Karupar Nagarin Velicham | Gana Vinoth | Se Rajesh | RIP | 2024

Описание к видео Karupar Nagarin Velicham | Gana Vinoth | Se Rajesh | RIP | 2024

கருப்பர் நகரின் வெளிச்சம்

Sung By - Gana Vinoth
Lyricist - Se Rajesh Writer
DOP - Hari HP
Editz - Praveen JPS

#JAIBHIM

அண்ணன் ஆம்ஸ்ட்ராங் பாடல்
🖋செ. ராஜேஷ் 🖋

பல்லவி

கருப்பர் நகரின் வெளிச்சம்
இன்று இரண்டு போனது

இருண்டு போனது
வாழ்வே வறண்டு போனது

நீ வருவாய நா கண் திறந்து
உங்க வழியில் வரோம் பின் தொடர்ந்து

சரணம் 1

பல வக்கீல்களை உருவாக்கி
நீ வளர்த்து விட்ட வழிகாட்டி
இனி உதவி என்றால் யாரிடம் போய்
கேட்போம் அண்ணா கைநீட்டி
நின்னு போச்சு சமத்துவ மூச்சி
பள்ளம் தோண்டி புதைச்சியாச்சு
அழுவுறோமே துடியா துடிச்சு
வரவே மாட்டியா கண்கல முழுச்சி
ஒரு கஷ்டம் என்றால் நீ வருவ
இப்ப இழந்துட்டோமே எங்கள் பேரறிவு

கருப்பர் நகரின் வெளிச்சம்
இன்று இருண்டு போனது


சரணம் 2

நல்ல போதனை சொல்லும் புத்தன் மொழி
அதை எடுத்துச் செல்லும் எங்கள் அண்ணன் வழி
நீ நடந்து சென்றால் அது புரட்சி பாதை
நீங்க இளைஞர்களின் சட்ட மேதை
எங்களோடு டைனமிக் லீடர்
மறையவில்லை இன்னும் நிலையான எண்ணம்
உங்களோட வார்த்தை படியே
கோட்டையில் ஒரு நாள் புடிக்கிறோம் கொடியே
நாங்க பறி கொடுத்தோம் எங்க வைரத்தை தான்
என்றும் மறக்க மாட்டோம் இந்த துயரத்தை தான்

கருப்பர் நகரின் வெளிச்சம்
இன்று இருண்டு போனது

சரணம் 3

நீ இருந்தியே நா எங்க துணையாக
இப்போ யார் இருக்கா அதற்கு இணையாக
உங்க பேச்சு இருக்கும் மிக கம்பீரமா
நீங்க மறைந்தது தான் மனம் நம்பிடுமா
உன்னை கொல்ல முடியும்
ஆனால் வெல்ல முடியாது ஒரு போதும் அண்ணா
சென்னை நகர வரலாற்றிலே
நீதான் என்றும் முடிச்சுடா மன்னா
மறைந்தாலும் உன்னை மறக்க மாட்டோம்
இனி கோழைகளா நாங்க இருக்க மாட்டோம்

கருப்பர் நகரின் வெளிச்சம்
இன்று இருண்டு போனது

      ஜெய் பீம்

Комментарии

Информация по комментариям в разработке