பசு மாட்டு சந்தை | ஜாதி மாடு விற்பனை | வாரச் சந்தை | மடப்பட்டு சந்தை | Uzhavan TV

Описание к видео பசு மாட்டு சந்தை | ஜாதி மாடு விற்பனை | வாரச் சந்தை | மடப்பட்டு சந்தை | Uzhavan TV

பசு மாட்டு சந்தை | ஜாதி மாடு விற்பனை | வாரச் சந்தை | மடப்பட்டு சந்தை | Uzhavan TV

மடப்பட்டு சந்தையில் நாட்டுகாளை மாடுகள், கலப்பின காளை மாடுகள்,பசு மாடுகள், ஆடுகள் ஆகியவை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விற்பனைக்கு வருகின்றது.
மிகக் குறைந்த விலையில் மாடுகள் மற்றும் வளர்ப்பு கன்றுகுட்டிகளும் இங்கு கிடைக்கிறது.

மாடுகளில் பொதுவாக நெற்றியில் மற்றும் நடுமுதுகில் சுழி(ராஜா சுழி) இருப்பது நல்லது.

நெற்றியில் இரண்டு சுழி இருப்பது இடிமேல் இடி கொடை மேல் கொடை என்கிறார்கள் அதாவது கடன்மேல் கடன் வரும் என்கிறார்கள்.

மாட்டின் முன்முதுகில்(கொண்டை சுழி)சுழி இருந்தால் கொண்டவனை கொன்றுவிடும் என்கிறார்கள்.

பின்முதுகில் (புரஞ்சுழி)சுழி இருந்தால் பின்னுக்கு தள்ளிவிடும் என்கிறார்கள்.

வாலில் சுழி இருந்தால் துடைப்பகட்ட சுழி ,அதாவது எல்லாம் துடைத்துகொண்டு போய்விடும்.

சுழி மாட்டின் கால் பகுதியில் இருந்தால் விளங்குசுழி,அதாவது மாட்டை வைத்திருக்கும் நபர் விளங்க முடியாது(சிறைக்கு செல்வார்கள்) என்கிறார்கள்.


மடப்பட்டுமாட்டு சந்தையில் கலப்பின மாடுகள் குறை ந்த விலையில் கிடைக்கிறது.ஜெர்ஸி மற்றும் HF கலப்பு மாடுகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.கலபின மாடுகள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 லிட்டருக்கு மேல் பால் தருகிறது.


சந்தை குறிப்பு
இடம் - மடப்பட்டு
கிழமை - ஞாயிறு
மடப்பட்டு உளுந்தூர்பேட்டை,விழுப்புரம், பண்ருட்டி மற்றும் திருக்கோவிலூருக்கும் இடையே அமைந்துள்ளது.

பால் தேவை அதிகம் இருக்கும் இடங்களில் மற்றும் பால்பண்ணை வைக்க நினைப்பவர்கள் இந்த கலப்பின மாடுகளை அதிகம் வளர்க்கலாம்.தற்போது பால் விலை ஏறியுள்ளது.எங்கள் ஊரில் அதிகபட்சமாக இன்று ஒரு லிட்டர் பால் 49 ரூபாய்க்கு விற்பனை ஆனது.உங்கள் ஊரில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச பால் விலையை கீழே தெரிவிக்கவும்.

Cow market has been conducted every Sunday at Madappattu. Madappattu is the junction of Tirukovilur, Ulundurpet, panruti and Villupuram.

In this market the cow sales from low price.If you want to buy cow and baby cow at cheapest rate then you come this market.

Please comment the milk rate at your Home Town.


#பசுமாட்டுசந்தை
#cowmarket
#உழவன்டிவி
#தேப்பனந்தல்

Комментарии

Информация по комментариям в разработке