குடவாசல் கோணேஸ்வரர் கோயில் | நமது தாய் நலமுடன் இருக்க வழிபட வேண்டிய தலம்|Kudavasal Koneswarar Temple

Описание к видео குடவாசல் கோணேஸ்வரர் கோயில் | நமது தாய் நலமுடன் இருக்க வழிபட வேண்டிய தலம்|Kudavasal Koneswarar Temple

குடவாசல் கோணேஸ்வரர் கோயில்

மூலவர் – கோணேஸ்வரர்
அம்பாள் – பெரியநாயகி
தலமரம் – வாழைமரம்
தீர்த்தம் – அமிர்த தீர்த்தம்
புராண பெயர் - திருக்குடவாயில்
ஊர் - குடவாசல்
மாவட்டம் - திருவாரூர்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர்

* தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 94வது தலம்.
• கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்களில் ஒன்று இத்தலம். மேற்கு நோக்கிய இத்தலத்தை திருப்பணி செய்த கோச்செங்கட்சோழ மன்னன், மாடக்கோயிலாக கட்டினார்.
• கருடன் தன மூக்கினால் புற்றை பிளந்து வெளிப்படுத்திய இறைவன் என்பதால் வன்மீகாசலேசர் , கருடாத்ரி ; சூரியன் வழிபட்டதால் சூரியேஸ்வரர் ; தாலப்பியமுனிவர் வழிபட்டதால் தாலப்பியேஸ்வரர் ; பிருகுமுனிவர் வழிபட்டதால் பிருகுநாதர் என்றெல்லாம் சிவனார் அழைக்கப்படுகிறார்
• தாலப்பியமுனிவர் இத்தலத்தில் மந்தார மரத்தின் கீழ் தவஞ்செய்ததாக வரலாறு சொல்லப்படுகிறது
• பிரளய காலத்தில் சிவனார் உயிர்களை குடத்திலிட்டு பாதுகாத்ததாகவும் , மீண்டும் படைப்புக்காலத்தில் வெளிப்படுத்தும்போது குடம் மூன்றாக உடைந்து , அடிப்பாகம் விழுந்த இடம் குடமூக்கு என்கின்ற கும்பகோணம் எனவும் , நடுப்பாகம் விழுந்த இடம் கலயநல்லூர் என்கின்ற சாக்கோட்டை எனவும் , குடத்தின் முகப்பான வாயிற்பாகம் விழுந்த இடம் குடவாயில் என்கின்ற குடவாயில் எனவும் விளங்குவதாக வரலாறு சொல்லப்படுகிறது
• திருணபிந்து முனிவர் வழிபட்டு உடற்பிணி ( குஷ்டரோகம் ) நீங்கப்பெற்ற தலம்
• இத்தலத்தைச் சுற்றி திருச்சேறை , கரவீரம் , பெருவேளூர் , தலையாலங்காடு , கடுவாய்க்கரைப்புத்தூர் , திருக்கொள்ளம்பூதூர் , நாலூர் மயானம் முதலிய தேவாரத் தலங்கள் அமைந்துள்ளன
• கதலிவனம் , வன்மீகாசலம் என்றெல்லாம் அழைக்கப்படும் தலம்
• சனிப்பிரதோஷம் மிகவிசேஷம்
• சங்ககாலச் சிறப்பும் , பழமையும் வாய்ந்த தலம்
• ராஜகோபுரம் இல்லை
• பிரகாரத்தில் இடும்பன் , தண்டபாணி , கஜலட்சுமி , வீணை இல்லாத சரஸ்வதி , நவக்கிரகங்கள் , பைரவர் , சனைச்சரன் , சப்தமாதர்கள் முதலானோரின் சந்நிதிகள் உள்ளன
• கஜலட்சுமி சந்நிதியை அடுத்து அமைந்துள்ள குடவாயிற் குமரன் சந்நிதி தனிச்சிறப்புடையது.
* அருகருகே இரண்டு பைரவர் (ஒருவருக்கு நாய் வாகனம் இல்லை), சூரியன், சந்திரன் ஆகியோரும் உள்ளனர். இதில் சூரியன் அமர்ந்தும், சந்திரன் நின்ற கோலத்திலும் இருக்கிறார். பெற்றோருக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் சூரிய, சந்திரனை வழிபட்டு மன அமைதி பெறுகின்றனர்.
• சண்டேஸ்வரர் சந்நிதி தனிக்கோயிலாக
• நடராஜர் சபை அழகானது. நடராஜர் பீடத்தில் பண்டைய கால எழுத்துக்களால் ஆன சொற்றொடருக்கு மத்தியில் அடியவர் ஒருவர் கூப்பிய கரங்களுடன் காட்சி தருகிறார்
• காசி விஸ்வநாதர் சந்நிதி சிவலிங்கத் திருமேனி செந்நிறமாக திருக்காட்சி
• மூலவர் கம்பீரமான திருமேனியராக , சதுர பீடத்துடன் , திருமேனியில் கருடன் தீண்டி வழிபட்ட சுவடுகளுடன் மேற்கு நோக்கியும் , அம்மை நின்ற கோலத்தில் தெற்கு நோக்கியும் திருக்காட்சி தருகின்றனர்
