Atma Bodha - 1 [ஆத்மபோதம்]

Описание к видео Atma Bodha - 1 [ஆத்மபோதம்]

இங்கு ஸ்ரீ சங்கரரின் ஆத்மபோதம் என்ற இந்த நூல் (68 சுலோகங்கள் கொண்டது) அழகிய பற்பல உவமைகளின் மூலமாக, அரிய பல வேதாந்த தத்துவத்தின் ஆழமான உட்பொருள் கருத்துக்களை படிப்படியாக அனைவருக்கும் அற்புதமாக விளக்கிச் செல்கிறது.

ஸ்ரீசங்கரரின் சீடரான பத்மபாதர் இந்நூலுக்கு சிறப்பான விளக்க உரையொன்றையும் எழுதியிருக்கிறார்.

ஆகவே, ஞானத்தேடலில் ஆரம்பப் படிநிலைகளில் உள்ளவர்களும் கற்றுப் புரிந்துகொள்ளும் படியான ‘லகு ப்ரகரணம்’ (எளிய தத்துவநூல்) என்று இந்த நூல் கூறப்படுகிறது.

ஒருவன் ஆத்மஞானத்தை அடைய வேண்டுமென்றால், அதற்கு வேதங்கள்தான் இறுதி நிலையில் இருக்கின்றதென்று அறிந்து, அதற்கான சாஸ்திரங்களான “பிரஸ்தானத் த்ரயம்” என்று கூறப்படுகின்ற பகவத்கீதை, பிரம்மசூத்திரம், மற்றும் உபநிஷதங்கள் என இவைகள் மூன்றும் அவனுக்கு வழி காட்டக்கூடிய மிக அரிய நூல்கள் என ஆன்றோர்கள் பலரும் பரிந்துரைக்கின்றனர்.

இதற்கும் முன்பாக “பிரகரண கிரந்தங்கள்” என்னும் முதல் நிலையில் பகவான் ஸ்ரீஆதிசங்கரர் இயற்றிய ஆத்ம போதம், தத்வபோதம் போன்ற நூல்கள் நாம் எளிதில் ஞானத்தை அடைய மேலும் உதவி செய்கின்றன. சாதாரண மக்கள் புரிந்துகொள்வதற்கு இவைகள் மூன்றையும் ஆராய்ச்சி நூல்கள், பாட நூல்கள், வழிகாட்டி அல்லது கையேடு என்று மூன்று நிலைகளில் இருப்பதாக ஒப்பிட்டுச் சொல்லலாம்.

Комментарии

Информация по комментариям в разработке