Ghati Subramanya காட்டி சுப்பிரமணிய கோவில் வரலாறு

Описание к видео Ghati Subramanya காட்டி சுப்பிரமணிய கோவில் வரலாறு

காட்டி பெங்களூருவிலிருந்து சுமார் 60 கி.மீட்டர் தொலைவில் தொட்டபல்லபுரா என்ற இடத்திற்கு அருகில் காட்டி சுப்ரமண்யா கோயில் உள்ளது. இக்கோயிலின் சிறப்பு, கருவறையில் சுப்ரமணியருடன் நரசிம்மரும் இருப்பதுதான்! இந்த இரு தெய்வங்களும் பூமியிலிருந்து ஒரே சமயத்தில் தாமாக வெளிப்பட்டவை. நாகர் வழிபாட்டிற்கு இது ஒரு முக்கிய கோயிலாக விளங்குகிறது. அதனாலேயே ஆலயத்தைச் சுற்றிலும் ஏராளமான நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பாம்பு பயத்திலிருந்தும், தோஷத்திலிருந்தும் விடுபட விரும்புபவர்கள் இங்கே அதிக எண்ணிக்கையில் வந்து பரிகாரம் செய்து கொள்கின்றனர்.

நாக தோஷத்தினால் திருமணத் தடை, குழந்தைப் பேறு தடை உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் மேற்கொண்டு அந்த இரு பாக்கியங்களையும் பெறுகின்றனர். 600 ஆண்டுகள் பழமையான இக்கோயில், நடு காட்டில் உள்ளது. பெல்லாரியை ஆண்ட கோர்படே மன்னர்களால் பராமரிக்கப்பட்ட கோயில் இது. கருவறையில் ஒரே கல்லாலான ஏழுதலை நாகம்-கார்த்திகேயன்-நரசிம்மர் தரிசனம், நம்மைப் பரவசப்படுத்தும். கார்த்திகேயன் கிழக்கு பார்க்க, அவருக்கு பின்புறம் உள்ள நரசிம்மர் மேற்கு பார்க்கிறார். இருந்தாலும் பக்தர்கள் ஒரே சமயத்தில் இருவரையும் தரிசிக்க முடியும். எப்படி? கார்த்திகேயனுக்கு எதிரே நின்றுகொண்டால் பின்புறம் உள்ள மிகப்பெரிய நிலைக்கண்ணாடியில் நரசிம்மரின் பிம்பத்தை தரிசிக்க முடியும்!

கர்நாடகத்தைப் பொறுத்தவரை சுப்ரமணியரும் சரி, நரசிம்மரும் சரி, வனதெய்வங்கள். சுப்ரமணியர் பாம்பு பாதிப்புகளிலிருந்து பக்தர்களைக் காப்பவர்; சரும நோய்களை குணப்படுத்துபவர். நரசிம்மரோ காட்டில் பயணிப்போருக்கு ஏற்படும் பயத்தை விலக்குபவர்; அதுபோன்ற பயணங்களில் பாது காவலராக உடனிருந்து காப்பவர். எனினும் இத்தலத்தில் கார்த்திகேயன் எனும் சுப்ரமணியருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. இங்கு சைவ, வைணவ அர்ச்சகர்கள் ஒருங்கிணைந்து சேவை புரிவது பாராட்டுக்குரியது.

கோயில் காலை 7 முதல் 1 மணி வரையிலும் பிற்பகல் 4 முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும். மரம், செடி, கொடி, சிறு நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் கொண்ட, இயற்கை எழில் நீக்கமற நிறைந்திருக்கும் இந்தப் பகுதியில் சுப்ரமணியரின் அருளும் சேருவது பக்தர்கள் செய்த பாக்கியமே!

Комментарии

Информация по комментариям в разработке