ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - [email protected]
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
00:00 - அறிமுகம்
00:52 - மகாலிங்கசுவாமி கோவில்
02:34 - வித்தியாசமான டெக்னாலஜி
06:25 - வினோத ஒலி எழுப்பும் சுவர்
07:46 - பழங்கால தமிழர்களின் sound டெக்னாலஜி
10:41 - நேரில் பார்த்த திபெத் மக்கள்
11:00 - முடிவுரை
Hey guys, எப்படி தமிழ்நாட்டுல, பழங்கால ஸ்தபதிங்கனால பெரிய பிரம்மாண்டமான கோயில்கள கட்ட முடிஞ்சுது? உளி, சுத்தியல் மாறி சாதாரண பழங்கால கருவிங்கள use பண்ணிருப்பாங்களா? இல்ல இந்த மாறி பெரிய monuments-அ கட்டறத்துக்கு, சில Advanced technology-ய use பண்ணிருப்பாங்களா? இதுக்கு best example-ஏ தஞ்சாவூர்-ல இருக்குற தஞ்சை பெரிய கோயில் தான். அவ்ளோ பிரம்மாண்டமான கோயில்-ல வெறும் ஏழே வருஷத்துக்குள்ள கட்டி முடிச்சிருக்காங்கனு experts சொல்றாங்க. எப்படி பழங்கால ஸ்தபதிங்கனால வெறும் ஏழே வருஷத்துல, அவ்ளோ பெரிய பிரம்மாண்டமான கோயில கட்ட முடிஞ்சுது? இந்தக் கேள்விக்கு பதில் தெரியனும்னா, நாம திருவிடைமருதூர்-ங்கற(Thiruvidaimarudur) ஒரு சின்ன கிராமத்துக்கு போகனும். தமிழ்ல ‘விடை’ ங்கற வார்த்தைக்கு பதில்-னு அர்த்தம். அதனால இப்போ நாம அந்த கிராமத்துக்கு போய், இந்த கேள்விக்கு பதில் கிடைக்குதா-னு பாப்போம்.
இந்த ரொம்ப அழகான structure, இந்த கோயிலோட தெப்பக்குளத்துக்கு நடுவுல இருக்குறத நம்மளால பாக்க முடியுது. இந்த தெப்பக்குளம், இந்த பெரிய மகாலிங்க சுவாமி கோயிலோட சேர்ந்தது. தஞ்சை பெரிய கோயில் கட்டுனத்துக்கு, நூறு இல்ல எறநூறு வருஷத்துக்கு முன்னாடியே, இந்த மகாலிங்க சுவாமி கோயில கட்டிடாங்க. அதுமட்டுமில்லாம, தஞ்சை பெரிய கோயிலே, இந்த கோயில model-அ வச்சு தான் கட்டுனது-னு சொல்றாங்க. அப்பரோம், சோழர்கள், unique-ஆன technology-ய வச்சு கட்டுன மொத கோயிலும் இதுதான். இந்த கோயில் உளி,சுத்தியல வச்சி கட்டுனது இல்ல.அதுக்கு பதிலா ஒரு unique-ஆன technology-ய பயன்படுத்திருக்காங்க. நம்ம பேசிட்டு இருக்குற அந்த unique-ஆன technology என்ன-னு கோயிலுக்குள்ள போய் கண்டுப்புடிக்கலாம் வாங்க. So, அந்த unique-ஆன technology என்ன? இந்த stone block-ல இருக்குற, இந்த round mark தான். இத பாக்குறதுக்கு ஒரு target மாறி இருக்குல. இப்போ இதுல அப்படி என்ன special-ஆ இருக்கு?
யோசிச்சு பாருங்க, நீங்க இந்த கோவில சுத்தி பாத்தீங்கனா, ஆயிரக்கணக்குல இந்த stone blocks இருக்கு. அப்படி இருக்கும்போது, ஏன் இந்த ஒரு stone block-ல மட்டும், இப்படி ஒரு target மாறி mark பண்ணி வச்சிருக்காங்க? அதுவும் பாக்க, bull’s eye மாறி அதாவது ஒரு target-ஓட நடு பகுதி மாறி mark பன்னிருக்காங்க. இதுல அப்படி என்ன special-ஆ இருக்கு? இந்த stone blocks-அ நீங்க பாத்தீங்கனாலே, இதெல்லாம் ஒரே material-ல செஞ்சிருக்காங்க-னு தெரியும். அப்படி இருக்கும்போது, இந்த ஒரு stone block-அ மட்டும் வித்தியாசமா mark பன்னிருக்காங்க. ஏன்?
