நவீன தொழில்நுட்பத்தில் தேங்காயிலிருந்து இப்படி எல்லாம் செய்ய முடியுமா? தேங்காயிலிருந்து தயாரிக்கப்படும் பலவித பொருட்கள்
Mr. K.Rajarathinam
S.F.No : 178, 2A1, Devaradipalayam Road,
Kinathukadavu, Coimbatore-642109
Tamil Nadu, India.
Mobile : +91 99652 99054 | +91 98432 90035
Email Id : [email protected]
Virgin Coconut Oil Manufacturing Factory, Hydraulic Press Process Technique, coimbatore, essar, essar engineers, essar rajarathinam, coconut oil, oil press machine, cold press oil machine, virgin coconut oil, virgin coconut oil making, virgin coconut oil business, coconut oil benefits, coconut oil for hair growth, coconut oil for face, coconut oil for hair ,Virgin Coconut Oil Preparation, Screw Expeller Process Method, Essar Engineers, coimbatore, oil expeller, coonut oil, oil, virgin coconut oil, coconut tree, essar rajarathinam, coconut oil, coconut export business in tamilnadu, coconut export business, coconut processing machines, coir products, coco peat Coconut Charcoal Briquettes,யாரும் சொல்லாத தகவல்,தேங்காயிலிருந்து இப்படி எல்லாம் செய்ய முடியுமா?,cocnut,new business ideas,coconut charcoal briquettes factory,cocnut charcoal briquettes supplier,coconut charcoal briquettes bulk supplier,coimbatore,coconut charcoal briquettes india,coconut charcoal briquettes uses,tamilnadu,charcoal briquettes business
உலக தேங்காய் உற்பத்தியில் 75 விழுக்காடு இந்தியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், இலங்கையிலிருந்து கிடைக்கிறது. இந்தியாவின் 18 மாநிலங்களிலும், மூன்று யூனியன் பிரதேசங்களிலும் சுமார் 19.1 லட்சம் எக்டர் நிலப்பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் சுமார் 1500 கோடி தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 60 விழுக்காடு சமையலுக்கும், வீட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. தென்னையிலிருந்து பதனீர், கற்கண்டு, வெல்லம் கிடைக்கின்றது.
தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெயைத் தவிர தேங்காய்ப் பால், தேங்காய்ப் பால் பொடி, உலர்த்திய தேங்காய்ப்பூ, தேங்காய் பாற்குழைவு, தென்னை இளநீர், தேங்காய் நீர், தேங்காய் சிப்ஸ் போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தென்னை பயிரிடுதல், தேங்காயிலிருந்து தயாரிக்கப்படும் பலவித உணவுப் பொருட்கள், மதிப்பூட்டப்பட்ட பொருட்கள், தொடர்புடைய தொழிற்சாலை இவற்றில் சுமார் 10 மில்லியன் ஆட்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.
தேங்காய் எண்ணெய்
மொத்த தேங்காய் உற்பத்தியில் 33 விழுக்காடு ஆலைக் கொப்பரை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. புதிய கொப்பரைத் தேங்காயில் 45-50 விழுக்காடு ஈரப்பதம் இருக்கும். ஒரு மெட்ரிக் டன் கொப்பரைக்கு 7000 தேங்காய்கள் தேவைப்படும். முற்றிய கொப்பரையில் 65-70 விழுக்காடு எண்ணெய் இருக்கும். ஒரு டன் கொப்பரையிலிருந்து சுமார் 645 கிலோ தேங்காய் எண்ணெய் எடுக்கலாம்.
தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் 40 விழுக்காடு சமையலுக்கும், 50 விழுக்காடு அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பதற்கும், 10 விழுக்காடு பல்வேறு தொழில்களுக்கும் பயன்படுகின்றன. தேங்காய் எண்ணெயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட தேங்காய் எண்ணெய், மருந்துகள் சேர்க்கப்பட்ட வாசனை கூந்தல் எண்ணெய் Perfumed Hair Oil), சரும தைலம் தயாரிக்கலாம். தாவர எண்ணெய்களில், தேங்காய் எண்ணெயில் மட்டுமே அதிகளவில் (13.5 விழுக்காடு) கிளிசரின் உள்ளது.
ஃபேட்டி அமிலம் (Fatty acid) ஆல்கஹால், கிளிசரின், லாரிக் அமிலம் போன்ற வேதிப் பொருட்களையும் தேங்காய் எண்ணெயிலிருந்து தயாரிக்கலாம். எண்ணெய் எடுத்த பின் கிடைக்கும் புண்ணாக்கு நல்ல பயனுள்ளது. தேங்காய் புண்ணாக்கு கலந்த தீவனத்தை, கோழிகள், கால்நடைகள் விரும்பி உண்ணும்.
தேங்காய்ப்பூ
உலர்த்திய தேங்காய்ப் பூவில் ஈரப்பதம் 3 விழுக்காடு, கொழுப்புச் சத்து 65 விழுக்காடு, லாரிக் அமிலம் 0.3 விழுக்காடு, இதர திடப் பொருட்கள் 32 விழுக்காடு இருக்கும். மிட்டாய்கள், கேக் வகைகள், பிஸ்கட்டுகள் போன்ற தின்பண்டங்கள் செய்வதற்கு தேங்காய்ப்பூ பயன்படுகிறது. உலர்த்திய தேங்காய்ப்பூ தயாரிக்கும் பல சிறிய தொழிற்சாலைகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் உள்ளன.
சுமார் பத்தாயிரம் முற்றிய தேங்காய்களிலிருந்து ஒரு டன் தேங்காய்ப்பூ தயாரிக்கப்படுகிறது. உலர்த்திய தேங்காய்ப்பூவிற்கு உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் நல்ல கிராக்கி உள்ளது. தேங்காயை உடைத்து உடனே பயன்படுத்துவதை விட உலர்த்திய தேங்காய்ப்பூவை பயன்படுத்துவது எளிது. உணவுப் பண்டங்கள், இனிப்பு வகை தயாரிப்பாளர்கள் உலர்ந்த தேங்காய்ப்பூவிற்கு வண்ணம் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ அதிகளவில் பயன்படுத்துகின்றனர். நம் நாட்டில் 50க்கும் அதிகமான தேங்காய்ப்பூ தயாரிக்கும் நிறுவனங்கள் ஆண்டுக்கு 2500 டன் உலர்த்திய தேங்காய்ப்பூ தயாரிக்கின்றன. பாக்கெட்டுகளில் கிடைக்கும் தயார் நிலை உலர்ந்த தேங்காய்ப்பூவிற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
தேங்காய்ப்பால்
சைவ மற்றும் அசைவ உணவு வகைகளில் தேங்காய்ப் பால் சேர்ப்பதால், உணவில் சுவையும், மணமும், ஊட்டச்சத்தும் கூடுகின்றது. தேங்காயிலுள்ள புரதம், கொலஸ்டிராலைக் குறைக்கும் குணம் உள்ளதென ஆராய்ச்சி கூறுகின்றது. சமையலில் தேங்காயை அப்படியே அரைத்து விழுதாக பயன்படுத்துவதால் சத்துக்கள் விரயமாகிறது. தேங்காயைப் பாலை உடனடியாக பயன்படுத்திடவிட வேண்டும். இல்லையேல் தேங்காய்ப்பால் விரைவில் கெட்டுவிடும்.
தேங்காய்ப்பால் பொடி (மாவு)
இளநீர்
தேங்காய் நீர்
தேங்காய் பனிப்பந்து
தேங்காய் சிப்ஸ்
பதனீர்
Информация по комментариям в разработке