மார்கழி 26 திருப்பாவை & திருப்பள்ளியெழுச்சி | MARGAZHI 26 THIRUPPAVAI & THIRUPPALLIYEZHUCHI

Описание к видео மார்கழி 26 திருப்பாவை & திருப்பள்ளியெழுச்சி | MARGAZHI 26 THIRUPPAVAI & THIRUPPALLIYEZHUCHI

#thirupavai #thiruvempavai #thiruvembavai #திருப்பாவை #திருப்பள்ளியெழுச்சி
திருப்பள்ளியெழுச்சி - 6
பப்பற வீட்டிருந் துணரும் நின் அடியார் பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்தியல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா!
செப்புறு கமலம் கண் மலருந்தண்வயல் சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

திருப்பாவை - 26
மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வன
பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே,
சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே,
கோல விளக்கே, கொடியே, விதானமே,
ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்.

மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சி பாடல்களை ஆத்ம ஞான மையம் வழங்குகிறது. தொடர்ந்து அனைத்து வீடியோக்களையும் பார்ப்பதற்கு இந்த சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள்.

ஆத்ம ஞான மையம்

Комментарии

Информация по комментариям в разработке