#Kagapujandar #Balakumaran #Sahanathan
ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ பகுளாதேவி சமேத ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி நமஹ...
சித்தர்கள் என்போர் விண்ணுலகிலும் மண்ணுலகிலும் போற்றுதலுக்குரியவர்கள்.
'சித்' - என்றால் 'சித்து' - அதாவது 'முடிவை அறிதல்', பூரணத்துவம் பெறுதல் என்றெல்லாம் பொருள்படும். அத்தகு 'சித்தி'களையும், பிறவாப் பெருநிலையையும் பெற்றவர்களையே நாம் பொதுவாக சித்தர்கள் என அழைக்கிறோம்.
சித்தர்கள் தமது இடையறாத கடும் தவ வலிமையினால், தெய்வத்துக்கு நிகராக இருப்பதோடு, விண்ணுலகிற்கும், மண்ணுலகிற்கும் பாலமாக இருந்து வருகின்றனர்.
சிவத்தை நோக்கி சிவமென தவமியற்றி சிவமாய் ஆகிவிட்டவர்கள் சித்தர்கள். இத்தகு தன்மையுடைய சித்தர்கள் தம்மை வெளிக்காட்டிக் கொள்ளவதில்லை. ‘தானே சித்தர்’ என சொல்லுவதும் இல்லை. அனால், ஆத்ம சுத்தியோடு வாழ்பவரின் மூச்சுக் காற்றோடு கலந்து, பல்வேறு நன்மைகளை செய்து வருகின்றனர்.
சித்தர்கள் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களையும் நொடியில் செய்யும் வல்லமையுடையவர்கள். அவர்களின் பெயரும், அவர்களது உருவமும் நமக்குக் கிடைத்தற்கரிய பொக்கிஷங்களாகும்.
சித்தர்கள் யாவரும், எம்பெருமான் சிவனின் அணுக்கிரகத்தினால், அவனாலேயே பூமிக்கு அனுப்பப்பட்டவர்கள்; சிவனின் அம்சமானவர்கள்; சமூகச் சூழலுக்கேற்ப, சிவனிட்ட கட்டளைகளை நிறைவேற்றவே பூமியில் அவதாரம் பெற்றவர்கள்.
ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷியின் மாணவராகிய கோரக்க சித்தர், தமது “மலைவாகடம்” என்று சொல்லப்படும் நூலில் உள்ள கருத்துப்படி, “ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி யுகம் யுகமாய் வாழ்ந்து வருவதாக அறியப்படுகிறது. ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷியின் “பெருநூல் காவியமும்” இதனையே தெளிவு படுத்துகிறது.
பிரளயம் முடிந்து சிருஷ்டி ஆரம்பித்த வேளையில் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகியோர் படைக்கப்பட்டவுடன், உயிர்களின் சிருஷ்டி பிரம்மாவிடம் ஒப்படைக்கப்பட்ட போது, அவர், மிகுந்த குழப்பத்தில் அழ்ந்தார். இந்த குழப்ப நிலையையும் மனக்கலக்கத்தையும் அறிந்த கலைவாணி, இப்பிரச்சனை தீர கடும் தவமியற்றினார். முடிவில், கலைவாணியின் முன் தோன்றிய சிவபெருமான், “காக்புஜண்டன்” என்னும் ஞானக் குழந்தையை உருவாக்குகிறேன். அக்குழந்தை ஆதிகுருவாகவும், சிரஞ்சீவியாகவும் இருந்து அனைத்து தேவ இரகசியங்களையும் உபதேசிக்கும். அதன்படி, உன் கணவன் பிரபஞ்ச சிருஷ்டியை செய்வானாக!” என்று அருளிச் செய்து, தமது நெற்றிக்கண்ணில் இருந்து கதிர்வீச்சினை செலுத்தி, அக்கதிர் வீச்சினையே ஒரு குழந்தையாக்கி தந்தார். நெற்றிக்கண்ணுடன் பிறந்த அக்குழந்தையை மூவரும், முப்பத்து முக்கோடி தேவரும் பூமாரி பொழிந்து ஆசீர்வதித்தனர். அவ்வாறு பிறந்த ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி, பிரம்மாவுக்கே உபதேசம் செய்த்தால் “தேவ ரிஷி” எனப் போற்றப்பட்டார். இவ்வளவு பெருமைகள் உடைய ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷியின் துணைவியார்தான், ஸ்ரீபகுளாதேவி ஆவார்.
