#Partnership உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களில் மதமாற்றத் தடை சட்டம் அமலில் உள்ளது.
ஒருவரை கட்டாயப்படுத்தி அல்லது ஏமாற்றி மாதம் மாற்றுவது குற்றம் என இந்த சட்டம் சொல்கிறது.
குறிப்பாக இந்த சட்டம் உத்தரப்பிரதேசத்தில் இந்த சட்டம் வலுக்கட்டாயமாக இளம்பெண்களை திருமணம் செய்து, மதம் மாற்றுவதை தடுக்க கொண்டுவரப்பட்டது.
அது குற்றச்செயல்களாக கருதப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், போலீசாரிடம் புகார் அளித்து, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யலாம்.
அப்படி, பெண்களை மதம் மாற்றி, வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை; 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க, இந்த அவசர சட்டம் வழிவகுக்கிறது.
இதைத் தவிர, அத்தகைய கட்டாய திருமணம், சட்டப்படி செல்லாது என்றும் அறிவிக்கப்படும்.
அதே நேரத்தில், ஒருவர், தான் பிறந்த மதத்திற்கு மீண்டும் மாறுவது, இந்த புதிய சட்டப்படி குற்றமல்ல; அது, மதம் மாற்றமாக கருதப்படாது.
அபராத தொகையை தவிர்த்து, கட்டாய மதமாற்ற முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இழப்பீடாக, ஐந்து லட்சம் ரூபாய் வரை, குற்றவாளிகள் வழங்க வேண்டும்.
திருமணத்திற்குப் பின், சுய விருப்பத்துடன் மதம் மாற விரும்பும் பெண்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரிடம், அதற்கான விண்ணப்பத்தை, இரண்டு மாதங்களுக்கு முன்பே சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதி.
இதுவரை இந்த சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதமாற்றத் தடைச் சட்டத்துக்கு தடை கோரி CJP எனப்படும் Citizens for Justice and Peace () என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவுடன் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய், நீதிபதி வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் சி.யூ.சிங் ஆஜரானார்.
மதமாற்றத் தடைச் சட்டங்கள், லவ் ஜிஹாத் என்று அழைக்கப்படும் ஆதாரமற்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டவை.
மதமாற்றத் தடைச் சட்டங்களின் கீழ் ஜாமீன் பெறுவது சாத்தியமற்றதாக உள்ளது.
சட்டங்கள் கடுமையானதாக மாற்றப்படுகின்றன.
பணமோசடி தடுப்புச் சட்டம், பயங்கரவாத தடுப்புச் சட்டம் போன்று, மதமாற்றத் தடைச் சட்டத்தில் ஜாமின் பெறுவதற்கு இரட்டை நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
திருமணம் செய்து கொள்வதற்காக இருவரில் ஒருவர் மதம் மாறினால், அவரை மதமாற்றத்துக்கு தூண்டிய குற்றச்சாட்டின் கீழ் மற்றவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.
இத்தகைய புகார்களை குடும்பத்தினர் மட்டுமல்லாது, மூன்றாம் தரப்பினர் கூட தாக்கல் செய்ய வழி வகை உள்ளது என வாதிட்டார்.
தொடர்ந்து, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெயரில் சிலரின் அரசியல் ஆதாயத்துக்காக மதமாற்றம் நடக்கிறது.
அப்பாவி மக்கள் சுரண்டப்படுகின்றனர். நிதி மோசடிகள் நடக்கிறது என மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
6 வாரங்களுக்குப் பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
#SupremeCourtIndia
#AntiConversionLaws
#StayOnLaws
#InterfaithMarriage
#ReligiousFreedom
#UttarPradeshLaw
#CJIQuestion
#ConstitutionalValidity
#FreedomOfReligion
#IndiaNews# #SupremeCourtIndia
#AntiConversionLaws
#StayOnLaws
#InterfaithMarriage
#ReligiousFreedom
#UttarPradeshLaw
#CJIQuestion
#ConstitutionalValidity
#FreedomOfReligion
Информация по комментариям в разработке