உண்மையான கருங்காலி எது original karungali

Описание к видео உண்மையான கருங்காலி எது original karungali

#sreesalemsiddhar,#ஸ்ரீசேலம்சித்தர்

கருங்காலி கருப்பு நிறம் கொண்டவை. நூற்றாண்டுகளாக இரும்பை ஒத்த உறுதியுடன் கூடிய பலகைகள் இம்மரத்தில் இருந்து பெறப்படுகின்றன. மரங்கள்தான் மனித இனத்தை வாழ வைக்கும் சக்திகளாக விளங்குகின்றன. இதனால் தான் நம் முன்னோர்கள் கோவில்களில் தல விருட்சமாக மரங்களை வளர்த்து வணங்கினர். மரங்களின் மருத்துவப் பயன்கள் அளவற்றவை. எதிர்விளைவு களை ஏற்படுத் தாதவை. இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் கருங்காலி மரமும் ஒன்று.


கருங்காலி மரம் இந்தியா முழுவதும் மட்டுமல்லாது மியான்மர், மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் அதிகம் காணப்படுகிறது. கருங்காலி கட்டைக்குக் கோணாத கோடாலி என்று கருங்காலியைப் பற்றி பழந்தமிழ் பாடலில் ஔவையார் பாடியுள்ளார். இதிலிருந்து கருங்காலி கட்டையின் தன்மை நமக்கு விளங்கும்.
குறிப்பாக இந்த மரத்தின் நடுப்பாகமான கருமை நிறம் கொண்டப் பகுதியை வைரம் என்பர். அநேகமாக கருங்காலி மரத்தில் இருந்தே "உலக்கை" செய்யப்படுகிறது.
இது பச்சை, மஞ்சள் நிறமலர்களையும், செறிந்த சாம்பல் நிறப் பட்டையையும், செந்நிற கடினமான கட்டையையும் உடைய இலையுதிர் மரமாகும்

Комментарии

Информация по комментариям в разработке