வனாந்திர யாத்திரையில் களைத்து நான்சோர்ந்து போகும் நேரங்களில்

Описание к видео வனாந்திர யாத்திரையில் களைத்து நான்சோர்ந்து போகும் நேரங்களில்

மணல் நிறைந்த, திசை கண்டுபிடிக்க முடியாத, அடிப்படை வாழ்வாதாரங்களான ஆகாரத்தை விளைவிக்கும் செடி கொடிகள் இல்லாத, தண்ணீர் கிடைக்காத, அடங்காத காற்றடிக்கக் கூடிய இடத்தை தான் வனாந்தரம் என கூறுகிறோம். பல நேரங்களில் நமது வாழ்வு வனாந்தரத்தைப் போல் இருப்பதாக உணருகிறோம். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நமது வாழ்வில் ஒரு புதிய வழியை உண்டு பண்ணுகிற அன்பு நிறைந்த தேவன் இருக்கிறார். நாம் மனிதர்களால் கைவிடப்பட்டு இருக்கலாம். ஆனால் என்றுமே கைவிடாத தேவன் நமக்கு ஆதரவாய் இருக்கிறார். "...நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்." ஏசாயா 43:19. என்று வாக்கு கொடுத்த கடவுள் இப்பாடலை கேட்கும் உங்களுக்கும் உதவி செய்வார்.

பாடியவர்கள்: அருட்திரு சுரேஷ் ராஜன் , அருட்திருமதி கிரேஸ் ஐடா ராஜன்.
மெல்லிசை: Dr கிப்ட்சன் டேவிட் ராஜன்
தொடர்பு: மின்னஞ்சல்: [email protected] அலைபேசி : 7606906649

பாடல் வரிகள்:

வனாந்திர யாத்திரையில் களைத்து நான்
சோர்ந்து போகும் நேரங்களில்
நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும்
என் வாழ்வு செழித்திடுமே

1. செங்கடல் எதிர்த்து வந்தும்
பங்கம் வந்திடாமல் அங்கு
பாதை ஒன்று கண்ணில் தெரியுமே
விடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன்
தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் – வனாந்திர

2. தேவனை மறக்கச் செய்யும்
வேதனை நிறைந்த வாழ்வை
சத்துரு விதைத்திடும் போது
மாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும்
காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே – வனாந்திர

3. இனிமையற்ற வாழ்வில் நான்
தனிமை என்று எண்ணும் போது
மகிமை தேவன் தாங்கிடுவாரே
இனிமையாய் மன்னாவை வருஷிக்கப் பண்ணுவார்
இனி எனக்கென்றுமே தாழ்வு இல்லையே – வனாந்திர

#tamilchristiansongs #tamildevotionalsongs #songsofcomfort #rajansministryupdates #lyrics #Suresh_Rajan #Grace_Ida_Rajan #tamilchristiansong #tamilchristianhymn #tamiloldsong
-------------------------------------------------------------------

Комментарии

Информация по комментариям в разработке