காலை 8.00 மணி DD தமிழ் செய்திகள் [14.09.2024]

Описание к видео காலை 8.00 மணி DD தமிழ் செய்திகள் [14.09.2024]

1) பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் முதல் தவணை நிதியை பயனாளிகளுக்கு நாளை விடுவிக்கிறார் பிரதமர் நரேந்திர மோதி - மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் பேட்டி

2) தேசிய பாதுகாப்புக்கான யுக்திகள் மாநாட்டை தில்லியில்‍ தொடங்கி வைத்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா - தற்கால சவால்களை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை வகுக்க திட்டம்

3) வெங்காயம் மற்றும் பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கான கொள்கையில் மேற்கொண்ட சீர்திருத்தம் காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் - மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல்

4) நாட்டு நலனுக்கு எதிராக செயல்படுபவர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது - குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கருத்து

5) தமிழகத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 71 புதிய சாலைகள் அமைக்க திட்டம் - தஞ்சாவூரில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி

6) ஜி எஸ் டி குறித்து சிறு வணிகர்கள் தெரிவிக்கும் யோசனைகளுக்கு மதிப்பு அளிக்கப்படுவதில்லை - மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம்

7) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை கோவை தொழிலதிபர் சந்திப்பு தொடர்பான வீடியோ வெளியான விவகாரம் - வருத்தம் தெரிவித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

8) மறைந்த மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு இன்று பொது மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு - தில்லியில் கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்படுகிறது

9) குரூப் 2, 2 ஏ பிரிவுகளில் காலியாக உள்ள இரண்டாயிரத்து 323 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு - மாநிலம் முழுவதும் 7 லட்சத்து 93 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

10) ஆடவர் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கிப் போட்டித் தொடர் - இறுதி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது இந்தியா

Комментарии

Информация по комментариям в разработке