Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть திருப்புகழ் 904 என்னால் பிறக்கவும் (வயலூர்) Thirupugal 904 ennAl piRakkavum (Vayalur) | KaavadiTV

  • KaavadiTV - காவடி டிவி
  • 2025-06-02
  • 82081
திருப்புகழ் 904 என்னால் பிறக்கவும் (வயலூர்) Thirupugal 904 ennAl piRakkavum (Vayalur) | KaavadiTV
  • ok logo

Скачать திருப்புகழ் 904 என்னால் பிறக்கவும் (வயலூர்) Thirupugal 904 ennAl piRakkavum (Vayalur) | KaavadiTV бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно திருப்புகழ் 904 என்னால் பிறக்கவும் (வயலூர்) Thirupugal 904 ennAl piRakkavum (Vayalur) | KaavadiTV или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку திருப்புகழ் 904 என்னால் பிறக்கவும் (வயலூர்) Thirupugal 904 ennAl piRakkavum (Vayalur) | KaavadiTV бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео திருப்புகழ் 904 என்னால் பிறக்கவும் (வயலூர்) Thirupugal 904 ennAl piRakkavum (Vayalur) | KaavadiTV

திருப்புகழ் 904 என்னால் பிறக்கவும் (வயலூர்) Thiruppugazh 904 ennAl piRakkavum (Vayalur) | KaavadiTV
இந்த திருப்புகழ் பாடல் முழுமையான சரணாகதியை உருவாக்குகிறது. அகந்தை நீங்கி, பாப வினைகள் அகல, நோய்கள் தீர, வாழ்வில் அமைதி கிடைக்க, வயலூர் முருகனின் அருள் பூரணமாக கிடைக்கும்.

என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
என்னால் துதிக்கவும் ...... கண்களாலே

என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு

என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை

என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
என்னால் தரிக்கவும் ...... இங்குநானார்

கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்
கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே

கல்லார் மனத்துட னில்லா மனத்தவ
கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா

மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை
வன்வாளி யிற்கொளும் ...... தங்கரூபன்

மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே.

Song 904 - ennAl piRakkavum (vayalUr)

ennAl piRakkavum ennAl iRakkavum
ennAl thudhikkavum ...... kaNgaLAlE

ennAl azhaikkavum ennAl nadakkavum
ennAl irukkavum ...... peNdir veedu

ennAl sukikkavum ennAl musikkavum
ennAl salikkavum ...... thondha nOyai

ennAl erikkavum ennAl ninaikkavum
ennAl tharikkavum ...... ingu nAnAr

kannAr uriththa en mannA enakku nal
karNA mirthap padham ...... thandha kOvE

kallAr manath udan illA manath thava
kaNNAdi yitradam ...... kaNda vElA

mannAna thakkanai munnAL mudith thalai
vanvALi yiRkoLum ...... thanga rUpan

mannA kuRaththiyin mannA vayaRpadhi
mannA muvarkkoru ...... thambirAnE.
ennAl piRakkavum ennAl iRakkavum: At my will, I can take birth and die in this world.

ennAl thudhikkavum: At my will, I can worship.

kaNgaLAlE ennAl azhaikkavum: I can beckon anyone with my eyes at my will.
ennAl nadakkavum ennAl irukkavum: Of my own accord, I can walk and stay in any place.
peNdir veedu ennAl sukikkavum: Women and homes can be enjoyed by me at my pleasure.
ennAl musikkavum: I can become weak and thin due to my desires and prejudices.
ennAl salikkavum: I can be easily satiated and fed up.
thondha nOyai ennAl erikkavum: I can burn all the diseases arising from my Karma.
ennAl ninaikkavum: All the thoughts I want, I can freely think myself.
ennAl tharikkavum: I can bear pleasures and pains as they come.
ingu nAnAr: Who am I to do all these things on this earth? (implying, I am a NOBODY).
kannAr uriththa en mannA: Just like pulling turnips from stone, which is my heart, You are able to make my heart melt, Oh My King!
enakku nal karNA mirthap padham thandha kOvE: Your preaching feels like Divine Nectar in my ears, Oh My Lord!
kaNNAdi yitradam kaNda vElA: With Your spear You created a pond (at VayalUr) with crystal clear water!*
mannAna thakkanai munnAL: When once Dhaksha PrajApathi performed Yagna (sacrificial rite)
mudith thalai vanvALi yiRkoLum thanga rUpan: SivA of golden body severed his crowned head with a fierce arrow (because of the insults heaped on SivA by Dhaksha);
manna: You are that SivA's Master, Oh Lord!
kuRaththiyin mannA: You are also the Lord of VaLLi, the damsel of KuRavAs!
vayaRpadhi mannA: You are the King at VayalUr**!
muvarkkoru thambirAnE.: You are the incomparable Leader of the Trinity (BrahmA, Vishnu and SivA), Oh Great One!

