தென்னை நடவு மற்றும் மேலாண்மை
COCONUT PLANTING AND MANAGEMENT
@pasumaivivashayam
@naveenavivasayi3350
@TamilVelanmai
@pasumaivivashayam
@agribabuji
@agrivelu
@AgritechGuruji
#coconut_farming
#தென்னைமரம்
#தென்னை
coconut seedling selection
தென்னை கன்று நடவு
land preparation
coconut land preparation
தென்னங்கன்று தேர்வு முறை
நிலம் தயாரித்தல்
தென்னை பயிரிடும் பருவம்
coconut planting, coconut seedlings planting, coconut tree plantation, coconut, coconut tree, coconut cultivation, organic farming, coconut seedlings sales, thennai maram valarpu, thennai maram nadum murai, coconut seedlings, coconut intercropping, coconut farming, தென்னை நடவு பணிகள், தென்னை நடவு செய்யும் முறை, தென்னை ரகங்கள், தென்னை சாகுபடி, coconut saplings, coconut saplings planting proces, coconut spacing, coconut depth, coconut cultivation in pollachi, contact, agri, #gold
தென்னை ரகங்கள்
தென்னையில் குட்டை ரகம், நெட்டை ரகம், ஒட்டு ரகம் மற்றும் செவ்விளநீர் இரகங்கள் இருக்கிறது. குட்டை ரகம் சுமார் 8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. நான்கு ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கி 25 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும். தென்னை நெட்டை ரகம் சுமார் 20 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. 5 ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கி 60 -75 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும். தென்னையில் ஒட்டு வகை சுமார் 10 - 14 மீ;ட்டர் உயரம் வளரக் கூடியது. 4 ஆண்டுகளில் பலனுக்கு வந்து 40 ஆண்டுகள் வரை காய்க்கக் கூடியது.
தென்னங்கன்று தேர்வு முறை
தென்னங்கன்றுகள் தேர்வு செய்யும் போது வயது முதிர்ந்த கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும். அதாவது இலைகள் பச்சையாக, குறைந்தது 6 இலைகள் உடைய கன்றுகளை தேர்வு செய்து நடவேண்டும். கன்றுகளில் அழுகள், வாடல், நோய் தாக்கம் இல்லாமல் இருக்க வேண்டும். பூச்சி தாக்கமும் இல்லாமல் இருக்க வேண்டும். நடவு செய்கூடிய பகுதிக்கு ஏற்ற கன்றாகவும், தட்பவெப்ப நிலையை தாக்கி வளரக்கூடியதாக இருக்கவேண்டும்.
நிலம் தயாரித்தல்
வடிகால் வசதியுடைய மணல் கலந்த வண்டல் மண், மணற்பாங்கான பகுதிகள், கரிசல்மண் பகுதிகள் ஆகியவை தென்னை நடவு செய்ய ஏற்ற நிலம். நிலத்தை நன்கு உழுது சமப்படுத்தி நடவு செய்யும் ரகத்திற்கேற்றவாறு இடைவெளி விட்டு 90 செ.மீ அகலம், 90 செ.மீ நீளம் மற்றும் 90 செ.மீ ஆழம் உள்ள குழிகள் வெட்டி தென்னங்கன்றுகளை நடவு செய்யலாம்.
தென்னை பயிரிடும் பருவம்
தென்மேற்கு அல்லது வடகிழக்குப் பருவமழை ஆரம்பமாவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் தென்னங்கன்றுகளை நட வேண்டும். கோடை காலத்தில் நடவு செய்யக்கூடாது. ஜீன் - ஜீலை டிசம்பர் - ஜனவரி மாதங்களில் தென்னங் கன்று நடுவது ஏற்றது.
தென்னை நடுவதற்குரிய இடைவெளி
நெட்டை மற்றும் ஓட்டு வகை : 7.5 மீட்டர், குட்டை வகை மரங்களுக்கு 5.4 மீ;ட்டரும், வரப்புகளில் வரிசையாக நட வெய்தால் 6.5 மீட்டர் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.
தென்னங்கன்று நடும் முறை
3 அடி அகலம், 3 அடி நீளம் மற்றும் 3 அடி ஆழம் உள்ள குழி எடுத்து, அதில் லின்டேன் 10 சத தூளை தூவி எறும்புகளின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க வேண்டும். கன்று நடுவதற்கு முன் குழியில் ஓரு அடி ஆழத்திற்கு நன்கு மக்கிய தொழு உரம், சிறிதளவு உரித்த தென்னை நார் கழிவு, உயிர் இடுபொருட்கள், செம்மண் மற்றும் மணல் ஆகியவற்றை சமபங்கு கலந்து நிரப்ப வேண்டும். தென்னங்கன்று நடும்போது, அதன் வேர்களை வெட்டிவிட வேண்டும். பின் குழியின் நடுவில் இருக்குமாறு வைத்து குழியிலிருந்து ஏற்கனவே எடுத்த மண்ணை கொண்டே இறுக்கமாக கன்றைச் சுற்றி மூடிவிவேண்டும். கன்றுகளை சூரிய ஓளியில் இருந்து பாதுகாக்க அதன் பக்கவாட்டில் தென்னை ஓலை அல்லது பனை ஓலையை சாய்வாக வெய்யில் படாதவாறு நடவும்.
தென்னையில் நீர் நிர்வாகம்
கன்று நட்ட ஓரு வருடத்திற்கு ஓரு நாள் விட்டு ஓரு நாளும், இரண்டாம் வருடத்திலிருந்து காய் காய்க்கும் வரை இரண்டு வாரத்திற்கு ஓரு முறையும், பின்னர் 10 நாட்களுக்கு ஓரு முறையும் தண்ணீர்ப் பாய்ச்சுதல் அவசியம். கோடை மற்றும் மழையற்ற காலங்களில் மண்ணின் ஈரப்பதத்தை பொறுத்து நீர்ப் பாய்ச்சவும்;. தண்ணீர் வசதியுள்ள தென்னை விவசாயிகள் தென்னை மரத்தை சுற்றி நீர் பாய்ச்சுவதைக் காட்டிலும் தென்னை மரத்திலிருந்து 5 அடி தூரத்தில் மரத்தை சுற்றி வாய்க்கால் அமைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறு நீர் பாய்ச்சுவதனால் தென்னை மரத்திற்கு தேவையான சத்துக்களை வேர்கள் கிடைக்க செய்யும்.
Информация по комментариям в разработке