புழலில் திருமூலர் வணங்கிய சிவ ஸ்தலம்

Описание к видео புழலில் திருமூலர் வணங்கிய சிவ ஸ்தலம்

திருமந்திரம் அருளிய திருமூலர் வணங்கிய சிவத்தலம்.

மனக்குறை நீக்கும் வைத்தியர் திருமூலநாதர்.
திருமூலநாதர் சொர்ணாம்பிகை கோவிலுக்கு சென்னை பிராட்வேயில் இருந்து செங்குன்றம் பஸ்சில் ஏறி, புழல் மத்திய சிறைச்சாலை பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தால் இறை தரிசனத்தை காண முடியும். கோயம்பேட்டில் இருந்தும், மாதவரம், மூலக்கடை, பெரம்பூரில் இருந்தும் பஸ்கள் இருக்கிறது.

சித்தர்கள், நாயன்மார்கள் வணங்கி சென்ற சிவஸ்தலங்களுக்கு செல்வதும், உள்ளத்தால் இறைவனை வழிப்பாடுவதும், அத்தகைய திருத்தலங்களுக்கு வாழ்வில் ஒருமுறையாவது தரிசனம் செய்வதையும் உறுதி செய்துக்கொள்வது சாலவும் நன்று.

கோவிலுக்குள் சென்றாலே முதலில் நம் மனத்திற்குள் அமைதி தானாகவே குடி கொண்டு விடும். இதனை இந்த கோவிலுக்கு நீங்கள் வரும் போது உணர முடியும்.
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்...
பெரியார்கள், ஆன்றோர்கள் நமக்கு அருளிய வாக்கு. நம் முன்னோர்கள் இதை கூற என்ன காரணம்?. இப்படி நமக்குள் தோன்றும் பல கேள்விகளுக்கு விடை காண்பதே உள்ளத்து ஆன்மிகம்.
ஆன்மிகம் என்றாலே உள்ளம் சார்ந்ததது தானே. நம் உள்ளம் எப்போது கலங்குகிறதோ? அந்த நொடியே, உள்ளம் இறைவன் சந்நதியை நாட தொடங்கி விடுகிறது.
சின்ன விஷயங்தாங்க, நமக்கு எதாவது கஷ்டம் என்றால் மன நிம்மதிக்கு நண்பர்களிடம், உறவினர்களிடம் மனம் விட்டு பேசுவோம், பக்கத்து தெருவில் இருக்கும் நண்பரை சந்திக்க செல்வோம். மனங்கள் பரிமாறும்போது, நிம்மதியும், தெளிவும் கிடைக்கும். இதுதான் ஆன்மிகம்.
இங்கே இறைவன் எங்கு வருகிறான் என்று கேட்கலாம். யாரிடமும் பகிர முடியாத விஷயங்களை, உள்ள குமறல்களை எடுத்து வைக்கும் நண்பனாக இறைவன் இங்கு வருகிறான்.
இறைவன் என்ற நண்பனை தேடி பக்கத்து தெருவில் உள்ள அவன் ஆலயம் செல்கிறோம். அவன் முகம் பார்த்து நிசத்தமாக மனதோடு உரையாடி, மனக்குறைகளை நீக்கி, நாம் வீடு தேடி வந்து சேர்கிறோம். அதனால் பெரியோர்கள் கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள்.

என் மன உலகம் ஆன்மிக பாதையை நோக்கி பயணிக்க தொடங்கியிருக்கிறது. உங்கள் ஆதரவுடன்...
---என்மன உலகம்
கடையம் ஆனந்த்

Комментарии

Информация по комментариям в разработке