நகை, பணம் இழந்து தொழிலதிபர்கள் தவிப்பு | Matrimonial App | Dharapuram Police

Описание к видео நகை, பணம் இழந்து தொழிலதிபர்கள் தவிப்பு | Matrimonial App | Dharapuram Police

திருப்பூர் தாராபுரத்தை சேர்ந்தவர், 29 வயது வாலிபர்.

பேக்கரி மற்றும் கால்நடை தீவனம் விற்பனை கடை நடத்தி வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்பே என்ற ஆப் மூலம் ஈரோடு, கொடுமுடியை சேர்ந்த சந்தியா, அறிமுகம் ஆகி உள்ளார்.

இருவரும் நீண்ட நேரம் செல்போனில் பேசி பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சந்தியா நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி உள்ளார்.

சந்தியாவும் வாலிபரும் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். மாலையும் கழுத்துமாக வீடு திரும்பியவரை பார்த்து வாலிபரின் பெற்றோர்கள் ஷாக் ஆகினர்.

பின் சம்மதம் தெரிவித்து சந்தியாவுக்கு 12 சவரன் நகை, தாலி, புது துணிகள் வாங்கி கொடுத்துள்ளனர்.

1 மாதம் குடும்பம் நடத்திய சந்தியாவின் மீது பெற்றோர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது.

கூறிய வயதுக்கும் தோற்றத்துக்கும் சம்பந்தம் இல்லாததால் அவரது ஆதார் கார்டை செக் செய்துள்ளனர்.

அதில் சந்தியாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தது தெரிய வந்தது.

சந்தியாவிடம் கேட்ட போது கோபமடைந்த சந்தியா இது குறித்து வெளியே சொன்னால் என்னை கொடுமை படுத்துவதாக போலீசில் கூறி விடுவேன் என மிரட்டியுள்ளார்.

உஷாரான பெற்றோர்கள் தாராபுரம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

அப்போது அவரின் முகவரி உட்பட அனைத்தையும் துப்பு துலக்கியத்தில் அவரின் உண்மை முகம் வெளியே வந்தது.

10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையை சேர்ந்த அருணை காதலித்து திருமணம் செய்துள்ளார் சந்தியா. ஒரு குழந்தையும் உள்ளது.

அதன் பின் அவரிடம் இருந்து பிரிந்த சந்தியாவுக்கு டிஎஸ்பி, கரூரை சேர்ந்த எஸ்ஐ, மதுரையில் ஒரு போலீஸ், கருரில் ஒரு பைனான்சியர் என பலருடன் திருமணம் நடந்துள்ளது.

திருமணம் ஆகிய சில மாதங்களிலேயே தகராறு செய்து நகை பணத்துடன் எஸ்கேப் ஆவதை சந்தியா வழக்கமாக கொண்டுள்ளார்.

சந்தியாவின் திருமண பட்டியலில் திருமணத்துக்கு பெண் தேடும் 40 வயதுக்கு அதிகமானோர், திருமணமான ஆண்கள் என 15 பேர் வரை உள்ளதாக கூறப்படுகிறது.

லிஸ்டில் உள்ள பலர் நகை, பணத்தை இழந்து வெளியே சொல்ல முடியாமல் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.

சந்தியாவின் திருமணத்துக்கு தமிழ்ச்செல்வி என்பவர் புரோக்கராக செயல்பட்டு உள்ளார்.

தன்னை கண்டுபிடித்ததை அறிந்து தலைமறைவான சந்தியாவையும், தமிழ்ச்செல்வியையும் போலீசார் தேடி வருகின்றனர்.#MatrimonialApp #DharapuramPolice #Dinamalar

Комментарии

Информация по комментариям в разработке