THUG LIFE THALAIVAR | TRIBUTE TO DR.KALAIGNAR KARUNANIDHI | WOWDA

Описание к видео THUG LIFE THALAIVAR | TRIBUTE TO DR.KALAIGNAR KARUNANIDHI | WOWDA

ஒரு பேரியக்கத்தின் ஆலமரம் சரிந்து நேற்றோடு ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது. இவ்வோராண்டில் தமிழகம் சந்தித்த சிக்கல்கள் ஏராளம். ஒவ்வொன்றின்போதும் 'கலைஞர் உயிரோடு இருந்திருந்தால்' என்று சுயமரியாதையுள்ள ஒவ்வொரு தமிழனும் ஒரு நிமிடம் எண்ணாமல் இல்லை. மாநில உரிமைகள் பறிப்பு, இந்தி மொழியாதிக்க வல்லாண்மை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் ஐம்பதாண்டுகளாகப் பார்த்துப் பார்த்து வார்த்தெடுத்த வளர்ச்சி மாதிரியின் மீதான தாக்குதல், சமூகநீதியைக் குலைக்கும் வகையிலான சீர்கேடுகள், மக்களின் நிலங்களைப் பறித்து வாழ்வாதாரத்தை நிர்மூலமாக்கும் திட்டங்கள் என தில்லி தர்பார் தமிழகத்தை உருக்குலைத்து வருகிறது. இத்தகைய சோதனையான காலகட்டத்தில் தமிழினத்தின் ஈராயிரமாண்டு அடிமைத்தளையினை உடைத்தெறிந்த நூறாண்டுப் பெருமை கொண்ட தன்னிகரில்லாத் திராவிட இயக்கத்தின் கடைசிப் பெருந்தூணான கலைஞர் நம்மிடையே இல்லை.

ஆனால் முன்னெப்போதையும் விட இந்த ஓராண்டில்தான் இந்த ஆலமரம் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தன் விழுதுகளைப் பரப்பி நம்மை
இத்தனை ஆண்டுகளாக நிழல் கொடுத்துக் காத்து வந்தது என்பதைத் தமிழர் அனைவரும் உணரத் தொடங்கியுள்ளனர். கலைஞர் பேசுவதை நிறுத்திய பின்னர்தான் அவரது சாதனைகள் நமக்குத் தெரியவந்து பேசப்படுகின்றன. தன்மானமற்றிருந்த ஒரு தலைமுறை இப்போதுதான் இத்தமிழ்ப்பெருமகனின் வரலாற்றை அறியத் தொடங்கியிருக்கிறது. 14 அகவையில் தமிழ்க்கொடியைத் தூக்கிய அத்தகப்பன்சாமி தன் 94 வயதில் நம்மிடம் அதைத் தந்துவிட்டுப் பேரறிஞரின் அருகில் ஓய்வெடுக்கிறான். தன் இனத்தின் விடியலுக்காக இறுதிநாள் வரை சிந்தித்த ஒப்பற்ற நம் தமிழ் முதல்வனின் பெருமையை இத்தலைமுறையும் அறியச் செய்யும் ஒரு முயற்சியாகக், கலைஞரின் முதலாமாண்டு நினைவஞ்சலிக்கு இக்காணொளியினை உருவாக்கிப் படைக்கிறோம். பயில்க. பகிர்க.

Комментарии

Информация по комментариям в разработке