ஆடி 18 க்கும் கர்ணனுக்கும் என்ன சம்பந்தம்? | Brammah Vishnu Sivan | Aanmeegam | Mahabharatham-Tamil

Описание к видео ஆடி 18 க்கும் கர்ணனுக்கும் என்ன சம்பந்தம்? | Brammah Vishnu Sivan | Aanmeegam | Mahabharatham-Tamil

#aadi18 #aadiperukku #brammahvishnusivan #mahabharatham #karnandeath #18thdaypor

அதர்மத்துக்கு துணைபோன கர்ணன் மாண்ட நாள் - ஆடி 18 க்கும் கர்ணனுக்கும் என்ன சம்பந்தம்

குருக்ஷேத்திரப் போரின் முதல் நாள் பாண்டவர் படைகள் அபிமன்யுவால் காக்கப்பட்டும் பீஷ்மரின் அம்புகளால் பலத்த சேதம் அடைந்தது. உத்தரனும் சுவேதனும் சல்லியனாலும் பீஷ்மராலும் கொல்லப்பட்டனர். பாண்டவர் படைகள் முதல் நாள் போரில் படுதோல்வி அடைந்ததை சரிகட்ட பீஷ்மரை கொல்ல அணிவகுத்தனர். ஆனால், கௌரவர் படைகள் பீஷ்மரை காத்து நின்று போரிட்டது. பீஷ்மரை கொல்ல சிகண்டியை போர்க்களத்தில் பீஷ்மருக்கு எதிராக நிறுத்தி போரிட கிருஷ்ணர் ஆலோசனை கூறினார்.

கிருஷ்ணரின் ஆலோசனையின்படி சிகண்டியை பீஷ்மருக்கு எதிராக போரிட போர்க்களத்திற்கு அனுப்பினர். இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிகண்டியின் பின்னாலிருந்து அர்ஜுனன் தனது அம்பு மழையால் பீஷ்மரின் உடலை சல்லடையாக துளைத்தெடுத்து அம்பு படுக்கையில் கிடத்தினான். இப்படித் தொடர்ந்து 15 நாட்கள் போர் நடக்க, ஒவ்வொருவராக போரில் இறந்து கொண்டே வந்தனர். 16ம் நாள் போரில் கௌரவர்களின் தலைமை படைத்தலைவனாக கர்ணன் நியமிக்கப்பட்டான். கர்ணனின் தேரை சல்லியன் ஓட்டினான். கர்ணன் போரில் லட்சக்கணக்கான பாண்டவ படைகளைக் கொன்றான்.

அர்ஜுனன் தனது கூர்மையான அம்புகளால் கர்ணனின் தாக்குதலை தடுத்து நிறுத்தினான். ஒரே அம்பில் கர்ணன், அர்ஜுனனை கொல்ல அர்ஜுனனின் கழுத்துக்கு குறிவைத்து நாக பாணத்தை ஏவினான். அப்போது பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனின் தேரை தன்னுடைய காலால் ஒரு அடி கீழே அழுத்தினார். அர்ஜுனனின் தேர் பூமிக்கு கீழ் ஓரடி இறங்கியது. அதனால் கர்ணன் ஏவிய நாக பாணம் அர்ஜுனனின் கழுத்தை தாக்காமல் அவனின் தலை கவசத்தை தாக்கியதால் அர்ஜுனனின் தலைக்கவசம் மட்டுமே கீழே விழுந்தது.

கிருஷ்ணரின் தந்திர உபாயத்தால் அர்ஜுனன் உயிர் பிழைத்தான். கர்ணனின் நாகாஸ்திரமும் வீணாய்ப்போனது. ஏனென்றால் அதை ஒருமுறை மட்டுமே உபயோகிக்க முடியும்.
குருக்ஷேத்திரப் போரின் இறுதியில் கர்ணனின் தேர்ச்சக்கரம் சகதியில் மாட்டிக் கொண்டது. கர்ணன் தேரை சகதியிலிருந்து மீட்கும் நேரத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனை கர்ணனின் மீது அம்புகள் ஏவச் சொன்னார்.


இந்திரன், கர்ணனின் கவச குண்டலங்களை தானமாகப் பெற்றுக் கொண்டபடியால் தெய்வீக கவசம் இல்லாத கர்ணனின் மீது செலுத்தப்பட்ட அர்ஜுனனின் கூரிய அம்புகள் கர்ணனின் நெஞ்சை சல்லடையாகத் துளைத்தன. அதனால் கர்ணன் போரில் மடிந்தான். அதர்மத்திற்கு துணை நின்ற கர்ணன் அழிக்கப்பட்டு தர்மம் நிலைநாட்டப்பட்ட இந்த நாள்தான் பதினெட்டாம் நாள் போர் என்று அழைக்கப்படும் ஆடி பதினெட்டாம் நாளாகும்.

அதர்மத்துக்கு துணைபோன கர்ணன் மாண்ட நாள் - ஆடி 18

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!
All about Aanmeegam, spiritual information
ஆன்மீக thagavalgal, padalgal, songs, kathaigal, stories & more....
Brammah Vishnu Sivan.

Комментарии

Информация по комментариям в разработке