Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть சன்னலோர உப்புக்காற்றே 4K |

  • Latheefa
  • 2019-04-03
  • 384
சன்னலோர உப்புக்காற்றே 4K |
4k4k tv4k videotv 4k4k resolution4k ultra hd4k demosony 4k4k hdr4k video ultra hdflex 4k4k test节点 4ktravel 4knorway 4kvideos 4kbest 4k tvsweden 4k4k aerial4k videos4k trailerlofoten 4knew york 4ktrailer 4k4k youtubesony 4k democosta rica 4k4k 60fps videolg 4k oled demoel salvador 4k4k relax video4k documentary4k buyers guidewhat 4k tv to buynews
  • ok logo

Скачать சன்னலோர உப்புக்காற்றே 4K | бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно சன்னலோர உப்புக்காற்றே 4K | или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку சன்னலோர உப்புக்காற்றே 4K | бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео சன்னலோர உப்புக்காற்றே 4K |

சன்னலோர உப்புக்காற்றே

வியாபார வர்த்தகத்திற்கு சென்னைமாநகர் பயணமும்

வாலிபத்தை அடகு வைக்கும் வெளிநாட்டு பயணமும்

வசதியான பிள்ளைகளின் படிப்பிற்கான பயணமும் என‌

எல்லோரையும் வாரிக்கொண்டு போகும் எங்களூர் ரயில் பயணம்

சூரியன் அஸ்தமித்த பின் சுறுசுறுப்பாய் எங்களூருக்கு வரும் ரயில்

அதை தோரணம் கட்டி வரவேற்கும் அந்த ஆல மர விழுதுகள்

வீட்டின் நாடித்துடிப்பை நறுக்கென்று சொல்லும் கடிதங்கள்

அதை எப்படியும் உரிய பயணியிடம் கொண்டு வந்து சேர்க்கும் தொனா.கானா.

நாயன் துணை என பிறையோடு 786 ஆரம்பித்து அனைத்தும் சொல்லும் கடுதாசி

மனிதநேயமும், அவரவர் மதம் பேணும் மானுடமும் வாழ்ந்த அற்புத காலம்

நிறைமாத கர்பிணியாய் தன் மடியில் பில்லை சுமக்கும் குதிரை வண்டிகள்

எத்தனைதான் கரிய நிலக்கரி புகையை நீ ஊதித்தள்ளி தினம்தினம் வந்தாலும்

ஒரு போதும் பூமி உன்னால் சூடானதில்லை சுற்றுசூழல் மாசடைந்ததில்லை

உச்சநீதிமன்றம் போல் உயரிய தீர்ப்பை உடனுக்குடன் வழங்கும் வீட்டுக்கொரு அப்பா

அந்த வெத்துல பாக்கு சுறுக்கு டப்பாவில் எல்லா சொத்து சுகம் வைத்திருக்கும் பெரியம்மா/வாப்புச்சா

காலைச்சந்தோசங்கள் சொந்த பந்தங்களாய் வந்திறங்கும்

மாலைச்சோகமாய் சொந்த ஊர் விட்டு பிரியும் பரிவுகள்

ஹஜ்ஜுக்கு போகும் ஹாஜிமார்களை வழியனுப்ப

கழுத்தில் மல்லிகைப்பூ மாலையும் நம்மோடு கூட வரும்

எத்தனை துக்கம் தொண்டை அடைக்கும் கண்ணீரையும்

ஆனந்தம் ஆர்பரிக்கும் ஆரத்தழுவல்களையும் கண்ட என்னூர் ரயிலடி

அதை அனுபவித்த எத்தனை சொந்தங்களும் பந்தங்களும் இன்று

வாயடைத்து போய் உறங்குகின்றனர் அவரவர் அடக்கஸ்தலத்தில்

மீண்டும் அதிவேக ரயில் அகலப்பாதையில் ஓடக்கண்டு

அந்தநாள் நினைவுகளெல்லாம் அடைமழைபோல் கொட்டத்தான் செய்யும்

இந்த கண்கொள்ளாக்காட்சிகள் கண்கொள்ளாமலேயே சென்றிடுமோ

என்ற ஏக்கத்தை அப்படி செல்லாது நீ உன் வாழ்நாளில் கண்டிடுவாய் என‌

நமக்கெல்லாம் வாய்ப்பளித்த அந்த வல்லோனை புகழ்ந்து வணங்கிடுவோம்

அவனுக்கே புகழனைத்தும் என போற்றி முயற்சித்த எல்லா நல்லுள்ள‌ங்களுக்கும்

நம் மனமார நன்றிகளை மனித நேயத்தோடு கூற மறவோம்!

அலைபேசியும் இல்லை, ஆண்ட்ராய்டும் இல்லை, ஐ.எம்.ஓ இல்லை,

முகப்புத்தகம் இல்லை, வாட்ஸப் இல்லை, மெசஞ்சர் இல்லை

ஆனந்தமும் ஆரோக்கியமும் அங்குமிங்கும் பஞ்சமின்றி இருந்த காலம்

எல்லாம் எவ்விதத்திலும் அழித்து கிழித்தெறிய இயலா பதிவுப்புத்தகமாய்

உள்ளத்தில் வைர ஊசி கொண்டு பதியப்பட்டவைகளல்லவோ?

பிரியமானவனை பிரிந்தவள்களும், பிரியமானவளை பிரிந்தவன்களும் என‌

ஏக்கங்கள் ஆயிரம் பெரும் தாக்கங்களாய் தாங்கி நிற்கும் என்னூர் ரயில் பயண சரித்திரம்

இது வரைபடத்திலிருந்து காணாமல் போன அந்த அத்திப்பட்டி சரித்திரமல்ல‌

ஆயிரமாயிரம் ஆனந்த ஆவல் தரும் அதிராம்பட்டினத்தின் அரிச்சுவடி

இக்கண் மூடி மண் மூடும் காலம் வரை இந்நல்நினைவுகள்

உள்ளுக்குள் ஊஞ்சல் கட்டி ஒவ்வொன்றாய் ஆடிப்பாடும்

அதற்கு நம்மூர் கடலின் உப்பங்காற்றே தளர்வின்றி தாலாட்டு பாடும்

என்றென்றும்.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • American Adirai Forum meeting at Vallejo mosque California
    American Adirai Forum meeting at Vallejo mosque California
    1 год назад
  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]