அதிரும் மேளம் ஒலிரும் நாகசுரம் | தமிழ் இசை | மெட்டு தாளம் பண் |

Описание к видео அதிரும் மேளம் ஒலிரும் நாகசுரம் | தமிழ் இசை | மெட்டு தாளம் பண் |

‪@புதுக்குடியிருப்பு‬ ‪@தமிழ்_இசை_யாழ்‬

நாகசுரம் (Nadaswaram) என்பது துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும். இது நாதசுவரம், நாதசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு. சிறப்பாகத் தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி வழக்கில் உள்ளது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. வெகு தூரத்தில் இருந்து கேட்டாலும் இன்பத்தைத் தரும் இயல்பினைக் கொண்டது.

தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால், பொதுவாக எல்லாவகையான நன் நிகழ்வுகளிலும் இதற்கு ஒரு இடம் உண்டு. வசதியான பெரிய கோயில்களில் அன்றாடம் இது பல தடவைகள் இசைக்கப்படுவது வழக்கம். ஏனையவற்றில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது. தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது.

இவ்வாத்தியம் முன்பு தென்னிந்தியாவிலுள்ள நாகூர், நாகபட்டிணம் முதலிய ஊர்களில் உள்ளவர்களான, நாகசர்பத்தைத் தெய்வமாகப் பூசித்த நாகர் என்ற சாதியரினால் வாசிக்கப்பட்டு வந்தது. நாகத்தின் போன்று உருவத்தைப் போன்று நீண்டிருந்ததின் காரணமாகவும் நாதசுவரம் என்னும் பெயர் ஏற்பட்டது. இதனுடைய இனிமையான நாதம் காரணமாக பிற்காலத்தில் இது நாதஸ்வரம் எனப்பட்டது.

பல்லாண்டுகளாக திமிரி என்னும் நாகசுவரமே வாசிக்கப்பட்டது. இதன் நீளம் குறைவாக இருக்கும். இதில் சில மாற்றங்களோடு நாகசுவர மேதை டி. என். ராஜரத்தினம் பிள்ளை அறிமுகப்படுத்தியதுதான் தற்போது புழக்கத்தில் உள்ள பாரி நாகசுவரம் ஆகும். திமிரி நாகசுவரத்தைவிட பாரி நாகசுவரம் நீளமாக இருப்பதுடன், இசைக் கலைஞர்களால் நீண்ட நேரம் வாசிக்க சுருதி அளவுடன் இருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.

மேளம் (Melam) என்பது தமிழகம், கேரளா மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் பயன்படுத்தப்படும் தனித்துவமான ஒரு வகை தாள இசைக்கருவியாகும். மத்தளம் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. மேளத்தை [1] இசைக்கும் கலைஞர் மேளக்காரர் எனப்படுகிறார் [2]. பண்டைய தமிழகத்தில் [3] கோயில்களில் நடைபெறும் அனைத்து சிறப்பு நிகழ்வுகளுக்கும் மேள இசை பயன்படுத்தப்பட்டது. கோவில் மேளம், நையாண்டி மேளம் [4], உறுமி மேளம் [5] போன்றவை சில வகை மேள இசை வகைகளாகும். திருமண விழாக்களில் கெட்டி மேளமும் [6], மரண சடங்குகளில் பறை இசையும் இசைக்கப்படுகிறது. கேரளாவில் இசைக்கப்படும் அனைத்து மேள இசைகளிலும் மிகவும் பாரம்பரியமானது பாண்டி மேளம் ஆகும். இது பொதுவாக கோவிலுக்கு வெளியே இசைக்கப்படுகிறது. பஞ்சரி மேளம் என்று அழைக்கப்படும் மற்றொரு வகை மேளம் பாண்டி மேளம் போன்றது என்றாலும் இது கோவிலுக்குள் இசைக்கப்படுகிறது.

வரலாறு
தமிழ் மக்கள் பயன்படுத்தும் இசைக் கருவிகளின் பட்டியலில் ஒன்றாக மேளம் காணப்படுகிறது. திருமுறை இப்பட்டியலை அளிக்கிறது

மத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால்
எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே
மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்
கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத்

எட்டாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தில் பாடப்பட்ட நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்றுள்ள நாச்சியார் திருமொழி என்ற ஆண்டாள் பாசுரமே மேளம் என்பதாகவும் கூறப்படுகிறது

மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்.

மத்தளம் இசைக்க, வரிசையாக நின்ற சங்குகள் ஊதப்பட, முத்துச்சரங்கள் தொங்கும் விதானத்தின் கீழ் நம் இறைவனும் உறவினருமான மதுசூதணன் என் கையை அவர் கைகளில் பற்றிக்கொள்வது போல கனா கண்டேனடி தோழி என்பது இப்பாடலின் பொருளாகும். '

இறைவன் கண்ண்ணுடன் தனக்குத் திருமணம் நடைபெறுவது போன்ற கனவு வந்ததை தலைவி தோழிக்கு விளக்குவதாக அமைந்துள்ளது இப்பாடல். திருமண மண்டபத்தின் அலங்காரம், ஊர்வலம்,, இசைக்கப்பட்ட இசைக்கருவிகள் போன்றவை பாடலில் விளக்கப்படுகின்றன.

இயல், இசை, கூத்து என்பன முத்தமிழ். இயல் என்பது எழுதப்படுவதும் பேசப்படுவதுமாகிய தமிழ். இசை என்பது பண்ணிசைத்துப் பாடப்படும் தமிழ். கூத்து என்பது ஆடல்பாடல்களுடன் உணர்த்தப்படும் தமிழ்.

#தமிழ்_இசை_யாழ்

Комментарии

Информация по комментариям в разработке