ஸ்ரீ மஹாகணபதி பூஜை / ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை / Vinayagar Chaturthi pooja By R.சேதுராம சாஸ்திரிகள்

Описание к видео ஸ்ரீ மஹாகணபதி பூஜை / ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை / Vinayagar Chaturthi pooja By R.சேதுராம சாஸ்திரிகள்

(This video has been done to encourage beginners and youngsters to start performing our regular pooja's and also an initiative to help everyone in Basic Vigneswara pooja before doing any Pradhana pooja)
முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட்டாலே போதும் எல்லாக் கடவுள்களின் அருளும் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
இவ்வாறு பூஜை செய்து முழுமுதற் கடவுள் விநாயகரின் முழுமையான அருளையும் ஆசியையும் பெறுங்கள். பதினாறு செல்வங்களும் கிடைக்கப் பெறும். வாழ்க வளமுடன்.
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் - மேனிநுடங்காது பூக்கொண்டு துப்பார்த்துறைமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு. விநாயகர் ஸ்லோகம் தேவர்கள் துயர் துடைக்க விநாயகர் கஜமுகன் என்ற அரக்கனை அழித்ததால் அவர் கஜானன கணபதி என்று அழைக்கப்படுகிறார். இது குறித்த புராணக்கதை கந்தபுராணத்தில் இடம் பெற்றுள்ளது. யானைத்தலையை கொண்ட கஜமுகன் என்ற அரக்கன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்க வேண்டும் என்று தேவர்கள் சிவபெருமானிடம்முறையிட்டனர். சிவபெருமான் விநாயகரை அழைத்து கஜமுகனை அழிக்குமாறு பணித்தார். சிவபெருமான் அளித்த பூதகணங்களுடன் சென்று கஜமுகனுடன் கடும் போரிட்டுஅவனை அழித்தார் விநாயகர். விநாயகர் கஜமுகனை அழித்ததற்கு பிரதிபலனாக சித்தி, புத்தி என்ற தேவ கன்னியரை அவருக்கு மணம் செய்வித்து தேவர்கள் விநாயகரை வணங்கினர். நினைத்த காரியம் நிறைவேறுவதுதான் சித்தி . புத்தி என்றால் அறிவு. விநாயகரை வழிபடுவோருக்கு நினைத்த காரியம் கைகூடும். அறிவும், ஞானமும்பெருகும். இதனால் விநாயகருக்கு பாலச்சந்திரன் என்ற பெயரும் உண்டு. புகை வடிவில் தோன்றிய அரக்கனை கொன்றதால் விநாயகருக்கு தூமகேது என்ற பெயர் ஏற்பட்டது.

Комментарии

Информация по комментариям в разработке