😍sathunavu velai vaippu 2024 தமிழகம் முழுக்க 8,997 காலியிடங்களை நிரப்ப உத்தரவு! 10ம் வகுப்பு போதும்

Описание к видео 😍sathunavu velai vaippu 2024 தமிழகம் முழுக்க 8,997 காலியிடங்களை நிரப்ப உத்தரவு! 10ம் வகுப்பு போதும்

😍சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு 2024 | sathunavu jobs 2024 in tamil | sathunavu velai vaippu 2024 தமிழகம் முழுக்க 8,997 காலியிடங்களை நிரப்ப உத்தரவு! 10ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்! முழு விவரம்

சென்னை: தமிழ்நாடு முழுக்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு இலவசமாகச் சத்துணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுக்க 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அதை நிரப்ப இப்போது சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது. காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம் 1982ஆம் ஆண்டு முதல் சத்துணவுத் திட்டமாக மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் அறிமுகப்படுத்திய சத்துணவுத் திட்டத்தை அடுத்தடுத்து வந்த அரசுகளும் தொடர்ந்து வருகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறப்புப் பயிற்சி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்குச் சூடான சமைத்த மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.

சமையல் உதவியாளர்கள்:
இந்த சத்துணவுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திடச் சமையல் உதவியாளர்களை பணிக்கு எடுக்க சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுக்க 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அந்த பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட உள்ளன. மாதம் ரூ.3,000 என்ற தொகுப்பூதியத்தில் இந்த காலியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் நியமனம் செய்யப்படுவோர் 12 மாதங்கள் திருப்திகரமாக பணியாற்றினால் பணியை முடிக்கும் தகுதியானவர்களுக்குச் சிறப்பு காலமுறை ஊதியமும் தனியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் சிறப்புக் கால முறை ஊதிய (STS) நிலை -1 (ரூ.3000-9000)) வழங்கப்படும்.



#sathunavu #sathunavujob

Комментарии

Информация по комментариям в разработке