கண்ணதாசன்-தன் இறுதிநாட்களைக் கணித்தவர்-பகுதி-1 - டாக்டர் கண்ணதாசன் இராமசுவாமி நேர்காணல்.

Описание к видео கண்ணதாசன்-தன் இறுதிநாட்களைக் கணித்தவர்-பகுதி-1 - டாக்டர் கண்ணதாசன் இராமசுவாமி நேர்காணல்.

   • கண்ணதாசன் - தன் மரணத்திற்கே ஒத்திகை ப...   கண்ணதாசன் - தன் மரணத்திற்கே ஒத்திகை பார்த்தவர் கவிஞரின் புதல்வர் டாக்டர் கண்ணதாசன் இராமசுவாமி (Interview Part_2)

   • கண்ணதாசன் - அனுபவத்தை பாடலாக எழுதியதா...   கண்ணதாசன் - அனுபவத்தை பாடலாக எழுதியதால் ஆண்டவனாக உயர்ந்தவர் - கவிஞர் முத்துலிங்கம்.

   • கண்ணதாசன் - 1000 வருடங்களுக்கு ஒரு மு...   கண்ணதாசன் - 1000 வருடங்களுக்கு ஒரு முறை தோன்றக்கூடிய அபூர்வமான கவிஞர் கவிஞர் முத்துலிங்கம்

கவியரசரின் புதல்வர் தனது தந்தையும் மகா கவியுமான கண்ணதாசனின் நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கின்றார். கவிஞர் இயல்பிலேயே மிக இரக்க சிந்தனையுடைவர். குழந்தை போல மனதைக்கொண்டவர். தனது இளையமகள் திருணம் நல்லபடியாக முடியவேண்டும் என்று திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டிக்கொண்டு, உண்டியலில் பணத்தை போடுவதற்கு பதிலாக கவிதை எழுதிப்போட்டவர். பொதுவாக கவிஞர் மது அருந்திவிட்டுத்தான் பாடல் எழுதுவார் என்ற ஒரு கருத்து உண்டு. அதைப் பற்றியும் கவிஞரின் புதல்வர் இந்தநேர்காணலில் பதில் அளிக்கின்றார். கவிஞர் 250புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். ஆனால் அவர் எழுத நினைத்து முடியாமல் போனது தமிழ் ஈழத்திற்கான கவிதை நூல். தனது இறப்பை கூட முன்பே அறிந்தவராக இருந்தார் கண்ணதாசன், அவரது உடன் பிறந்த அண்ணன் தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ். 54 வயதில் மறைந்தார்.கவிஞரின் உடன் பிறவா ஆண்ணன் தயாரிப்பாளர் சின்னப்பாதேவரும் அவரது 54வது வயதில் காலமானார். இதைக் கண்டு தானும் 54ல் காலமாகக்கூடும் என்று சொன்னது மாதிரியே தனது 54 வயதில் அமெரிக்காவில் சிக்காகோவில் காலமானார். என்று தனது தந்தையின் நினைவலைகளை நம்முடன் பகிர்ந்து கொள்கின்றார் டாக்டர் கண்ணதாசன் இராமசுவாமி.
#kannadasan #Chettinadtv #Nattukottainagarathartv #Drkannadasanramaswamy #kannadasansongs

Комментарии

Информация по комментариям в разработке