Wedding Song/ ஸ்ரீமா தேவா/ Sree Ma Deva / Praiselin Stephen/ Rao Sahib Abraham Pandithar

Описание к видео Wedding Song/ ஸ்ரீமா தேவா/ Sree Ma Deva / Praiselin Stephen/ Rao Sahib Abraham Pandithar

Wedding Song
ஸ்ரீமா தேவா/ Sree Ma Deva

Composed by Rao Sahib Abraham Pandithar
Singer: Praiselin Stephen

பல்லவி
ஸ்ரீமா தேவா
திருவருள் புரிய இத்தருணமிங்கு நீயும் வா

சரணங்கள்
1.சுந்தரமாய் வானம் பூமி ஜோதி படைத்து
சந்ததமாய் ஏதேன் வாழ யாவும் கொடுத்து
சிந்தை களிகூர ஆசீர்வாதம் கொடுத்து
தினமும் அவரோடு கூடிக் குலாவ வந்தாயே - ஸ்ரீ மா

2. வானம் பூமி வாழ வந்த மானுவேலனே
தீனத்துயர் நின்று மீட்ட தேவபாலனே
ஞான மணவாளனான நாதன் நீர் வர
கானம் பாடிக் காத்திருந்து கனிந்து கும்பிட்டோம் - ஸ்ரீ மா

3 .முந்து கானாவூரின் கலியாணத்தில் வந்தே
சிந்தை களிகூரக் குறை தீர்க்க முன்னின்றே
சிந்து ரசமாக்கிமகிழ் சேரவும் தந்தாய்
அந்த விதம் இங்கு வர அழைத்துக் கும்பிட்டோம் - ஸ்ரீ மா

4. எண்ணும் நன்மை யாவும் தர எங்களோடிரும்
இன்னதென்று சொல்லுமுன்பே தந்துக் கொண்டிரும்
முன்னம் சென்று தங்குமிடம் காத்துக் கொண்டிரும்
இந்த வேலைக் காருமில்லை என்று கூப்பிட்டோம் – ஸ்ரீ மா

SF Music Mission
இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப் பட்டிருந்தார்கள். யோவான் 2:2.

Produced by Prof. Dr. Suresh Frederick on the occasion of his son Mr Kevin Frederick

Комментарии

Информация по комментариям в разработке