கன்னி லக்கினத்தாரின் வாழ்க்கை துணை Spouse of Virgo Lagna

Описание к видео கன்னி லக்கினத்தாரின் வாழ்க்கை துணை Spouse of Virgo Lagna

அன்புள்ள யாமி குடும்பத்தினருக்கு வணக்கம்,
உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான ஒரு தகவல். நேற்று நாம் நம் குழுவுடன், ஒரு கிராமத்திற்குச் சென்றோம், பழங்குடியினர் குடியேற்றங்களைக் கொண்ட வனப்பகுதி அது. இப்பகுதியில் சென்று பார்த்தபோது தான் தெரிந்தது அங்கு பெண்கள் மட்டுமல்ல, பெண் குழந்தைகளும் உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர் என்று.

அரசு அவர்களுக்கு பள்ளி, ஆசிரியர்கள், சீருடைகள், புத்தகங்கள் மற்றும் கல்வி தொடர்பான பிற இலவசங்களை வழங்கியுள்ளது. ஆனாலும் கூட, பள்ளிக்குச் செல்லும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கங்களில் தான் உள்ளது, அவர்களில் பெரும்பாலானோரும் குறைந்த வருகைப்பதிவு கொண்டுள்ளனர். அங்குள்ள குழந்தைகளுக்கான முக்கிய தடைகள், பள்ளிக்குச் செல்ல போக்குவரத்து மற்றும் காலை உணவு. நாங்கள் அந்த பகுதி முழுவதும் சென்றோம், தினமும் அந்த பகுதியில் கால்நடையாக பயணம் செய்து பள்ளி செல்வது எவ்வளவு கடினம் என்பதை நாங்கள் அனுபவித்துப் பார்த்தோம். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு மாணவி, 9 ஆம் வகுப்பில் படிக்கிறாள், சூரிய உதயத்திற்கு முன்பே வீட்டிலிருந்து தொடங்கி, காடுகளின் வழியாக நடந்து சென்று (யானைகள் அடிக்கடி வருகை தரும் இடம் அது), பரிசலில் ஆற்றைக் கடந்து காலை 9 மணிக்குள் பள்ளியை அடைகிறாள். அவள் ஒரு பிரகாசமான மாணவி, கடந்த 3 ஆண்டுகளாக தினமும் பள்ளிக்குச் செல்வதற்காக இதுபோன்ற தடைகளைத் தாண்டி வருகிறாள் அந்த மாணவி. இந்த குழந்தைகள் மிக விரைவாகவே வீட்டிலிருந்து புறப்படுகிறார்கள் என்பதால், அவர்களால் காலை உணவை உட்கொள்ள முடிவதில்லை. சத்துணவு திட்டம் மூலம் பள்ளியில் அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு குழந்தைகளின் இறுதித் தேர்வு முடியும் வரை, அவர்கள் வசதியாக பள்ளிக்குச் செல்வதற்கு பின்வரும் விஷயங்களைச் செய்ய நமது குழு உறுதியளித்துள்ளது.

1. மே மாதத்தில் அவர்களின் இறுதித் தேர்வு முடியும் வரை தினமும் 11 மாணவர்களுக்கு காலை உணவை நாம் வழங்குவோம் (இப்போதைக்கு கோவிட் 19 கட்டுப்பாடுகள் காரணமாக, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வருகிறார்கள், இரு வகுப்புகளிலிருந்தும் மொத்தம் 11 மாணவர்கள் உள்ளனர்). வாரத்திற்கு, நாம் அவர்களின் உணவுக்கு 1400 ரூபாய் வழங்கவிருக்கிறோம்.
2. பள்ளிக்கு தினசரி போக்குவரத்து தேவைப்படும் 7 மாணவர்களுக்கு நாம் போக்குவரத்து வசதி செய்து தர உள்ளோம். பள்ளிக்கு அழைத்துச்செல்வது மற்றும் திரும்புவது என நாளொன்றுக்கு, ரூ. 400 ரூபாய் இதற்காக தர உள்ளோம்.

நேரில் சென்று பார்வையிட்ட பிறகு மற்றும் உரிய விவாதத்திற்குப் பிறகு நாம் செலவு செய்யும் தொகை உள்ளிட்டவற்றைத் திட்டமிட்டுள்ளோம்.

நாம் செலவழிக்கும் தொகை எவ்வளவு, என்னென்ன செய்யப்பட்டது என்ற அறிக்கை, ஒவ்வொரு வாரத்தின் முடிவிலும் குடும்பத்திற்கு தெரிவிக்கப்படும்.

இந்த கிராமத்திற்கு அடிக்கடி செல்லவும், அவர்களின் உட்புற மற்றும் வெளிப்புற வளர்ச்சிக்கு பங்களிக்கவும் திட்டமிட்டுள்ளோம். இது குறித்த கூடுதல் தகவல்கள் பின்னர் விரிவாக பகிரப்படும்.

உங்கள் பரிந்துரைகளை நாங்கள் வரவேற்கிறோம்.

வாழ்க வளமுடன்

ஆஸ்ட்ரோ பிருந்தா
நிறுவனர்,
யாமி அறக்கட்டளை

🌹+919025679278🌹

Комментарии

Информация по комментариям в разработке