என்னால் பிறக்கவும் ... என் செயலால் நான் இவ்வுலகில்
பிறப்பதற்கும்,
என்னால் இறக்கவும் ... என் திறத்தால் நான் இறப்பதற்கும்,
என்னால் துதிக்கவும் ... என் எண்ணத்தால் நான் துதிப்பதற்கும்,
கண்களாலே என்னால் அழைக்கவும் ... என் கண்கொண்டு
மற்றவரை நான் அழைப்பதற்கும்,
என்னால் நடக்கவும் ... என் செயலால் என் கால்கொண்டு
நான் நடப்பதற்கும்,
என்னால் இருக்கவும் ... என் திறம் கொண்டு நான்
ஓரிடத்தில் இருப்பதற்கும்,
பெண்டிர்வீடு என்னால் சுகிக்கவும் ... மாதர், வீடு இவற்றை
நான் இன்புற்று சுகிப்பதற்கும்,
என்னால் முசிக்கவும் ... வேண்டுதல் வேண்டாமை காரணமாக
நான் நலிவுற்று மெலிவதற்கும்,
என்னால் சலிக்கவும் ... இது போதும் என அலுப்புடன் நான் சலிப்பு அடைவதற்கும்,
தொந்தநோயை என்னால் எரிக்கவும் ... வினையின் வசமாக வரும் நோய்களை நான் பொசுக்குவதற்கும்,
என்னால் நினைக்கவும் ... பல நினைவுகளையும் நான் இங்கு
நினைப்பதற்கும்,
என்னால் தரிக்கவும் ... இன்ப துன்பங்களை நான் தாங்கிக்
கொள்வதற்கும்,
இங்கு நான் ஆர் ... இங்கே நான் யார்? (எனக்கு என்ன சுதந்திரம்
உண்டு?)
கன்னார் உரித்த என் மன்னா ... என் நெஞ்சக் கல்லிலிருந்து நார் உரிப்பது போலக் கசியச் செய்த அரசே,
எனக்குநல் கர்ணாமிர்தப்பதம் தந்தகோவே ... செவிக்கு நல்ல
அமுதம் போன்ற உபதேச மொழியை எனக்கு அருளிச்செய்த அரசனே,
கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ ... உன்னைக் கற்றறியார்
மனத்தில் தங்காத மனத்தோனே,
கண்ணாடியில் தடம் கண்டவேலா ... கண்ணாடி போல் தெளிவான தடாகத்தை வேலால் கண்டவனே*,
மன்னான தக்கனை முன்னாள் ... அரசனாக விளங்கிய
தக்ஷப்ரஜாபதியை முன்னொருநாள்
முடித்தலை வன்வாளியிற் கொளும் ... அவனது கிரீடம் அணிந்த தலையை கொடிய அம்பால் கொய்த
தங்கரூபன் மன்னா ... பொன் போன்ற மேனியுடைய சிவபிரானுக்கு குருராஜனே,
குறத்தியின் மன்னா ... குறத்தி வள்ளியின் தலைவனே,
வயற்பதி மன்னா ... வயலூரின்** அரசனே,
முவர்க்கொரு தம்பிரானே. ... பிரமன், திருமால், சிவன் ஆகிய
மும்மூர்த்திகளுக்கும் ஒப்பற்ற தலைவனே.

##திருப்புகழ்904 #வயலூர்முருகன் #Thiruppugazh #VayalurMurugan #kavaditv

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]