திருப்புகழ் - இருவினை அஞ்ச - திருவண்ணாமலை

Описание к видео திருப்புகழ் - இருவினை அஞ்ச - திருவண்ணாமலை

இருவினை யஞ்ச
-நல்வினை, தீவினை இரண்டுமே அஞ்சி ஒழிய,
மலவகை மங்க
-மலக் கூட்டங்கள் (மாசுகள்) மங்கி அழிய,
இருள்பிணி மங்க
-அஞ்ஞானமும், நோய்களும் அகல,
மயிலேறி
-நீ மயில் வாகனத்தில் ஏறிவந்து,
இனவருள் அன்பு மொழிய
-அருள் வாக்குகளும், அன்பான
மொழிகளும் கூற,
க டம்புவின் அதகமும் கொடு
-உன் கடப்பமலரின் உயிர்தரு
மருந்தாம் தேனைச்சுற்றி
அளிபாட
-வண்டுகள் ரீங்காரம் செய்து முரல,
கரிமுகன் எம்பி முருகனென
-யானைமுகன் கணபதி
`என் தம்பியே, முருகா` என்றழைக்க,
அண்டர் களிமலர் சிந்த
-தேவர்கள் மகிழ்ந்து மலர் மாரி பொழிய,
அடியேன்முன் கருணைபொழிந்து
-என் முன்னே கருணை
மிகக் காட்டி
முகமும் மலர்ந்து கடுகி
-மலர்ந்த முகத்தோடு வேகமாக
நடங்கொடு அருள்வாயே
-நடனம் செய்தவாறு வந்து அருள்
புரியவேண்டும்.
திரிபுர மங்க மதனுடல் மங்க
-திரிபுரம் அழியவும், மன்மதனின்
உடல் எரியவும்,
திகழ்நகை கொண்ட
-விளங்கும் புன்சிரிப்பைச் சிரித்தே எரித்த
விடையேறிச் சிவம்
-ரிஷப வாகனம் ஏறும் சிவபெருமான்
வெளி யங்கண்அருள் குடிகொண்டு
-பரவெளியில் திருவருளோடு
வீற்றிருந்து,
திகழந டஞ்செய்து
-விளங்க நடனம் செய்து,
எமையீண் அரசியிடங்கொள
-எம்மைப் பெற்ற தேவியை இடது
பாகத்தில் ஏற்றுக்கொண்டு,
மழுவுடை யெந்தை அமலன்
-மழு ஆயுதத்தை ஏந்திய எம் தந்தை
மாசற்றவன்
மகிழ்ந்த குருநாதா
-மகிழ்ச்சியடைந்த குருநாதனே,
அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை
-திருஅண்ணாமலைக்
குன்றிலே மகிழும் குறமங்கையின்
அமளிந லங்கொள் பெருமாளே.
-மலர்ப்படுக்கையிலே மனமகிழும்
பெருமாளே.
🦚🦚🦚

Комментарии

Информация по комментариям в разработке