#pebbleslearntamil
#tamilthunaiezhuthukkal
#tamilarivom
learn tamil : • தமிழ் அறிவோம் I Learn Important words in t...
கா, சா, ஞா ஆகிய எழுத்துகளில் முதலெழுத்துகளை அடுத்து வருவது துணைக்கால்.
கெ, செ, நெ, தெ ஆகிய எழுத்துகளில் முதலெழுத்துகளுக்கு முன் வருவது ஒற்றைக்கொம்பு
ஊ, கௌ, சௌ ஆகிய எழுத்துகளில் ள வடிவில் எழுதப்படுவது கொம்புக்கால். ஒரு கொம்பு போட்டு அதனையொட்டியே கால் வடிவம் இடுவதால் இப்பெயர்.
இதனை இரட்டைக்கொம்பு என்றும் கூறினர். இதனை இரட்டைக் கொம்பாகக் கொள்வோர் கே, சே ஆகிய எழுத்துகளில் வரும் துணையெழுத்தினைக் கொம்புச்சுழி என்பர்.
ஏ என்னும் எழுத்தில் கடைசியாகக் கீழ்நோக்கி இழுக்கப்படுவது சாய்வுக்கீற்று.
பு, யு, வு ஆகிய எழுத்துகளில் முதலெழுத்தினை எழுதிய பின்னர், கீழ்நோக்கி ஒரு கோட்டினை இழுக்கிறோம். அதற்கு இறங்கு கீற்று என்று பெயர்.
கூ என்ற எழுத்தில் இருப்பது பின்வளை கீற்று. க என்ற எழுத்தோடு வளைவு போல் அமைத்தபின் படுகிடையாய்க் கீறுவது. கீற்றின் பின்னால் வளைவு இருப்பதால் அதற்குப் 'பின்வளை கீற்று' என்று பெயர்.
ணு, து, நு, ஞு, னு ஆகிய எழுத்துகளில் கீழே மடிப்பு வடிவத்தை எழுதி மேல்நோக்கிய கீற்றாக முடிக்கிறோம். இதற்கு 'மடங்கு ஏறு கீற்று' என்று பெயர். சிலர் 'மடக்கேறு கீற்று' என்றும் கூறுவர்.
ணூ, தூ, நூ, ஞூ, னூ ஆகிய எழுத்துகளில் அவ்வாறு மடக்கு ஏறு கீற்றினை எழுதி அதனைத் துணைக்கால் போட்டு முடிக்கிறோம். அவ்வாறு எழுதப்படுவது 'மடங்கு ஏறு கீற்றுக்கால்' எனப்படும்.
ஒரு விலங்கு மரக்கிளையில் அமர்ந்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதன் வால் கிளையிலிருந்து தொங்கும்தானே? அந்த வடிவத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு குரங்கினைக் கற்பனை செய்துகொள்வது சரியாக இருக்கும். கி, சி, தி, பி, ஞி, நி, ணி, னி போன்ற எழுத்துகளில் முதலெழுத்தின் மேல் அவ்வாறு ஒரு விலங்கின் வால்போல் தொங்கும் வடிவம்தான் எழுதப்படுகிறது. அதற்கு 'மேல் விலங்கு' என்று பெயர்.
கே, சே, நே, கோ ஆகிய எழுத்துகளில் முதலெழுத்துகளுக்கு முன்னால் வருவது, இரட்டைக்கொம்பு. இதனைக் 'கொம்புச்சுழி' என்றும் சிலர் கூறுவர்.
கை, சை, நை ஆகிய எழுத்துகளில் முதலெழுத்துகளுக்கு முன்னால் வருவது, இணைக்கொம்பு, இதனைச் சங்கிலிக்கொம்பு என்றும், ஐகாரக் கொம்பு என்றும் கூறுவர்.
மு, கு, ரு, ழு ஆகிய எழுத்துகளில் அவ்வாறு கீழே அமர்ந்த விலங்கின் வால் வடிவம். அவ்வாறு எழுதப்படும் துணையெழுத்துகளுக்குக் 'கீழ்விலங்கு' என்று பெயர்.
கீ, சீ, தீ, பீ, ஞீ, நீ, ணீ, னீ ஆகிய எழுத்துகளில் அவ்வாறு தொங்கும் வாலின் விளிம்பு சுழிபட்டிருக்கிறது. மரக்கிளையில் அமர்ந்திருக்கும் விலங்கின் முனைசுருண்ட வால் வடிவம். இதற்கு 'மேல்விலங்குச் சுழி' என்று பெயர்.
மூ, ரூ, ழூ ஆகிய எழுத்துகளில் கீழ்விலங்கு வடிவத்தின் முனை சுழிபட்டிருக்கிறது. அவற்றுக்குக் 'கீழ்விலங்குச் சுழி' என்று பெயர்.
சூ, பூ, யூ, வூ ஆகிய எழுத்துகளில் முதலில் 'இறங்கு கீற்றினைக்' கீறி அதன்பின் கீழ்விலங்கு வடிவத்தினையும் எழுதி, முடிவில் சுழிக்கிறோம். அவற்றுக்கு 'இறங்குகீற்றுக் கீழ்விலங்குச் சுழி'என்று பெயர்.
நல்ல பழக்க வழக்கங்கள் | Learn good habits in Tamil for kids | Daily Life Good Manners
Subscribe to our Pebbles Learn Tamil Channel: / @pebbleslearntamil
#LearnTamil
#basicTamil
#EasyLearning
#TamilLearning
#Tamil
Related Playlist:
Learn Tamil for beginners - • பூக்கள் | Flowers | Preschool Education in...
Tamil Rhymes - • பூக்கள் | Flowers | Preschool Education in...
Avaiyaar Aathichudi - • Avaiyaar Aathichudi Kathaigal | Aathichudi...
Our Channels:
Pebbles Tamil – / pebblestamil
Pebbles Learn Tamil – / @pebbleslearntamil
pebbles Spoken hindi Through Tamil – / @pebblesspokenhindithroughtamil
Engage with us on:
Facebook at / pebbleschennai
Visit Pebbles Official Website - http://www.pebbles.in
Visit Pebbles Exclusive Video Website - http://www.pebblestv.com
Please Like, Share, Comment & Subscribe
Информация по комментариям в разработке