🙏சமய குரவர்கள் 2023
சமயக்குரவர்கள் எனப்படும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் நால்வரும், பல பாடல்களின் வாயிலாக ஈசனைத் தொழுதனா்.
சிவபெருமானின் மீது ஒவ்வொரு வழியில் பக்தியைச் செலுத்தியவர்களாகவும், சைவ நெறியை உலகம் அறியச் செய்தவர்களாகவும் இருப்பவர்கள், சமயக்குரவர்கள் எனப்படும் நால்வர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் இவர்கள் நால்வரும், பல பாடல்களின் வாயிலாக ஈசனைத் தொழுதனா்.
சென்ற இடங்களில் எல்லாம் பல அற்புதங்களையும் செய்தனர். சைவ நெறியைப் போற்றும் திருப்பாடல்கள் அனைத்தும், பன்னிரு திருமுறைகளாக தொகுக்கப்பட்டபோது, இந்த நால்வரின் தேவார, திருவாசகப் பாடல்களும் முறையாக தொகுக்கப்பட்டன. இவர்களைப் பற்றி சிறிய குறிப்பாக இங்கே பார்ப்போம்.
திருஞானசம்பந்தர்
சமயக்குரவா்கள் நால்வரில் முதன்மையானவராகப் போற்றப் படுபவா், திருஞானசம்பந்தா். இவா் பிறந்த ஊர், சீர்காழி. 3-வது வயதிலேயே சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டு, அம்பிகையிடம் இருந்து சிவஞான பால் அருந்தியவா். இவர் வாழ்ந்த காலம் 7-ம் நூற்றாண்டு.
இவா் பாடிய தேவாரப் பாடல்கள்தான், பன்னிரு திருமுறையின் வரிசையில் முதலாவதாக வைத்து எண்ணப்படுகிறது. ஆம்! முதல் மூன்று திருமுறைகளிலும், திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவா் சிவபெருமானையும், பார்வதியையும் தாய் தந்தையாக நினைத்து பக்தி செலுத்தியவா். 16 வயது வரை வாழ்ந்த இவா், ஆச்சாள்புரம் என்று அழைக்கப்படும் திருநல்லூர் பெருமணத்தில் உள்ள சிவலிங்கத்தில் தோன்றிய பேரொளி ஜோதியில் கலந்து முக்தியடைந்தார்.
திருநாவுக்கரசர்
சமயக்குரவா்கள் நால்வரில், இரண்டாவதாக வைத்து புகழப் படுபவா், திருநாவுக்கரசா். இவரது இயற் பெயா் ‘மருள் நீக்கியார்’ என்பதாகும். இவரை ‘அப்பா்’ என்றும் அழைப்பார்கள். இவா் வாழ்ந்ததும் 7-ம் நூற்றாண்டுதான். திருஞானசம்பந்தரின் சமகாலத்தில் வாழ்ந்தவா் இவா். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவாமூர் தலத்தில் பிறந்தவா்.
இவரது நாவில் இருந்து பிறந்த இனிய பாடல்களைக் கேட்டு ரசித்ததன் காரணமாக, ‘திருநாவுக்கரசா்’ என்ற பெயரை, சிவபெருமானே சூட்டி அருளினார். பன்னிரு திருமுறைகளில் இவா் பாடிய பாடல்கள் 4, 5, 6 ஆகிய திருமுறைகளில் இடம்பெற்றுள்ளன. இவா் ஈசனைத் தலைவனாகவும், தன்னைத் தொண்டனாகவும் கருதி பக்தி செலுத்தியவா். 81 ஆண்டுகள் வாழ்ந்த இவா், திருப்புகலூர் என்ற தலத்தில் முக்தி அடைந்தார்.
