01.Naishkarmya Siddhi [ நைஷ்கர்ம்ய சித்தி ]

Описание к видео 01.Naishkarmya Siddhi [ நைஷ்கர்ம்ய சித்தி ]

எல்லாவித கர்மாக்களையும் கடந்து மனிதன் மகத்தான நிறைநிலை மனிதனாக மாற வேண்டுமாயின், அரிதான மனிதப்பிறவியைக் கொண்டு, பல்வேறு பிறவிகளுக்குக் காரணமான கர்ம பந்தங்களில் இருந்து விடுபட்டு, பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்கான ஒரே வழி ஆத்ம ஞானம் அடைவது மட்டுமே.

அதற்கான அரிதான உயரிய வழியை உத்தம ஞானிகள் உபதேசமாகக் கொடுத்த பல்வேறு நூல்களின் வரிசையில் இப்போது நாம் பார்க்க இருக்கின்ற ஒரு அருமையான நூல்தான் சுரேஷ்வராச்சாரியர் எழுதிய “நைஷ்கர்ம்ய சித்தி” என்ற இந்த நூலாகும்.

நைஷ்கர்ம்ய சித்தி என்றால், செயலற்ற தன்மையில் முழுமையை உணர்தல் என்று கூறலாம். அதாவது, கர்மம் என்றால் செயல். நைஷ்கர்மம் என்றால், செயலற்றது என்றும், சித்தி என்பது கைக்கூடுதல் என்றும் பார்க்கப்படுகின்றது. அந்த வகையிலே செயலற்ற தன்மையில் நம் முழுமை கைகூடுதல் என்பதாக அறியலாம்.

இந்த நூலின் தலைப்பான நைஷ்கர்ம்ய சித்தி என்பதன் பொருள் ஆத்ம ஸ்வரூபத்தை அடைதல் என்பதாகும். அதாவது தன்னுடைய இயல்பான ஸ்வரூபத்தை அடைதலாகும்.

ஸ்ரீ சுரேஸ்வராசார்யர்

பகவான் ஸ்ரீ ஆதிசங்கரரின் சீடர்களில் மிகவும் படித்த, பாண்டித்யம் கொண்ட அறிஞரும் வயது முதிர்ந்தவருமாய் விளங்கியவர் ஸ்ரீ சுரேஷ்வராசார்யர்.

சுரேஷ்வராச்சாரியரை “வார்த்திககாரர்” என்று கூறுவர். காரணம், “பிருகதாரண்யக பாஷ்ய வார்த்திகம்”, “தைத்திரீய பாஷ்ய வார்த்திகம்” என்ற நூற்களை இயற்றினார். வார்த்திகம் என்பது சூத்திரங்களுக்கான விளக்க உரை ஆகும்.

நைஷ்கர்ம்ய சித்தி எனும் இந்த நூலும் அவரால் இயற்றப்பட்டது. இந்த நைஷ்கர்ம்ய சித்தி எனும் நூல், நான்கு அத்தியாயங்களில் மொத்தம் 422 சூத்திரங்களைக் கொண்டது.

இங்கு அத்தனை சூத்திரங்களையும் ஒவ்வொன்றாகப் பார்க்கப்போவது கிடையாது. அதற்கான பொறுமையும், காலமும் இன்றைய சூழ்நிலையில் யாருக்கும் கிடையாது. ஆகவே, இந்த நைஷ்கம்ய சித்தி எனும் நூலின் ஒட்டுமொத்த கருத்துக்களை எளிமையான உரை நடையில் எளிதாகப் புரிந்துக்கொள்ள முயற்சிக்கலாம்.

‘ஆத்மாவை அடைவதைத் தன் லட்சியமாகக் கொண்டு ஞானமார்க்கத்தில் ஈடுபடுகின்ற ஒவ்வொரு ஆத்ம சாதகர்களும் நைஷ்கர்ம்ய சித்தி எனப்படும், செயல் ஒழிந்த நிலையில் மட்டும்தான் பிரம்ம நிலையை அடைகின்றார்கள்’.

Ignore This:

#NaishkarmyaSiddhi #AdvaitaVedanta #NonDuality #SpiritualAwakening #Sureshvara #VedantaPhilosophy #SelfRealization #KarmaYoga #Brahman #Moksha #VedicWisdom #InnerPeace #Consciousness #SpiritualJourney #selfawareness

Naishkarmya Siddhi, Advaita Vedanta, Sureshvara teachings, non-duality philosophy, self-realization in Vedanta, karma yoga and actionlessness, Brahman realization, moksha in Vedanta, Vedic wisdom, spiritual liberation, Naishkarmya meditation techniques, transcending karma, philosophy of non-dualism, Vedantic scriptures, inner peace through self-awareness.

Комментарии

Информация по комментариям в разработке