திருச்சி திமுகவில் சலசலப்பு ; அருண் நேருவும் புறக்கணிப்பு | Trichy DMK | Nehru | Magesh

Описание к видео திருச்சி திமுகவில் சலசலப்பு ; அருண் நேருவும் புறக்கணிப்பு | Trichy DMK | Nehru | Magesh

அமைச்சர் நேரு பெயர் தவிர்ப்பு
கருணாநிதி விழாவில் பூசல்

திருச்சி என்றாலே அமைச்சரும், முதன்மை செயலருமான நேருவின் கோட்டை என்று தான் திமுகவினர் கூறி வந்தனர்.

ஆனால் பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் வருகைக்கு பின் இரு கோஷ்டிகள் உருவாகின.

அமைச்சர் மகேஷ் மாவட்ட செயலராக இருக்கும் தெற்கு மாவட்டம் மற்றும் மாநகரம் சார்பில் 20 மற்றும் 21 தேதிகளில், கருணாநிதி நுாற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடந்தது.

முதல் நாள் நிகழ்ச்சி அழைப்பிதழில் எம்பி ஆ.ராஜா, அமைச்சர் சேகர்பாபு, தலைமை நிலைய செயலர் துறைமுகம் காஜா பெயர்கள் இடம் பெற்றன.

அடுத்த நாள் நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து, காங்கிரஸ் முன்னாள் எம்பி பீட்டர் அல்போன்ஸ், திமுக எம்பி ஜெகத்ரட்சகன், மதிமுக பொருளாளர் செந்திலதிபன் பெயர்கள் இருந்தன.

ஆனால் லோக்கல் மற்றும் மூத்த அமைச்சரான நேரு பெயர் இடம் பெறவில்லை.

அதேபோல் நிகழ்ச்சிகளுக்காக வைக்கப்பட்ட பேனர்களிலும், நேருவின் படமோ, பெயரோ இல்லை.

திருச்சியில் நேருவின் படமோ, பெயரோ இல்லாமல் திமுகவின் போஸ்டர்கள், பேனர்களை பார்த்த கட்சியினர் இதெல்லாம் தலைமைக்கு தெரியுமா என ஆச்சரியமாக பார்த்தனர்.

இது குறித்து மகேஷ் ஆதரவு நிர்வாகிகள் கூறுகையில், இரு கோஷ்டிகளாக செயல்படுவதால் கட்சியினர் பெரும்பாலோர் விலகி நிற்கின்றனர்.#TrichyDMK #Nehru #Magesh #Mkstalin #Dmk

Комментарии

Информация по комментариям в разработке