காதலாகிக் கசிந்துகண்ணீர் மல்கி

Описание к видео காதலாகிக் கசிந்துகண்ணீர் மல்கி

ஞானசம்பந்தர் `இம்மண விழாக்காண வந்தோர் அனைவரும் இச் சோதியுட் புகுமின்` எனக் கூறி `காதலாகி` எனத் தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகம் அருளி நின்றார். திருநீல நக்கர் முருக நாயனார் சிவபாத இருதயர் நம்பாண்டார் நம்பி திருநீலகண்டப் பெரும்பாணர் முதலானோர் தத்தம் துணைவியாருடன் சிவசோதியுட் புகுந்தார்கள். ஆளுடைய பிள்ளையாரைத் தொடர்ந்து வந்த அடியவர் பரிசனங்கள் அருந்தவ முனிவர்கள் முதலிய அனைவரும் சிவசோதியுட் புகுந்த பின் திருஞானசம்பந்தர் தம் காதலியாரைக் கைப்பிடித்து இறைவனது எழில்வளர் சோதியை வலம் வந்து அதனுள்ளே புகுந்து பெருமா னோடு ஒன்றி உடனானார்.

``காதலியைக் கைப்பற்றிக் கொண்டுவலம் செய்தருளித்

தீதகற்ற வந்தருளும் திருஞான சம்பந்தர்

நாதனெழில் வளர்சோதி நண்ணியதன் உட்புகுவார்

போதநிலை முடிந்தவழிப் புக்கொன்றி உடனானார்.``

அச்சோதி மறைய பெருமணக்கோயில் முன்போலவே அமைந்தது. அனைவர்க்கும் சிவலோகம் வழங்கிய பெருமானை அன்பர்கள் சிவலோகத்தியாகர் எனப் போற்றினர்.

Комментарии

Информация по комментариям в разработке