வீட்டு பாலுக்கு வளர்க்கலாம்🐃 புங்கனூர் குட்டை மாடு 🐂 | Hello Madurai | App | TV | FM | Web

Описание к видео வீட்டு பாலுக்கு வளர்க்கலாம்🐃 புங்கனூர் குட்டை மாடு 🐂 | Hello Madurai | App | TV | FM | Web

ஹலோ மதுரை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். நாம் தொடர்ந்து நாட்டு இன மாடுகள் குறித்து பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் இந்த முறை தமிழகத்தை தாண்டி இந்தியாவில் அழியும் நிலையில் உள்ள உலகிலேயே மிகக் குறைந்த உயரம் கொண்ட புங்கனூர் குட்டை மாடுகள் பற்றி பார்ப்போம்.

ஒரு காலத்தில் வீடுகளில் மாடுகள் இருப்பது கௌரவம் என்ற நிலை, எந்திரங்களின் வரவுக்குப் பிறகு மாறிவிட்டது. பெரும்பாலான தொழுவங்களில் டிராக்டர்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும், மண் மீதும், மாடுகள் மீதும் உள்ள பாரம்பர்யப் பிணைப்பை அறுத்தெரிய விரும்பாத பலர், இன்றைக்கும் நாட்டு மாடுகளைப் பராமரித்து வருகிறார்கள்.

நாம் மறந்துபோன, பாரம்பர்ய விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் நாட்டு மாடுகளின் பங்களிப்பு அபாரமானது. இவற்றின் சிறப்பே, குறைந்த தீவனத்தை எடுத்துக் கொண்டு உழவுக்கு உதவி செய்வதோடு, கணிசமான அளவில் பாலும் கொடுப்பதுதான். கலப்பின மாடுகளின் பாலைவிட நாட்டு மாடுகளின் பாலுக்கு தனிச்சுவை உண்டு. அதிலிருந்து கிடைக்கும் தயிர், மோர், நெய்க்குக்கூட தனிச்சுவை இருப்பதை மறுக்க முடியாது .

காங்கேயம், உம்பளாச்சேரி, புலிகுளம், மணப்பாறை, பர்கூர் என தமிழ்நாட்டுக்கென பாரம்பர்ய ரகங்கள் இருப்பதுபோல், ஆந்திராவின் சிறப்பு, புங்கனூர், ஓங்கோல் இன மாடுகள் ஆகும். அதிலும் புங்கனூர் குட்டை என்ற ரகம் இந்திய நாட்டினங்களில் அருகி வரும் இனமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக-ஆந்திர மாநிலங்களின் எல்லையோரத்தில் இருக்கும் சித்தூர் மாவட்டம், புங்கனூர் மாடுகளுக்குப் புகழ்பெற்ற பகுதி. புங்கனூர் மாடுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இம்மாவட்டத்தில் உள்ள குப்பம், சாந்திபுரா, வி.கோட்டா, புங்கனூர் ஆகிய பகுதிகளில் வலம் வந்தால் உங்கள் கேள்விகளுக்கான விடை நிச்சயம் கிடைக்கும். சரி புங்கனூர் குட்டை மாடுகள் குறித்து விரிவாக காண்போம்.

இந்திய இனங்களில் 32 வகை மாடுகள் உள்ளது. அதில் நான்கு ரகங்கள், குட்டை ரகத்தைச் சேர்ந்தவை. கேரளாவில் இருக்கின்ற வெச்சூர், மலநாடு கிட்டா, காசர்கோட் குள்ளன் கிட்டா மாடுகள் போல், இந்த புங்கனூர் இன மாடுகளும் குள்ளமானவை. இந்த வகை மாடுகள் மூன்று, நான்கு அடி உயரம் உடையது. இதன் எடை 115 முதல் 200 கிலோ வரை இருக்கும். இந்த ரகத்தை, சித்தூர் மாவட்டத்துல் உள்ள புங்கனூர் ஜமீன்தார், அவருடைய பண்ணையில் பராமரித்து பிரபலப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. அதனால் இதற்கு 'புங்கனூர் குட்டை என்று பெயர் வந்ததாகவும், அதேபோல் சித்தூரில் உள்ள மாடு என்பதால் சித்தூர் குட்டை மாடு பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இவ்வகை மாடுகள் வெள்ளை, பழுப்பு, கருப்பு, சாம்பல் என்று நான்கு நிறங்களில் உள்ளது. அக்காலத்தில் உழவுக்கும் இந்த குட்டை மாடுகள் பயன்படுத்தப்பட்டது. இம்மாடுகளின் தனிச் சிறப்பே ஒரு நாளைக்கு 5 கிலோ தீவனம் மட்டும் எடுத்துக் கொள்ளும். ஆதலால் தீவனச் செலவு அதிகம் ஆகாது. அதேபோல் சராசரியாக ஒரு நாளைக்கு 3 முதல் 5 லிட்டர் பால் கொடுக்கும் திறன் உடையது.

மேலும் இம்மாட்டின் பாலில் அதிக பொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. பொதுவாகப் பசும்பாலில் 3.5 முதல் 4 சதவீதம் வரையான கொழுப்புச் சத்து இருக்கும். ஆனால் இந்தப் புங்கணூர் பசுவின் பால், எருமைப் பாலைப் போல் போன்று 8 சதவீதம் கொழுப்புச் சத்துக்கள் உடையது. அதேபோல் புரோட்டீன் சத்துக்கள் கூடுதலா இருக்கும். இந்த பாலின் சுவையே தனி. ஆதலால் வீட்டுகளுக்கு தேவையான பாலுக்காக இதை எல்லோரும் வளர்க்கலாம். குட்டையான மாடு மற்றும் குறைவான தீன என்பதால் சிறிய அளவில் வீட்டில் இடம் இருந்தாலே இந்த மாடுகளை வளர்க்கலாம். குறிப்பாக இந்தவகை மாடுகளுக்கு பாயுற பழக்கம் இல்லாத காரணத்தால், எல்லோரும் பயமில்லாமல் வளர்க்கலாம்.

தீவனத்தை பொறுத்தவரையில், சாதாரண நாட்டு மாடுகளுக்குக் கொடுக்கிற பச்சைப்புல், சோளத்தட்டு, வைக்கோல், தவிடு கலந்த தண்ணி மட்டுமே தீவனமாகக் கொடுத்தால் போதும். முக்கியமாக வறட்சி காலங்களில் கிடைக்கின்ற தீனியை சாப்பிட்டு வாழும் திறன் கொண்டது என்பது இதன் கூடுதல் சிறப்பு.



கூடுதல் தகவல்களை வீடியோவில் பார்த்து, கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.


நன்றிகள் !!



_________________________________________________________

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh - 95 66 53 1237. (Whatsapp)
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

💓 App Link: https://play.google.com/store/apps/de...

💓 Facebook :  / maduraivideo  

💓web site : https://hellomaduraitv.com/

💓web site : https://hellomadurai.in/

💓web site : https://tamilvivasayam.com/

💓 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________

Комментарии

Информация по комментариям в разработке