#germany #hitler #holocaust #jews # Nuremberg Laws #worldwar2 #ww2 #poland #nazi #germans #jewrefugees #Munich #berlin #communist #MeinKampf #CitizenshipLaw #imprisonment #CAA #NRC #Racism
முதல் உலகப்போரில் தோல்வியுற்ற ஜெர்மனி, தனது நிலப்பரப்பின் பெரும் பகுதிகளை அண்டை நாடுகளிடம் இழந்தது. வெர்சைல்ஸ் உடன்படிக்கையின் அடிப்படையில், போரின் இழப்புகளை ஈடு செய்ய, 33 பில்லியன் டாலரை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று ஜெர்மனி பணிக்கப்பட்டது.
ஏற்கனவே போரின் காரணமாக மிகப்பெரிய பொருளதார நெருக்கடியில் சிக்கித்தவித்த ஜெர்மனி, ஏற்றுக்கொண்டபடி இழப்பீட்டை வழங்க முடியாததால், தனது நிலபரப்பில் மேலும் சில பகுதிகளை இழந்தது.
போரில் ஜெர்மனி படுதோல்வியடைந்ததும், பல மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க ஜெர்மனி பணிக்கப்பட்டதும், ஜெர்மன் நிலப்பரப்பை அண்டை நாடுகள் துண்டு போட்டுக்கொண்டதும் தேசியவாதியான ஹிட்லரை கோபமடையச் செய்தது. அந்த கோபம், அவரை தீவிர வலதுசாரி தேசியவாதியாக மாற்றியது.
2. அதிபர் பொறுப்பை கைப்பற்றினாலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால், ஹிட்லரின் கைகள் கட்டப்பட்டிருந்தன. அவரால் நினைத்ததை செய்ய முடியவில்லை. இந்த சமயம், ஜெர்மன் நாடாளுமன்றத்தில் ஒரு தீ விபத்து ஏற்பட்டது. இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த ஹிட்லர், கம்யூனிஸ்ட்களே தீ விபத்திற்கு காரணம் என்று கூறினார். ஆட்சியை கவிழ்க்க அவர்கள் செய்த சதி என்றும் கம்யூனிஸ்ட்கள் மீது குற்றம்சாட்டினார். இந்த பொய் பிரச்சாரத்தை பயன்படுத்தி, மக்கள் பாதுகாப்பு சட்டம் என்ற கறுப்பு சட்டத்தை, தந்திரமாக நிறைவேற்றினார்.
இந்த சட்டம், அரசை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்கும் உரிமைகளை பறித்தது. இந்த சட்டத்தை பயன்படுத்தி, நாஜி கட்சிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்ட கம்யூனிஸ்ட்டுகளையும், ஜனநாயகவாதிகளையும் ஹிட்லர் கைது செய்து சிறையில் அடைத்தார். நாஜிக்களுக்கு எதிராக எழுதிய பத்திரிகைகளுக்கு தடை விதித்தார்.
3. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதியன்று, நியூரம்பர்க் பேரணி என்ற பெயரில், நாஜி கட்சி தங்களின் கொள்கைகளை பறைசாற்றும் நாளை கொண்டாடுவது வழக்கம். நாஜி கட்சி ஆட்சியை பிடித்தபின் நடைபெற்ற முதல் நியூரம்பர்க் பேரணியில், ஜெர்மனியில் வாழும் யூதர்களின் ஒட்டுமொத்த உரிமையையும் பறிக்கும் இரண்டு கொடூர சட்டங்களை ஹிட்லர் அறிவித்தார்.
ஜெர்மன் வம்சாவழியை பாதுகாத்தல் மற்றும் மேன்மை படுத்துதல் என்பது முதல் சட்டம். இதன் படி, ஜெர்மனியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையில் திருமணம் தடை செய்யப்பட்டது. இதற்கு முன்னர் நடைபெற்ற திருமணங்களும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்த சட்டப்படி, யூதர்கள் தங்கள் வீடுகளில் 45வயதிற்கு குறைவான ஜெர்மானிய பெண்களை வேலைக்குஅமர்த்த தடை விதிக்கப்பட்டது. ஜெர்மன் தேசிய கொடியை எந்த வகையிலும் யூதர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதுடன், மற்றவர்களிடமிருந்து தங்களை தனித்து காட்டும் வகையில், குறிப்பிட்ட அடையாளத்தை யூதர்கள் அணிய வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.
4
1935ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தத. அன்று முதல், யூதர்களாக கண்டறியப்பட்ட அனைவரும் ஜெர்மன் குடியுரிமையை இழப்பதாக ஹிட்லர் அறிவித்தார். அடுத்த 15 நாட்களில் கருப்பின மக்களுக்கும் ஜிப்சி இன மக்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது. அவர்களும் ஜெர்மன் குடியுரிமையை இழந்தனர்.
இந்த சட்டத்தின் விதிகளை மீறுபவர்களைகடுமையாக தண்டிப்பதற்கும், வதை முகாம்களில் அடைப்பதற்கும் ஏற்றவகையில் விதிகள் வகுக்கப்பட்டன. ஆகவே, ஜெர்மானியர்கள், யூதர்களுடன் பழகுவதையும், அவர்களுடன் கொடுக்கல், வாங்கல் மேற்கொள்வதையும் அறவே நிறுத்திக்கொண்டனர். ஹிட்லரின் இந்த கொடுமையான சட்டத்தை, ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியும், சில கத்தோலிக்க தேவாலயங்களும் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், அந்த எதிர்ப்புகள் எந்தவகையிலும் பயனளிக்கவில்லை.
5. குடியுரிமையை இழந்து, சொத்துக்களை இழந்த யூதர்கள், ஹிட்லரின் ஜெர்மனியில் நடை பிணமாகவே நாட்களை கழித்தனர். இனி இறுதியாக அவர்களிடம் எஞ்சியிருந்த சொத்து உயிர் மட்டுமே. அதையும் பறிப்பதற்கு நாள்பார்த்து காத்திருந்தார் ஹிட்லர்.
1939ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஹிட்லரின் ராணுவம் போலந்தை ஆக்கிரமித்ததை தொடர்ந்து இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. இதுபோன்ற ஒரு தருணத்திற்காக காத்திருந்த ஹிட்லர், யூதர்களை அவர்களின் வாழ்விடத்திலேயே சிறையில் அடைக்கும் திட்டத்தை செயல்படுத்தினார். ஜெர்மனி மற்றும் ஹிட்லரின் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளின் அனைத்து நகரங்களிலும், யூதர்களுக்கான தனி குடியிருப்பு உருவாக்கப்பட்டது. அந்த குடியிருப்பை தாண்டி குறிப்பிட்ட சில நேரத்தை தவிர யூதர்கள் வெளியில் வரக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாற்றப்பட்ட யூதர்கள், ஹிட்லரின் ஆட்சி அதிகாரத்தில்,வாழ்வதை விட சாவதே மேல் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். யூதர்களின் மற்ற எந்த விருப்பத்தையும் நிறைவேற்றாத ஹிட்லர், இந்த விருப்பத்தை மட்டும் உடனே நிறைவேற்றத் தொடங்கினார்.
Информация по комментариям в разработке