ஈசன் எழுந்தருளப்பெறிலே | திருப்படையாட்சி-49 | திருவாசகம் | வாதவூரடிகள் | Rajhesh Vaidhya Veenai

Описание к видео ஈசன் எழுந்தருளப்பெறிலே | திருப்படையாட்சி-49 | திருவாசகம் | வாதவூரடிகள் | Rajhesh Vaidhya Veenai

திருச்சிற்றம்பலம்

pls watch this introduction video-
அறிமுகம்
   • எழுந்தருளப்பெறிலே அறிமுகம் | #Thiruva...  

எல்லாம் வல்ல ஈசன் அருளால் சிவலோக ஞானாலயம் மீடியா பிளஸ் நிறுவனம் இணைந்து வழங்கும் "ஈசன் எழுந்தருளப்பெறிலே" திருவாசகத்தின் வைராக்கிய பக்தியை உணர்த்தும்
திருப்படையாட்சி!

தவத்திரு #வாதவூரடிகளின்# தெய்வீக்குரலில்
அன்பகம் #பிரவீஷ்ஆனந்த்# இசையமைப்பில்
திரு. #ராஜாவெங்கய்யாவின்# இயக்கத்தில்
03-04-2021 அன்று வெளியான காணொளி.

#கோவில்அடிமைநிறுத்து
#rajheshvaidhya

"இனி தெய்வங்களும் கோவில்களும் பக்தர்களுக்கே" என எந்த இடையூறுமின்றி கோவில் விழாக்களும் தெய்வ வழிபாடுகளும் பக்தர்களின் விருப்பம் போல் நடைபெற வேண்டி ஈசனிடம் வைக்கும் கூட்டுப் பிராத்தனையே "ஈசன் எழுந்தருளப்பெறிலே"

பாடல் எண் : 1
கண்க ளிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
    காரிகை யார்கள்தம் வாழ்வில்என் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடு மாறு மறந்திடும் ஆகாதே
    மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடு மாகாதே
    பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள் பாடுது மாகாதே
விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படு மாகாதே
    மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படு மாயிடிலே 

பாடல் எண் : 4

என்னணி யார்முலை ஆகம் அளைந்துடன் இன்புறு மாகாதே
எல்லையில் மாக்கரு ணைக்கடல் இன்றினி தாடுது மாகாதே
நன்மணி நாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவ தாகாதே
நாதன் அணித்திரு நீற்றினை நித்தலும் நண்ணுவ தாகாதே
மன்னிய அன்பரில் என்பணி முந்துற வைகுவ தாகாதே
மாமறை யும்அறி யாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே
இன்னியற் செங்கழு நீர்மலர் என்தலை எய்துவ தாகாதே
என்னை யுடைப்பெரு மான்அருள் ஈசன் எழுந்தரு ளப்பெறிலே. 

பாடல் எண் : 6

பொன்னிய லுந்திரு மேனிவெண் ணீறு பொலிந்திடு மாகாதே
பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடு மாகாதே
மின்னியல் நுண்ணிடை யார்கள் கருத்து வெளிப்படு மாகாதே
வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடு மாகாதே
தன்னடி யார்அடி என்தலை மீது தழைப்பன ஆகாதே
தானடி யோம்உட னேஉய வந்து தலைப்படு மாகாதே
இன்னியம் எங்கும் நிறைந்தினி தாக இயம்பிடு மாகாதே
என்னைமுன் ஆளுடை ஈசன்என் அத்தன் எழுந்தரு ளப்பெறிலே. 

பாடல் எண் : 8

சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன ஆகாதே
சாதி விடாத குணங்கள் நம்மோடு சலித்திடு மாகாதே
அங்கிது நன்றிது நன்றெனு மாயை அடங்கிடு மாகாதே
ஆசைஎ லாம்அடி யாரடி யோம்எனும் அத்தனை யாகாதே
செங்கயல் ஒண்கண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே
சீரடி யார்கள் சிவாநு பவங்கள் தெரிந்திடு மாகாதே
எங்கும் நிறைந்தமு தூறு பரஞ்சுடர் எய்துவ தாகாதே
ஈறறி யாமறை யோன்எனை ஆள எழுந்தரு ளப்பெறிலே!

Комментарии

Информация по комментариям в разработке