இவ்வாறே சிவக்கருணையினால் கும்பத்தில் பிறந்தவரே கும்பமுனி என்றும் குருமுனி என்றும் நாம் அன்போடு அழைத்து மகிழும் ஸ்ரீ அகஸ்திய மகரிஷி ஆவார். கோடான கோடி சித்தர்களை உருவாக்கி, உலகிற்கு தந்தவரும் இவரே. சிவபெருமானின் அன்பிற்குரிய மகனாகவும், சித்தர்களின் தலைவராகவும், கோடான கோடி சித்தர்களால் போற்றப்படுவரும் இவரே. எல்லா மதங்களிலும் அகஸ்தியரைப் பற்றி சான்றுகள் உள்ளதென, சமீபத்தில் ஜீவசமாதி அடந்த சித்தரான, ஆன்மீக ஆராய்ச்சியாளர், ஸ்ரீ மிஸ்டிக் செல்வம் என்னும் தூயவர் விளக்கியுள்ளார். அவரது ஆய்வுப்படி, கிறிஸ்துவர்கள் ‘அகஸ்டஸ்’ என்று அழைப்பதும், முஸ்லீம்கள் ‘அகமது’ என்று அழைப்பதும் நமது அகஸ்தியரையே குறிக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். அப்படிப்பார்க்கும் போது, உலகில் உள்ள எல்லா மனிதர்களும் நலமும் வளமும் பெற்று பிறவா பெருனலை அடைய வேண்டும் என்கிற ஆத்ம தாகம் உடையவராக மகரிஷி ஸ்ரீஅகஸ்தியர் வளங்குவது நன்கு புரியும். ஸ்ரீஅகஸ்திய பெருமானுக்கு உறுதுணையாய் இருந்தவரே, அவர்தம் துணைவியார், மாதா ஸ்ரீ லோபா முத்திரை ஆவார்.
காகபுஜண்டர்,ஸ்ரீ காகபுஜண்டர் சித்தர் பாடல்கள்,ஸ்ரீ காகபுஜண்டர்,ஸ்ரீ காகபுஜண்டர் சித்தர்,காகபுஜண்டர் சித்தர்,காகபுஜண்டர் பாடல்கள்,காகபுஜண்டர் ஜீவசமாதி,காகபுஜண்டர் மந்திரம்,காகபுஜண்டர் அருள் வாக்கு,ஸ்ரீ மார்க்கண்டேயர்,ஸ்ரீ மார்க்கண்டேயர் திருக்கோயில்,#காகபுஜண்டர்,ஸ்ரீ மார்க்கண்டேயர் திருக்கோயில் திருக்கடையூர்,காக புஜண்டர் சித்தர்,மகரிஷி_காகபுஜண்டர்,காகபுசண்டர்,காகபுசுண்டர்,#காகபுஜண்டர் வரலாறு சித்தர்,காக புஜண்ட சித்தரின் நற்பவி மந்திரம்,மார்க்கண்டேயர்
Connect with Us:
Saha TV Android App: https://play.google.com/store/apps/de...
FaceBook: / sahatvtamil
To buy Saha Nathan Books: https://www.amazon.com/s?k=saha+natha...
To read Saha Nathan books (FREE if you have kindle account) at Amazon please use the Below Links:
The Art of Renewing Your Hope:
https://www.amazon.com/Art-Renewing-Y...
Relationship Solutions: A Spiritual Way - Solutions from ancient Indian spiritual science... Kindle Edition:
https://www.amazon.com/Relationship-S...
The Art of Making Relationships : Win the World by Using Relationship-Building Techniques Kindle Edition
https://www.amazon.com/Art-Making-Rel...
The Golden Key for Wellness: Wellness by understanding Body, Mind and Emotions
Информация по комментариям в разработке