சந்திர பகவானுக்குரிய சிறந்த பரிகாரத் தலம் # திங்களூர் சந்திரன் பகவான் கோவில்| THINGALOOR TEMPLE

Описание к видео சந்திர பகவானுக்குரிய சிறந்த பரிகாரத் தலம் # திங்களூர் சந்திரன் பகவான் கோவில்| THINGALOOR TEMPLE

தமிழ்நாட்டிலுள்ள நவக்கிரகத் தலங்களில் சந்திரனுக்கு உரிய தலமாகப் போற்றப்படுகிறது திங்களூர் சந்திரன் கோவில். ஆகும்

நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்து இரண்டாவதாக வருபவர் சந்திர பகவான். சந்திரனுக்கு சோமன் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவர் வளர்பிறை காலத்தில் சுபராகவும், தேய்பிறை காலத்தில் பாபராகவும் இருக்கிறார். சுப கிரகங்களுக்கு சந்திரன் நட்பு கிரகமாக இருப்பதால் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் பல நன்மைகளை வழங்குகிறார். உடல் பலம், மனோ பலம் இரண்டிற்கும் காரணியாக விளங்குபவர் சந்திர பகவான். ரசனை, அறிவு, ஆனந்தம், புகழ், அழகு, சுகபோகங்கள் அனைத்திற்கும் சந்திர பகவானே காரகன் ஆவார்.
சந்திர திசை மற்றும் சந்திர புத்தி நடைபெறும் போது ஏற்படும் தீங்குகளில் இருந்து நிவர்த்திக்காக செல்ல வேண்டிய சந்திர பரிகார ஸ்தலங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது திங்களூர் கைலாசநாதர் திருக்கோவில்.
தமிழகத்தில் அன்னப்பிரசானத்துக்கு மிகச்சிறந்த தலம் திங்களூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் என்று கூறப்படுகிறது. திருநாவுக்கரசரும், அப்பரும் தங்கள் பதிகங்களில் திங்களூர் தலத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகள் அவதரித்தலம் என்ற பெருமையும் திங்களூருக்கு உண்டு.
பிரம்மனின் புத்திரர்களின் ஒருவர் அத்திரி மகரிஷிக்கும் அவர் மனைவி அனுசுயாவிற்கும் பிறந்த மூன்று புத்திரர்களில் முதல் புத்திரன் சந்திரன் ஆவார். தோற்றத்தில் மிகவும் வசீகரம் உடையவரான சந்திரன், மகாவிஷ்ணுவை நோக்கி தவமியற்றி நவக்கிரக அந்தஸ்து பெற்றார்.

இதனை அறிந்த தட்சன் தனது 27 மகள்களையும் சந்திரனுக்கு மணமுடித்து வைத்தான். தனது 27 மனைவிகளிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதற்குப் பதிலாக ரோகிணியிடம் மட்டும் தனி பிரியம் காட்டினான் சந்திரன். இதனால் மனமுடைந்த மற்ற 26 மனைவிகளும் தந்தை தட்சனிடம் முறையிட்டனர். தட்சன் சந்திரனிடம் அனைவரிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்த வேண்டினார். சந்திரன் அதை ஏற்கவில்லை. இதனால் கோபமுற்ற தட்சன் சந்திரனின் அழகு குறையவும், அவனது கலைகள் மங்கும்படியும் சாபம் இட்டான்.
தட்சனின் சாபம் நீங்க திங்களூர் திருத்தலத்தில் நீண்ட காலம் சிவபெருமானை வேண்டி தவம் செய்தான் சந்திரன். தனது பெயரில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி இறைவனை பூஜித்து வந்தான். ஒரு பங்குனி மாத பௌர்ணமியில் இறைவன் சந்திரனுக்கு காட்சி கொடுத்து சாபத்தை நீக்கினார். இத்தல இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றதால் இத்தலம் சந்திரனுக்குரிய தலமாக விளங்கியது.
அன்னப்பிரசானம்
குழந்தைக்கு முதல் சோறு ஊட்டுவதை அன்னப்பிரசானம் என்பர். கிராமங்களில் உள்ள மக்கள் தங்களது குலதெய்வக் கோயில்கள் இந்த சடங்கைச் செய்வார்கள். வசதியுள்ளோர் குருவாயூரப்பன் கோயிலில் செய்வது வழக்கம். தமிழகத்தில் அன்னப்பிரசானத்துக்கு மிகச்சிறந்த தலமாக திங்களூர் கைலாசநாதர் கோயில் விளங்குகிறது.
தோஷங்கள் நீக்கும் தலம்
அருள்மிகு கைலாசநாதர் கோயிலில் அமைந்துள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, இறைவன் மற்றும் தனி சந்நிதியில் காட்சி தரும் சந்திரனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து, நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் யாவும் நீங்கி நற்பலன்கள் உண்டாகும். இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தன்று காலை உதயத்தில் 6 மணிக்கு லிங்கத்தின் மீது சூரிய ஒளி படுவதால், அன்று சூரிய பூஜையும், மறுநாள் பௌர்ணமி பிரதமையில் மாலை 6 மணிக்கு சந்திர ஒளி லிங்கத்தின் மீது படுவதால் அன்று சந்திர பூஜையும் நடைபெறுவது வழக்கம்.
நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்குரிய பரிகார தலமாக திங்களுர் கைலாசநாதர் கோயில் விளங்குவதால் இங்கு வந்து ஈசன் கைலாசநாதர், அம்பாள் பெரியநாயகியோடு சந்திரனையும் வழிபாட சகல தோஷங்களும் நீங்கி பரிபூரண நலன் பெறலாம்

Комментарии

Информация по комментариям в разработке