ஸ்ரீ சக்கரம் தேவி கட்கமாலா ஸ்தோத்திரம்

Описание к видео ஸ்ரீ சக்கரம் தேவி கட்கமாலா ஸ்தோத்திரம்

தேவி கட்கமாலா ஸ்தோத்ரம்: 
தேவி என்றால் “சக்தி” வடிவான தெய்வீக அன்னை. கட்க என்றால் “பாதுகாப்பு தரும் ஆயுதம் (வாள்), கவசம் போன்றது”. மாலா என்றால் “மாலை”. ஸ்தோத்ரம் என்றால் கீர்த்தனை அல்லது ஸ்துதி, பாட்டு ஆகும்.

எவர் ஶ்ரீ தேவீ கட்கமாலா ஸ்துதியை ஸ்துதிக்கிறார்களோ, அவர்களின் கழுத்தில் அணிந்த மாலை போன்று, கவசமாக இருந்து அவர்களை அன்னை காப்பாள். மிகவும் சக்தி வாய்ந்த, ஆற்றல் மிக்க, மந்திர அதிர்வுகளைக் கொண்ட ஸ்துதி இது.
ஸ்ரீ சக்ரத்தில் வாசம் செய்யும் தெய்வங்களின் பெயர்களைத் தன்னகத்தே கொண்டது.

மத்தியத்தில் அமர்ந்த ஸ்ரீ லலிதையைச் சுற்றி, அமர்ந்துள்ள 98 யோகினிகளையே இதனில் வணங்குகிறோம். அவர்களுக்கு உரிய இடம் மற்றும் சக்திகளை, அவர்களின் செயல்களை மனதினால் நினைத்து, பெயரினை பூரண அன்போடு உச்சரிக்க, நம்முள் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கும் அதிர்வுகளை தன்னகத்தே கொண்ட மந்த்ர ஆற்றல் மிக்க சொற்களால் ஆனது. இதனை பாராயணம் செய்தாலே இயல்பான தியானம் நிகழ்கிறது.

Комментарии

Информация по комментариям в разработке