Kupita Odivaruvalam கூப்பிட்டா ஓடி வருவாளா

Описание к видео Kupita Odivaruvalam கூப்பிட்டா ஓடி வருவாளா

இருக்கன்குடி மாரியம்மன் கோயில்

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சாணம் பெருக்க வந்த இருக்கன்குடி கிராமத்தை சார்ந்த பெண் ஒருத்தி, கூடையை வைத்துச் சாணம் பொறுக்கி சேர்த்திருக்கிறாள். ஓரளவு சாணம் சேர்ந்த பின்பு, அந்த இடத்தில் இருந்து கூடையை எடுக்க முயன்று இருக்கிறாள். அந்தக் கூடையை எடுக்க முடியவில்லை. அப்பொழுது அவள் சாமி வந்து ஆடியிருக்கிறாள்.

(கிராமப்பகுதிகளில் பக்தியுடன் இருப்பவர்களிடம் சாமியே அவர்களுக்குள் இறங்கி அவர்கள் மூலம் ஆடும் நிலைக்கு 'சாமியாடுதல்' என்று பெயர். இந்த நிலையில் அவர்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு, 'அருள் வாக்குகள்' என்று பெயர்).

சாமியாடிய அந்தப் பெண், அந்தக் கூடை இருக்கும் இடத்தில், சிலையாகப் புதைந்து கிடக்கும் தன்னை வெளியில் எடுத்து, கோயில் அமைத்து வணங்கினால், அனைத்து வேண்டுதல்களையும், நிறைவேற்றித் தருவதாகத் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு, மக்கள் அந்த இடத்தில் புதைந்து கிடந்த சிலையை எடுத்துக் கோயில் அமைத்து வழிபடத் துவங்கினர்.

கோயிலின் தெற்குப் பக்கம் வைப்பாறு, வடக்குப் பக்கம் அர்ச்சுனன் ஆறு என்று இரு ஆறுகள் சேர்ந்து வருவதால் இரு கங்கை கூடுமிடம் என்று சொல்லப்பட்டு, இந்த இடத்தில் அம்மன் குடி கொண்டு விட்டதால், 'இரு கங்கை' குடி என்று இருந்து, பின்னாளில் அது, 'இருக்கன்குடி' என்றாகி விட்டது. இந்த அர்ச்சுனன் நதி, புராணப் பெருமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த அர்ச்சுனன் நதி, 'வத்திராயிருப்பு' என்கிற மலைப் பகுதியிலிருந்து உற்பத்தியாகி, இங்கு வருகிறது. முன்பொரு காலத்தில், பஞ்ச பாண்டவர்கள் காடுகளில் திரிந்து இந்தப் பகுதிக்கு வந்திருக்கின்றனர். இங்கு நீராடுவதற்கு, தண்ணீர் இல்லாததால், பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன், கங்கையை வேண்டி, தனது அம்பால் பூமியைப் பிளந்து தண்ணீரை வெளியில் கொண்டு வந்தார் என்றும், இந்த ஆற்றை உருவாக்கியது அர்ச்சுனன் என்பதால், இதற்கு 'அர்ச்சுனன் ஆறு' என்று பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.

Комментарии

Информация по комментариям в разработке