• இத்தலத்தில் உள்ள ஏகபாத மூர்த்தி திருவடிவம் அற்புதமான கலையழகு நிறைந்தது.
* இத்தலவிநாயகர் சித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
* கோயிலுக்கு எதிரே வெளியில் அமுத தீர்த்தம் உள்ளது. இதன் கரையில் சுவாமி சன்னதி பார்த்தபடி "ஆதி கஜாநநர்' என்று அழைக்கப்படும் விநாயகர் இருக்கிறார். சுவாமி சன்னதியில் இருந்து வெளியில் பார்க்கும்போது, இந்த விநாயகரின் விமான கலசம் தெரியும்படியாக கோயில் அமைக்கப்பட்டிருப்பது விசேஷம். மாசி மகத்தன்று சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் அமுத தீர்த்தத்திற்கு எழுந்தருளி, தீர்த்தநீராடுகின்றனர்.
* இக்கோயிலுக்குள் நுழைந்ததும் வலது புறத்தில் "அனுமதி விநாயகர்' சன்னதி இருக்கிறது. இவரை வணங்கி அனுமதி பெற்ற பிறகே சிவனை வழிபடச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். எனவே இவருக்கு இப்பெயர். இதுதவிர பிரகாரத்தில் "மாலை வழிபாட்டு விநாயகர்' என்ற விநாயகரும் இருக்கிறார். சாயரட்ச பூஜையில் இவருக்கே முதல் பூஜை செய்யப்படுவதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறார். இதுதவிர, இரட்டை விநாயகர் சன்னதியும் உள்ளது.
• அம்மையே பிருகத்துர்க்கையாக வழிப்படப்படுவதால் துர்க்கைக்கென்று தனி சந்நிதி இல்லை
• மாசிமகத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது
* சுவாமிக்கு அமுதலிங்கேஸ்வரர் என்றும், புற்றிற்குள் இருந்ததால் "வன்மீகநாதர்' என்றும் பெயர்கள் உண்டு.
* கோயில் நுழைவு வாசல் எதிரே காசி விஸ்வநாதர் காட்சி தருகிறார்.
• புறநானூறு மற்றும் அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள பழமையான தலம்
• ஜடாயு , அக்னி , சூதமகரிஷி , பிருகுமுனிவர் முதலானோர் வழிபட்டு அருள்பெற்ற தலம்
* மாசிமகத்தில் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், நவராத்திரி, கந்தசஷ்டி, திருவாதிரை, பங்குனி உத்திரம் முதலான உற்சவங்கள் நடைபெறுகின்றன
* தை மாதத்தில் 3 நாட்கள் சிவனார் மீது சூரிய ஒளி விழுகிறது
* தாயின் ஆசைகளை நிறைவேற்றி வைக்காமல் வருந்துபவர்கள் இங்கு சிவனை வேண்டி, மன அமைதி பெறுகிறார்கள். புத்திர தோஷம் உள்ளவர்களும் இங்கு வேண்டிக்கொள்ளலாம். திருமணதோஷம் உள்ளவர்கள் ராகு காலத்தில் துர்க்கை சன்னதியில் எலுமிச்சையில் நெய் தீபமேற்றி வழிபடுகிறார்கள்.
* திருஞானசம்பந்தர், "எழில்கொள் மாடக்கோயில்' என்று குறிப்பிட்டு பாடியுள்ளார். உயரமான இடத்தில் இருந்து சிவனார் காட்சி தருவதால், இத்தலத்தை "சிறிய கைலாயம்' என்றும் சொல்கிறார்கள்.

தரிசன நேரம்

காலை 06:00 am – 12:00 pm &
மாலை 04:00 pm – 08:30 pm


அமைவிடம்

திருவாரூரில் இருந்து 23 கி.மீ., கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் குடவாசல் உள்ளது.

கோயில் Google map link

SCN094 - Kudavasal Koneswaran Shiva TEMPLE, Padal Petra Temple

https://maps.app.goo.gl/ZGrxkhGG37wGB...

if you want to support us via UPI id

k.navaneethan83@ybl

Join this channel to get access to perks:

   / @mathina  

- தமிழ்

Комментарии

Информация по комментариям в разработке