காவடிச்சிந்து_அண்ணாமலை ரெட்டியார்_தெள்ளு தமிழுக்கு உதவும் சீலன்! Thaellu Tamizhukku Udhavum Seelan!

Описание к видео காவடிச்சிந்து_அண்ணாமலை ரெட்டியார்_தெள்ளு தமிழுக்கு உதவும் சீலன்! Thaellu Tamizhukku Udhavum Seelan!

காவடிச்சிந்து_அண்ணாமலை ரெட்டியார்_தெள்ளு தமிழுக்கு உதவும் சீலன்! Thaellu Tamizhukku Udhavum Seelan!

காதர் பாட்சா, மதம் மீறிய ஆன்மிக இசைஞானி. இஸ்லாமியப் பாடல்களை மட்டுமல்லாது, திருப்புகழ், அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து உட்பட முருகன் பாடல்களைப் பாடும் போதும் பக்திப்பரவசமாகி கண்ணீர் சிந்தி, அனைவரையும் மெய்சிலிர்க்க வைப்பார். கழுகுமலை முருகன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர்.

சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபட்டார், இந்த இசைஞானி. இவரது தேசபக்தி பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றன. ஒடுக்க நினைத்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், பொய்வழக்கு ஜோடித்து, தூக்கு தண்டனை விதித்தனர். சிறையை முருகபக்தி பாடல்களால் வழிபாடு அறையாக மாற்றினார் காதர் பாட்சா.

தூக்கு நாள். காலை 7 மணிக்கு தூக்கு. அதிகாலையில் எழுப்பப்பட்டார். “இறுதி ஆசை என்ன?” என்று கேட்கப்பட்டது. “முருகனைப் பாடித் துதிக்க வேண்டும், ஆர்மோனியம் தாருங்கள்” என்றார் காதர்பாட்சா. “இங்கு ஆர்மோனியம் இல்லையே” என்று வருத்தப்பட்டார், அவரது ரசிகரான சிறை அதிகாரி.

முருகன் திருவிளையாடல் தொடங்கியது. காதர்பாட்சாவை இறுதியாகப் பார்க்க சிறப்பு அனுமதி பெற்ற ஒரு உறவினர், ஆர்மோனியத்துடன் வந்திருந்தார். அதை வாங்கினார் காதர்பாட்சா. ‘தெள்ளு தமிழுக்குதவும் சீலன்! துதி செப்பும் அண்ணாமலைக்கனுகூலன்! வளர் செழிய புகழ் விளைத்த கழுகுமலை வளத்தைத் தேனே! சொல்லுவேனே!’ என்று தொடங்கி கந்தன் சிந்துகளைத் தொடர்ந்து பாடி மெய் சிலிர்த்தார்.

கேட்ட சிறை அதிகாரி, வக்கீல்கள், டாக்டர்கள், உறவினர் அனைவரும் கண்ணீர் சிந்தினர். பக்திப்பரவச நிலையில், தூக்கு நேரம் தாண்டியதை யாரும் கவனிக்கவில்லை. குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டினால், தூக்கிலிடக்கூடாது என்பது விதி. உள்ளன்பு நிறைந்த உண்மை பக்தர் காதர் பாட்சாவின் உயிரைக் காத்து மேலும் பல்லாண்டுகள் வாழ வைத்தார் கந்தப்பெருமான்!

பாடியவர் : கலை இளமணி தஞ்சாவூர் ச.கிர்த்திகா விகாஸ்
இசை : கலை நன்மணி ஶ்ரீமதி மைதிலி கண்ணன்

Mail @ [email protected]

Instagram : I'm on Instagram as krithismusic. Install the app to follow my photos and videos. https://www.instagram.com/invites/con...

Комментарии

Информация по комментариям в разработке