.
திருவள்ளூர் மாவட்டம்,பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட போந்தவாக்கம், பெருஞ்சேரி,தச்சூர், நந்தியம்பாக்கம், மேலகருமனூர்,ஆகிய ஊராட்சிகளுக்கு இரண்டாம் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் உங்க போந்தவாக்கத்தில் உள்ள நாட்டாட்சி அம்மன் கோவில் வளாகத்தில்
நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ராஜேஷ்குமார்,பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி,சுலோச்சனா ஆகியோர் தலைமை தாங்கினர். பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் டி.கே.சந்திரசேகர்,வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான்(எ) பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக அனைவரையும் ஊராட்சி செயலாளர்கள் பாபு, லோகநாதன், செல்லையா, கோதண்டன் ஆகியோர் வரவேற்றனர்.இந்த முகாமில் மகளிா் உரிமைத் தொகை, முதியோா் உதவித் தொகை,பிறப்புச் சான்றிதழ்,பட்டா பெயா் மாற்றம்,முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்,உள்ளிட்ட 15 துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.இதன் பின்னர் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அடையாள அட்டை, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து அடங்கிய பெட்டகம், விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதில் மாவட்ட அவைத்தலைவர் பகலவன்,துணை செயலாளர் உமா மகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர்கள் பா.செ குணசேகரன், எம்.எல்.ரவி, நிர்வாகிகள் சீனிவாசன், சுதாகர்,கே.பாபு, வேல்முருகன்,ரவி, நாகராஜ், காண்டியப்பன், சரசுபூபாலன்,சித்ரா பாபு,சிவய்யா, பிரதாப்,பாஸ்கர், வெங்கடாதிரி, ரஞ்சித், நளாயினி,யசோதா ராமன்,டார்லிங் ராஜா மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Информация по комментариям в разработке