குதம்பைச் சித்தரின் வாழ்க்கை வரலாறு Kuthambai Siddhar History

Описание к видео குதம்பைச் சித்தரின் வாழ்க்கை வரலாறு Kuthambai Siddhar History

Business Email: [email protected]
Thanks for your support

குதம்பைச் சித்தர் பாடல்
குதம்பை சித்தர், மக்களுக்கு சொல்லும் கருத்தை குதம்பை என்ற ஒரு பெண்ணுக்கு சொல்வது போல் தம் பாடலில் சொல்கிறார். குதம்பை சித்தர், சித்தர்களின் பன்பிற்க்கு சற்றும் மாறாதவர் என்று தான் சொல்ல வேண்டும். 32 பாடல்களை கொண்ட இவரது அனைத்து பாடல்களும் பாட எளியவை.
வெட்ட வெளிதன்னை மெய்யென்று
இருப்போர்க்குப் பட்டயம் ஏதுக்கடி -
குதம்பாய் பட்டயம் ஏதுக்கடி ? 1
கண்டதை மட்டும் உண்மை என்று இருப்போர்க்கு அத்தாட்சி எதற்க்கு? இதன் மூலம் கண்ணால் காண்பதும் பொய், காதல் கேட்பதும் பொய் என்கிறார் மேலும் உண்மையை அறியும் வாய்ப்புகள் இருந்தாலும் கேட்பதில்லை..
மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ்
ஞானிக்குக் கற்பங்கள் ஏதுக்கடி -
குதம்பாய் கற்பங்கள் ஏதுக்கடி ? 2
இவ்வுடலால் பெற்ற பொருள் கொண்டு இன்பமுரும் மனிதருக்கு கேட்டதை தரும் கற்பகங்கள் எதற்க்கு?
காணாமற் கண்டு கருத்தோடு இருப்போர்க்கு
வீணாசை ஏதுக்கடி - குதம்பாய்
வீணாசை ஏதுக்கடி ? 3
காண்பதை கூட காணமல் கருத்தில் சிக்கியிருப்போர்க்கு வீணான ஆசை எதற்க்கு,அது (அவ்வுடலின் உயிர்) இருந்தென்ன போயென்ன?
வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்
சஞ்சலம் ஏதுக்கடி - குதம்பாய்
சஞ்சலம் ஏதுக்கடி ? 4
வஞ்சகமில்லாத வழியான சிவபதத்தை கண்டோர்க்கு சஞ்சலம் தான் சஞ்சலத்தில் விழும்!
ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு
வாதாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
வாதாட்டம் ஏதுக்கடி ? 5

Комментарии

Информация по комментариям в разработке