வீடு கட்டும் யோகம் தேடிவரும் பதிகத்தை தினமும் உச்சரித்தால்!
இறைவழிபாடு நமக்கு கைமேல் பலனை தரும். சொந்த வீடு வாங்க யோகம் இல்லாதவர்களுக்கு கூட, சொந்த வீடு கட்டுவதற்கான பாக்கியத்தைத் தரக்கூடிய பரிகாரத்தை பற்றிதான், இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே, ஜாதக கட்டத்தில் செவ்வாயின் பலம் அதிகமாக இல்லாதவர்களும், சொந்த வீடு வாங்கலாமே. இந்த பதிகத்தை மனமுருக உச்சரித்தால்!
செவ்வாய்க்கு அதிபதி முருகன். முருகப்பெருமானை மனதார வேண்டி, வழிபாடு செய்யும் பட்சத்தில், செவ்வாயினால் ஏற்படக்கூடிய தோஷங்கள், பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அது நிவர்த்தி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.சென்னைக்கு அருகில் இருக்கக்கூடிய இந்த சிறுவாபுரி முருகனை தரிசனம் செய்து, வேண்டிக்கொண்ட பலபேரின் வேண்டுதல் நிறைவேறாமல் இருந்ததே இல்லை என்று சொல்லலாம். சொந்த வீடு, கட்ட வேண்டும் என்று, வேண்டிக் கொண்டு, இந்த கோவிலுக்கு சென்று சின்ன சின்ன, கல்லை அடுக்கி வைத்து விட்டு வந்தாலே போதும். அவர்களது வேண்டுதல் கட்டாயம் நிறைவேறும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது. வீடு கட்டுவதற்கு மட்டுமல்ல, திருமணம் ஆகாதவர்கள் இந்த கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்து வந்தால் கூடிய விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. பல பேரின் வேண்டுதல் நிறைவேறி இருக்கிறது
அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி, முருகப் பெருமானை வழிபட்ட திருத்தலம் என்ற மிகப்பெரிய சிறப்பு இந்த கோவிலுக்கு உண்டு. முடிந்தால் ஒருமுறை சிறுவாபுரி முருகப்பெருமானை தரிசனம் செய்து இந்தத் திருப்புகழைப் பாராயணம் செய்யலாம். முடியாதவர்கள் வீட்டிலேயே முருகப்பெருமானின் திருவுருவப் படத்தை வைத்து, ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து, காலையில் இந்த பதிகத்தை மனமுருகி உச்சரித்து, சொந்த வீடு வேண்டும் என்ற வேண்டுதலை முருகப்பெருமானிடம் வையுங்கள் முருகப்பெருமானிடம் கையேந்தி சொன்னால் நிச்சயம் உங்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் வரும் என்பதில் சந்தேகமே இல்லை.
அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்
பதிகம்
திருப்புகழ் பதிகம்
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற …… வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு …… மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு …… மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி …… வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா
புந்திநிறை யறிவாள …… வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு …… வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய …… முருகேசா
சந்தமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு …… பெருமாளே.
அங்காரகள் / செவ்வாய் மூல மந்திரம் :
ஐம் ஹ்மெளம் ஸீம்த்ராம் கம் க்ரஹாதிபதயே
பெளமாய ஸ்வாஹா
அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவானுக்குரிய மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் 9, 27, 108 முறை துதிப்பது சிறந்தது. செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக சன்னதிக்கு சென்று செவ்வாய் பகவானுக்கு செந்நிற மலர்களை சமர்ப்பித்து, தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 108 முறை அல்லது 1008 துதித்து வருவதால் ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் பாதகங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும். நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகாமல் தடுக்கும். வெகு சீக்கிரத்தில் சொந்த வீடு மற்றும் சொந்தமாக நிலம் போன்ற அசையா சொத்துகள் வாங்குவதற்கான யோகத்தை ஏற்படுத்துவார் செவ்வாய் பகவான்.
செவ்வாய் பகவான் பரிகாரங்கள்:
செவ்வாய் பகவானின் முழுமையான அருளைப் பெறுவதற்கு ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் வைத்தீஸ்வரன் கோயில் என அழைக்கப்படும் அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயிலுக்கு சென்று, சிவபெருமான், பார்வதிக்கு அபிஷேக அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பிறகு அங்கிருக்கும் செவ்வாய் பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும். இந்த பரிகார வழிபாட்டை ஆறு மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ செய்வது சிறப்பு.
மேற்கூறிய பரிகாரத்தை செய்ய இயலாதவர்கள் உங்கள் வீட்டுற்க்கு அருகிலேயே இருக்கும் சிவன் கோயிலில் இருக்கும் நவக்கிரக சந்நிதிக்கு செவ்வாய் கிழமைகளில் காலை 9 லிருந்து 10 மணிக்குள்ளாக சென்று, செவ்வாய் பகவானுக்கு செந்நிற மலர்களை சாற்றி, சிறிது துவரம் பருப்புகளை சமர்ப்பித்து, நெய் தீபம் ஏற்றி செவ்வாய் பகவானின் காயத்ரி மந்திரத்தை 108 முறை 1008 வரை துதிக்க வேண்டும். இந்த பரிகாரத்தை 9 முதல் 27 வாரங்கள் வரை செய்தால் மட்டுமே முழுமையான பலனை பெற முடியும்
இந்த இரண்டு பரிகாரங்களையும் செய்ய இயலாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் வீட்டில் இருக்கும், பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு தீபமேற்றி, தூபங்கள் கொளுத்தி, முருக மந்திரங்களை 108 எண்ணிக்கை வரை துதிப்பதால் செவ்வாய் பகவானின் அருள் கிட்டும். உங்களின் இடது கையில் தரமான செம்பு வளையம் ஒன்றை செவ்வாய்க்கிழமையில் அணிந்து கொள்ள வேண்டும். கோயில்களில் சிறப்பு பூஜைகள், விழாக்கள் நடைபெறும் காலத்தில் கோயில் பூஜைகளுக்கு செந்நிற மலர்கள் மற்றும் துவரம் பருப்புகளை தானமாக தரலாம். ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள், காவல் துறையினர் போன்றோர்களின் நலன்களுக்கான விடயங்களுக்கு உங்கள் சக்திக்கேற்ப நிதி அளிப்பது செவ்வாய் பகவானின் நல்லருளை உங்களுக்கு பெற்றுத்தரும் சிறந்த பரிகாரமாக காரணமாக இருக்கிறது.
அங்காரகன் மந்திரம்
“ஓம் அங்காரகாய நம”
மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
செவ்வாய் பகவானுக்கு உகந்த செவ்வாழைப்பழமும், அரளிப்பூயையும் வைத்து வழிபடுவது மேலும் சிறப்பை தரும். மந்திரத்தை மனதார உச்சரித்து, உங்கள் மனதில் இருக்கும் கோரிக்கையை அந்த செவ்வாய் பகவானிடம் மனதார சொல்லி வேண்டிக் கொள்ள வேண்டும். மனதார இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். வீடு கட்டுவதில் இருந்த தடைகள் நீங்கி நிச்சயம் உங்களுக்கான விடிவுகாலம் பிறக்கும்.
Информация по комментариям в разработке