ஸ்டாலின் அறிவிப்பால் மனம் மாறியதா கர்நாடகா? | Bengaluru - Hosur metro | First inter-state metro

Описание к видео ஸ்டாலின் அறிவிப்பால் மனம் மாறியதா கர்நாடகா? | Bengaluru - Hosur metro | First inter-state metro

பெங்களூரு நம்ம மெட்ரோவின் 2ம் கட்ட திட்டமாக RV ரோடு - பொம்மசந்திரா இணைப்பை தமிழகத்தின் ஓசூர் வரை நீட்டிக்கும் திட்டம் 2022ல் கர்நாடக அரசின் கவனத்துக்கு வந்தது.

அப்போது மாநில முதல்வராக இருந்து பாஜ அரசை வழிநடத்திய பசவராஜ் பொம்மை திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார்.

உடனடியாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகமும் கிரீன் சிக்னல் கொடுத்தது.

பெங்களூரு பொம்மசந்திராவில் இருந்து ஓசூருடன் இணைக்கும் இந்த திட்டத்தில் 12 ஸ்டேஷன்கள், ஒரு டிப்போவும் அமைகிறது.

மொத்தம் 23 கி.மீ தூரத்தில் கர்நாடகாவில் 12 கிலோ மீட்டரும், தமிழகத்தில் 11 கிலோ மீட்டரும் வழித்தடம் உருவாக்கப்பட உள்ளது.

இதுதொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைக்காக கடந்த 27ம் தேதி, சென்னை மெட்ரோ அதிகாரிகள் பெங்களூரு மெட்ரோ அதிகாரிகளை சந்தித்து பேசினர்.

ஆனால் எதுவும் இறுதி செய்யப்படவில்லை என அடுத்த நாளே பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் தெளிவு படுத்தியது. விரிவான திட்ட அறிக்கை கூட முழுமையடையவில்லை என கூறியது.

ஓசூர் மெட்ரோ விஷயத்தில் இப்போது கர்நாடகா பெரிதும் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.

பெங்களூர் மெட்ரோ ஓசூர் வரை நீட்டிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின் விளைவுதான் கர்நாடகாவின் இந்த திடீர் மனமாற்றத்துக்கு காரணம்.

பெங்களூருவை ஒட்டி தமிழக எல்லை பகுதியில் அமைந்துள்ள ஓசூரில் தொழில் வளர்ச்சி மிக வேகமாக நடந்து வருகிறது.

ஏராளமான தொழில், வேலைவாய்ப்பு, புதிய வாய்ப்புகளும் கொட்டி கிடப்பதால்
ஓசூரில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்டப்படும் என ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார்.

இதனால் தொழில் வாய்ப்புகளும், பெங்களூவிற்கான முக்கியத்துவமும் குறைந்துவிடும் என கர்நாடகா நினைப்பதாக தெரிகிறது.

குறிப்பிடத்தக்க முதலீடுகள் பெங்களூரு நகரத்தில் இருந்து திசை திரும்பிவிடும் என்ற அச்சம் எழுந்திருப்பதும் ஓசூர் மெட்ரோ இணைப்பை எதிர்க்க காரணமாக அமைந்துவிட்டது.

பெங்களூரு - ஓசூர் மெட்ரோ திட்டம் மட்டும் செயல்படுத்தப்பட்டால் அதுதான் தென்னிந்தியாவின் முதல் மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ திட்டமாக இருக்கும்.# #BengaluruHosurMetro #InterstateMetroConnection #Karnataka #Opposition

Комментарии

Информация по комментариям в разработке