பாக்க வேணா, பெருசா எந்த ஒரு வித்தியாசமும் இல்லாத மாறி தெரியலாம்.
கண்டிப்பா, உங்கள்ல சில பேர் ‘பிரவீன், நீ எப்பவும் கோயில்-னு வரும்போது சாதாரண விஷயத்த கூட ரொம்ப பெருசு படுத்துறேணு நெனைக்கலாம். எங்களுக்கே ஹிந்து மதத்துல ஆயிரக்கணக்கான சாமி இருக்காங்க, அவளோ சாமிக்கும், நூத்துக்கணக்குல சடங்கு இருந்துச்சுனு தெரியும். அதுமட்டுமில்லாம அவங்க எல்லா விஷயத்தியும் செஞ்சாங்க, ஏன்னா அவங்க நெறய மூடநம்பிக்கையோட இருந்தாங்க. இந்த மாதிரி பல விஷயங்கள் எங்களுக்கே தெரியும்-னு கூட நீங்க சொல்லலாம். ஆனா, எல்லா இந்து கோயில்கள்-லயும் அவங்க பண்ற எல்லாத்துக்குமே, ஒரு குறிப்பிட்ட காரணம் இருக்கும்-னு நான் எப்போவும் சொல்லுவேன். அப்படிங்கறப்போ, இது அர்த்தமே இல்லாத ஒரு சடங்கா இருக்கும்னு நினைக்கிறீங்களா? இல்ல, நான் வேற ஒண்ணு try பண்ணி காட்றேன். இங்க பாருங்க. இப்படி தான் ஒரு கிரானைட் கல்லோட சத்தம் இருக்கும். இதுல தட்டுறேன் பாருங்க. சத்தம் எப்படி இருக்குனு கேக்குதா? ஆனா இங்க, இந்த சத்தம் அப்படியே வித்தியாசமா கேக்குது, இது ரொம்ப crazy-ஆ இருக்கு. இத பாருங்க. இது எப்படி possible? இந்த கல்ல பாருங்க, அந்த கல்ல பாருங்க. Stone blocks-ல எந்த ஒரு வித்தியாசமும் இல்ல, அப்படி இருந்தும், இந்த target மாறி mark பன்னிருக்க கல்லுல இருந்து மட்டும் வித்தியாசமான சத்தம் வருது.
இத நம்பவே முடியல. இதோட உண்மையான நோக்கம் என்னவா இருக்கும்? இந்த இடத்துல தான் நமக்கு, பழங்கால technology-ய பத்தி குழப்பம் வருது. என்ன தான் இதெல்லாம் பாக்குறதுக்கு ஒரே மாறி இருக்கற கல்லா இருந்தாலும், முதல, இத அவங்க எப்படி செஞ்சாங்கனே நமக்கு தெரியல. எல்லாமே பாக்க ஒரே மாறி தான் இருக்கு, இது maybe தற்செயலா இருக்கலாம்-னு கூட நீங்க சொல்லலாம். அப்படி பாத்தா, பழங்கால ஸ்தபதிங்களுக்கு, இது ஒரு special-ஆன கல்லுனு தெரிஞ்சு இருக்காதுல. ஆனா இங்க உண்மையில, அவங்க இத mark பன்னியிருக்காங்க, அப்படினா இத வேணும்னே தெரிஞ்சே செஞ்சிருக்காங்க-னு தான அர்த்தம். அப்போ இது கண்டிப்பா தற்செயலா நடந்தது இல்ல.
பழங்கால ஸ்தபதிங்க, அவுங்க என்ன பண்ணுறாங்கனு தெரிஞ்சு தான் பன்னிருக்காங்க. அதனால அவங்க ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோட தான், இந்த stone block-அ இங்க வச்சிருக்காங்க-னு, நமக்கு இப்போ தெரியும். ஆனா எதுக்காக வச்சிருப்பாங்க? அதோட நோக்கம் என்னவா இருக்கும்?
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil
Информация по комментариям в разработке