶ்ரீமதே ராமாநுஜாய நம:
ஜெய் ஶ்ரீ ராம்!

Комментарии

Информация по комментариям в разработке