பெண்களுக்கான நவீன வசதிகளுடன் கூடிய 40 லட்சம் மதிப்பிலான கழிப்பறை!

Описание к видео பெண்களுக்கான நவீன வசதிகளுடன் கூடிய 40 லட்சம் மதிப்பிலான கழிப்பறை!

திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சத்திரம் பேருந்து நிலையம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே அமைந்துள்ளது பெண்களுக்கான நவீன சுகாதார மைய வளாகம். இந்த சுகாதார வளாகத்தில் 24 மணிநேரமும் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் சுத்தமான குடிநீர் வசதியும், மேலும் அதன் அருகிலேயே ஏடிஎம் இயந்திரமும், முக்கியமாக பெண்களுக்கான பிரத்தியேகமாக சென்சார் மூலம் இயங்கும் கதவுகளை கொண்டும், மின்விளக்குகள் கொண்டும் கழிப்பறைகள் பொருத்தப்பட்டுள்ளன. ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த மையத்தை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் நேற்று திறந்து வைத்தார்.

Комментарии

Информация по комментариям в разработке