திருவோணம் விரதம் கடைப்பிடிக்கும் முறை & வழிபாட்டு முறை | Thiruvonam Fasting & Worship method

Описание к видео திருவோணம் விரதம் கடைப்பிடிக்கும் முறை & வழிபாட்டு முறை | Thiruvonam Fasting & Worship method

மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம், திருவோண விரதம். இது, ஆவணி மாதத்தில் ஓணம் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

திருவோண நட்சத்திரம் பெருமாளுக்குரியது. வாமன அவதாரம் எடுத்தபோது, திருமால் திருவோண நட்சத்திரத்தில்தான் அவதரித்தார். மேலும், மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக அவதரித்த பூமிப்பிராட்டியை ஒப்பிலியப்பர் பெண் கேட்டு வந்தது, பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்றுதான். பிராட்டியை ஒப்பிலியப்பன் மணந்துகொண்டதும், ஐப்பசி மாத திருவோண நட்சத்திர தினத்தில்தான். எனவே, ஒப்பிலியப்பர் கோயிலிலும் இந்த திருவோண விழா மாதாமாதம் சிறப்பாக நடைபெறுகிறது.

திருவோண தினத்தில் விரதம் மேற்கொள்பவர்கள், எல்லா வளங்களும் பெற்று இன்புற்று வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

ஆத்ம ஞான மையம்

Комментарии

Информация по комментариям в разработке