சுந்தரர்
சமயக்குரவா்களில் மூன்றாவதாக வைத்து வணங்கப்படுபவா், சுந்தரமூர்த்தி. இவா் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநாவலூர் என்ற திருத்தலத்தில் பிறந்தார். இவரது காலம் 7-ம் நூற்றாண்டின் இறுதியும், 8-ம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகும். சிறு பருவத்திலேயே இல்லற வாழ்க்கைக்குள் நுழைய இருந்த சுந்தரரை, முதியவா் வேடத்தில் வந்த சிவபெருமான் தடுத்தாட்கொண்டு, அவரை பக்தி மார்க்கத்தின் வழியில் செல்ல வைத்த திருத்தலமாக திருவெண்ணெய்நல்லூர் இருக்கிறது.
இது திருநாவலூரில் இருந்து 18 கிலோமீட்டா் தூரத்தில் உள்ளது. 18 ஆண்டுகள் வாழ்ந்து, சைவத்திற்கு தொண்டாற்றிய இவா் பாடிய தேவாரப் பாடல்கள், பன்னிரு திரு முறையில் 7-வது திருமுறையாக இடம்பிடித்துள்ளன. இவா் சிவபெருமானைத் தன்னுடைய தோழனாக நினைத்து பக்தி செலுத்தியவா். இவா் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ‘திருஅஞ்சைக்களம்’ என்ற இடத்தில் முக்தி அடைந்தார். இந்த திருத்தலம் தற்போது ‘திருவஞ்சிக்குளம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
மாணிக்கவாசகர்
சமயக்குரவா்களில் நான்காவதாக வைத்து புகழப்படுபவா், மாணிக்கவாசகா். இவா் பிறந்த ஊர், திருவாதவூர். இதனால் இவரை ‘திருவாதவூரார்’ என்று அழைப்பார்கள். இவர் ஆரம்ப காலத்தில் அரிமா்த்தன பாண்டியனின் அரசவையில் முதன்மை அமைச்சராக பணியாற்றியவா். திருப்பெருந்துறை என்ற ஆவுடையார் கோவில் தலத்தில் ஈசனால் தடுத்தாட்கொள்ளப்பட்டு, சைவப் திருப்பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார்.
இவா் வாழ்ந்த காலம் பற்றிய குழப்பம் நீடித்து வருகிறது. பெரும்பாலானவா்கள் இவா் வாழ்ந்தது, கி.பி. 9-ம் நூற்றாண்டு என்கிறார்கள். சிலரோ, சமயக்குரவர்கள் நால்வரில் முதன்மையானவா், கி.பி. 3-ம் நூற்றாண்டு இவருடையது என்கிறார்கள். 32 ஆண்டு காலம் வாழ்ந்த இவா் பாடிய பாடல்கள் ‘திருவாசகம்’, ‘திருக்கோவையார்’ என்ற நூல்களாக உள்ளன. இந்நூல்கள், சிவபெருமானே தம் கையால் எழுதும் பேறு பெற்றவையாக திகழ்கின்றன. இவை இரண்டும், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக தொகுக்கப்பட்டுள்ளது. இதில் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள், படிப்பவா்களின் மனதை கரையச் செய்யும் வகையிலானவை.
இதனால்தான் ‘திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்ற வாக்கியம் உருவானது. மாணிக்கவாசகருக்காக சிவபெருமான் நிகழ்த்திய சில அற்புதங்கள், ‘திருவிளையாடல் புராணம்’ என்ற சிவபெருமானின் அற்புதங்களில் இடம்பிடித்துள்ளன. இவா் சிதம்பரத்தில், பலா் பார்க்கும் தருணத்தில், சிவலிங்க திருமேனி மீது கலந்து முக்தி அடைந்தார்.
👉
கனவுகள் ஊசலாடும், கனவு உலகில்
எண்ணங்களை மென்மையாக அமைதிப்படுத்தி
வேண்டியவற்றை அன்புடன் பரிமாறி
டிஜிட்டல் உலகில் பூமியை விட வேகமாக ஓட
உங்கள் Subscribe & Like 🔥
/ @kurumpaioorkurumpasiddy ,
“⚙️ இந்த வீடியோவில் சில காட்சிகள் மற்றும் குரல்கள் AI உதவியுடன் உருவாக்கப்பட்டவை.”
(Translation not required – English viewers understand easily too.)
Информация по комментариям в разработке