பிஸ்மில்லாஹ்...
03/12/2025, புதன்கிழமை.
★ மழை வெள்ளத்தால் ஊர்களை அழிக்கிறாயே இது ஏன் இறைவா?
★ திருக்குர்ஆன்:11:117. ( நபியே ! ) உம்முடைய இறைவன் ஊர்களை – அதனுடைய மக்கள் ( தம்மையும், பிறரையும் ) சீர்திருத்துபவர்களாக இருக்கும் நிலையில் அநியாயமாக- அழிப்பவனாக இல்லை.
*திருக்குர்ஆன்:30:41*.மனிதர்களுடைய கைகள் சம்பாதித்த (கெடுதலான)வற்றின் காரணத்தால் கடலிலும், தரையிலும் (நாசமும்) குழப்பமும் பரவிவிட்டது; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.
★ஒரு ஊரை நீ அழிக்கும் போது அதில் நல்லவர்களும் இருப்பார்களே இறைவா?
*திருக்குர்ஆன்:8:25*.நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
_______________________
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான அன்னை ஆயிஷா (ரலி) கூறினார்கள்:
நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் (பிளேக், காலரா போன்று) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன்.அதற்கு அவர்கள் "அது, தான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்புகிற வேதனையாகும். *அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான்*" என்று தெரிவித்தார்கள்.
மேலும் , " கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமையுடனும் , இறைவெகுமதியை விரும்பியவராகவும் அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள(விதிப்படி நம்மைப் பீடிக்கவிருப்ப) தைத் தவிர, வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்" என்று கூறினார்கள்.
நூல் : புஹாரி , 3474
_________________________________________
★ விடுதலைப் புலிகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு இலங்கை தமிழ் முஸ்லிமின் பதிவு:
★ஒரு சில முஸ்லீம்கள் தவறிழைத்தார்கள் என்பதற்காக முழு முஸ்லிம்களையும் வெளியேற்றி புலிகள் இலங்கை தமிழ் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்த செயலை யாரும் என்றும் நியாயப்படுத்தக் கூடாது என்பதற்காக தான் இந்த பதிவு.
★ ஒரு பாலச்சந்திரனுக்காக துடிதுடிப்பவர்கள் , 30 பாலச்சந்திரன்களை பள்ளிவாசலில் சுட்டும், வெட்டியும் புலிகள் கொன்ற போது ஏன் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள்?
★என்ன பாவம் செய்தான் 12 வயது பாலகன் என்று கேட்பவர்கள் ,என்ன பாவம் செய்தார்கள் பள்ளிவாசலில் தொழுகையில் இருந்த இந்த 30 பாலகர்கள் என்று கேட்க ஏன் மறுக்கிறார்கள்?
★1990 ஒக்டோபர் 30 காலை 6 மணி
வீதியெங்கும் புலிகளின் ஒலிபெருக்கிகள் அலறின,சுமார் 8 மணியளவில் 1000 - ற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புலிகள் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சுற்றி வளைத்தனர்.
★1990ல் பாசிசப் புலிகள் சுமார் ஒரு இலட்சம் வடக்கு முஸ்லிம்களை ஒரு சொப்பிங் பேக்குடன், வெறும் 2 மணி நேர அவகாசம் கொடுத்து, துப்பாக்கி முனையில், பலாத்காரமாக வெளியேற்றியதை வெறும் வார்த்தைகளில் “ஆமாம் தவறு செய்து விட்டார்கள்” எனச் சொல்லிவிட்டு நீங்கள் இருந்து விடமுடியாது.
★தமது பில்லியன் கணக்கான பெறுமதியுடைய கடைகள், சொத்துக்கள், பணம், நகைகள், கால்நடைகள், வாகனங்கள் காணி,வீடு என எல்லாத்தையும் பாசிசப் புலிகள் பிடுங்கிக் கொண்டு இவர்களை விரட்டியடித்த போது இவர்கள் அதள பாதலத்தில் விழுந்தார்கள்.
★ஆண்டுகள் பல கடந்த நிலையிலும்கூட அந்த கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே என்னவென்று தெரியாத நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.
★35 வருடங்கள் கடந்தும் இன்னும் அந்த கோர சம்பவத்தில் இருந்து மனோ ரீதியாக, பொருளாதார ரீதியாக, கல்வி ரீதியாக மீள முடியாமல் ஆயிரக்கணக்காக முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
★விரட்டியடித்தது ஒரு புறம். மறுபுறம் 2009ல் யுத்தம் முடிவுற்ற போது தமது வடக்குத் தாயகத்தை நோக்கி திரும்பிய அதே முஸ்லிம் மக்களை அங்கு குடியேற விடாது தடுத்த, இன்று வரை தடுத்து வருகின்ற இலங்கை தமிழ் அரச அதிகாரிகள் எவ்வளவு கேடு கெட்டவர்களாக இருக்க வேண்டும்?
★தமது நிலபுலன்களுக்கும், காணிகள், அசையா சொத்துக்களுக்கும் உரிய பத்திரங்களை யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு கச்சேறிகளில் இருந்து குறித்த முஸ்லிம் மக்களை எடுக்க விடாமல் அவற்றை திட்டமிட்டு அழித்து, காணாமல் செய்து, அவர்களை தமது தாயகத்தில் குடியேற விடாமல் இன்று வரை ரகளை செய்து வருகின்றது வடக்கில் உள்ள ஈனப் பிறவிக் கூட்டம் ஒன்று. அதற்கு என்ன சொல்லப் போகின்றீர்கள் ?
★சிங்கள அரசு 1983 இல் தமிழர்களை விரட்டியடித்ததை விட, புலிகள் 1990 இல் முஸ்லிம்களை 2 மணித்தியாலயத்தில் தம் பிறப்பிட பூமியிலிருந்து விரட்டப்பட்ட இனச்சுத்திகரிப்பு என்பது எப்போதும் மன்னிக்கவே முடியாதது.
★ஒரு சிறுபான்மையாக இருந்த இனம், பெரும்பான்மையினரின் அடக்குமுறைக்கெதிராகப் போராடியவர்கள், தமக்கு சிறுபான்மையினராக வாழ்ந்து வந்த சமூகத்தின் மீது அதிகாரம், வன்முறை, அடக்குமுறை, இனஅழிப்பு என மேற்கொண்டதன் நியாயம் என்ன?
★ஒரு சிலர் தவறிழைத்தார்கள் என்பதற்காக முழு முஸ்லிம்களையும் வெளியேற்றி இனச்சுத்திகரிப்பு செய்த செயலை யாரும் என்றும் நியாயப்படுத்த முடியாது.
★இலங்கையில் வாழும் பணக்கார முஸ்லிம் சகோதரர்கள் மீதும் புலிகளுக்கு வெறுப்பு இருந்தது. சிங்களவன் யாழ்பாண நூலகத்தை எரித்தற்கும், புலிகள் முஸ்லிம் சகோதர்களை தாம் பிறந்து வாழ்ந்த இடத்தை விட்டு விரட்டியடித்ததற்கும், புலிகளின் பள்ளிவாசல் கொலைகளுக்கும் என்ன வித்தியாசம் கண்டீர்கள்? மனித தன்மையுள்ளோர் இதனை ஏற்க முடியுமா? ///
Информация по комментариям в разработке