தமிழில் மாற்று சினிமாக்கள் சுவாரஸ்யமாகயில்லை - எழுத்தாளர் சாரு நிவேதிதா - பகுதி 01

Описание к видео தமிழில் மாற்று சினிமாக்கள் சுவாரஸ்யமாகயில்லை - எழுத்தாளர் சாரு நிவேதிதா - பகுதி 01

நிகழ்கால தமிழ் சினிமா- தமிழில் மாற்று சினிமாக்கள் சுவாரஸ்யமாகயில்லை - எழுத்தாளர் சாரு நிவேதிதா - பகுதி 01


சாரு நிவேதிதாவின்

கதை - சினிமா - ரசனை - பயிற்சிப்பட்டறை

30-09-2018, ஞாயிறு, காலை10 மணி முதல் மாலை 6 மணி வரை.

நுழைவுக்கட்டணம்: 500 ரூபாய்

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண்.7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, விக்ரம் ஸ்டுடியோ எதிரில், வாசன் ஐ கேர் அருகில் உள்ள டயட் இன் உணவக கட்டிடத்தின் இரண்டாவது மாடி. கூகிள் மேப்பில் pure cinema book shop என்று தேடினால் எளிதாக கண்டடையலாம்.

முன்பதிவு செய்ய: 9840644916, 044 4865 5405.

நணபர்களே, பியூர் சினிமாவும், சாப்ளின் பிலிம் அகாடெமியும் இணைந்து நடத்தும் தொடர் பயிற்சிப்பட்டறைகள் பியூர் சினிமா அரங்கில் ஒவ்வொரு வாரமும் நடந்து வருகிறது. படத்தொகுப்பாளர் லெனின் பயிற்சிப்பட்டறைக்கு அடுத்து, சாரு நிவேதிதா அடுத்த ஐந்து வாரங்களுக்கு ஒவ்வொரு ஞாயிறும் சினிமா ரசனை சார்ந்த பயிற்சி ஒன்றினை நடத்த இருக்கிறார். இதுவரை இல்லாத அளவிற்கு மிக சிறப்பாக கதையிலிருந்து சினிமா, சினிமாவிலிருந்து ரசனை என்று மிக மேம்படுத்தப்பட்ட, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு வகுப்பாக இது நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் எந்த திரைப்படக்கல்லூரியிலும் கூட இதுப்போன்ற ஒரு பயிற்சியோ வகுப்போ நடைபெறுவதில்லை. லட்சக்கணக்கில் பணம் கட்டி படித்தாலும், இப்படியான சினிமா ரசனை பயிற்சி கொடுக்கப்படுவதில்லை. நல்ல சினிமா எடுக்க விரும்பும் படைப்பாளிக்கு முதலில் தேவை சினிமா ரசனை சார்ந்த புரிதல். அதனை தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சாருவின் இந்த பயிற்சிப்பட்டறையும் நடக்க இருக்கிறது.

பியூர் சினிமா அரங்கில் நடைபெறும் இந்த பயிற்சிப்பட்டறைக்கு குறைந்தபட்ச கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். தொடர்ந்து ஐந்து வாரங்கள் நடக்க இருப்பதால், ஐந்து வாரங்களும் தொடர்ச்சியாக பங்கேற்க முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு வாரத்திற்கும் நுழைவுக்கட்டணம் 500 ருபாய். பியூர் சினிமா ஒரு வணிக நோக்கமற்ற சமூக தளம். ஆனால் சமூகத்தில் எல்லாவற்றிற்கும் பணம் தேவை, பியூர் சினிமா தொடர்ந்து இயங்க அதற்கு பல லட்சங்கள் தேவைப்படுகிறது. அதனை இப்படியான பயிற்சிப்பட்டறைகள் நடத்தி சரி செய்ய இயலுமா என்கிற தேடலே தொடர் பயிற்சிப்பட்டறைகள் நடத்த காரணம். ஆனாலும் எல்லா வகையான நண்பர்களும் பங்கேற்க வேண்டும் என்கிற நோக்கிலேயே மிக குறைந்த அளவில் நுழைவுக்கட்டணத்தை நிர்ணயித்துள்ளோம். இதில் பங்கேற்கும் சாருவிற்கும் பியூர் சினிமா, தமிழ் ஸ்டுடியோ இயக்கத்தின் மீதான பிரியமும், அதன் தேவையும் மட்டுமே பிரதானம். யாருக்கும் பெரும் சிரமம் இல்லாமல், பெரும் வணிக நோக்கமில்லாமல் நடைபெறும் இதுபோன்ற பயிற்சிப்பட்டறைகளை நண்பர்கள் ஆதரிக்க வேண்டும். அதிகபட்சம் 50 நண்பர்கள் மட்டுமே பங்கேற்க இயலும். எனவே முதலில் பணம் செலுத்தி முன்பதிவு செய்யும் நண்பர்களுக்கே முன்னுரிமை. உடனே பணம் செலுத்தி உங்கள் இருக்கையை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

முன்பதிவு செய்ய: 9840644916, 044 4865 5405.

Комментарии

Информация по комментариям в разработке