வேலை வாய்ப்புகளை அள்ளி தரும் துணை மருத்துவ படிப்புகள்

Описание к видео வேலை வாய்ப்புகளை அள்ளி தரும் துணை மருத்துவ படிப்புகள்

இன்றைய கால கட்டத்தில் வேலை வாய்ப்புகள் அதிகம் வழங்கும் துறைகள் என்றால் அவை பொறியியல் மற்றும் மருத்துவ துறைகளாகும். இதில் குறைவான செலவு மற்றும் எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் வேலை கிடைக்கும் படிப்புகள் என்றால் அவை மருத்துவம் சார்ந்த படிப்புகளாகும். மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத மாணவர்களின் அடுத்த சாய்ஸ் இந்த துணை மருத்துவ படிப்புகளாகும்.
1. படிப்பு வகைகள்
படிக்கும் கால அளவு, கட்டணம், கிடைக்கும் சம்பளம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இவை மூன்று வகைப்படும்.

1.பட்ட படிப்புகள்
மூன்று முதல் நான்கு ஆண்டுகள் கொண்ட கீழ்கண்ட 17 படிப்புகள் மருத்துவ துறையுடன் சார்ந்த பட்ட படிப்புகளாகும்.
B.Pharm
B.P.T
B.ASLP
B.Sc Nursing
B.Sc Radiology and Imaging Technology
B.Sc Radio Therapy Technology
B.Sc Cardio-Pulmonary Perfusion Technology
B.Sc Medical Laboratory Technology
B.Sc Operation Theatre & Anaesthesia Technology
B.Sc Cardio Technology
B.Sc Critical Care Technology
B.Sc Dialysis Technology
B.Sc Physician Assistant
B.Sc Accident & Emergency Care Technology
B.Sc Respiratory Therapy
B.Optom
B.O.T

2. டிப்ளமா படிப்புகள்
இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் கொண்ட கீழ்கண்ட 8 படிப்புகள் மருத்துவ துறையுடன் சார்ந்த டிப்ளமோ படிப்புகளாகும்.
Dental Mechanic
Dental Hygienist
Medical Laboratory Technology
Radio Diagnosis Technology
Radio Therapy Technology
Optometry
Pharmacy
Medical Record Science

3. சான்றிதழ் படிப்புகள்
6 மாதம் முதல் ஓராண்டு கால அளவு கொண்ட கீழ்கண்ட 16 படிப்புகள் மருத்துவ துறையுடன் சார்ந்த சான்றிதழ் படிப்புகளாகும்.
Cardio Sonography Technician
ECG/Tread Mill Technician
Pump Technician
Cardiac Catheterisation Lab Technician
Emergency Care Technician
Respiratory Therapy Technician
Dialysis Technician
Anesthesia Technician
Theatre Technician
Orthopedic Technician
Audiometry Technician
Hearing Language and Speech Technician
Clinical, Therapeutic, Nutrition & Food Service Management Technician
E.E.G./E.M.G. Course Technician
Multi-Purpose Hospital Worker Course
Medical Record Technician
2. சேர்க்கை முறைகள்
அரசு கல்லூரிகள் மற்றும் அரசு பயிற்சி நிலையங்களில் உள்ள பட்டம், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் பயிற்சிக்கான சேர்க்கை இடங்கள் யாவும் +2 வில் மாணவர் பெற்ற மதிப்பெண் கட்ஆப் அடிப்படையில் சேர்க்கப் படுகின்றனர். ஆனால் பட்ட படிப்புகளுக்கு தனியாகவும், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு தனியாகவும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Комментарии

Информация по комментариям в разработке